

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Manager, Junior Executive) உள்ளிட்ட 389 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), பல்வேறு துறைகளில் மேலாளர்கள் மற்றும் இளநிலை நிர்வாகிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பில் சிவில், எலெக்ட்ரிக்கல், நிதி, தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சட்டம், தீயணைப்புத் துறை, செயல்பாடுகள் (operations), வணிகம், பெருநிறுவன தொடர்பியல் (corporate communications) மற்றும் பிற துறைகளில் உள்ள 389 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் மேலாளர் பதவிக்கு 260 காலியிடங்கள், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு 129 காலியிடங்கள் என மொத்தம் 389 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு (வேலைவாய்ப்பு செய்தி) வெளியாகியுள்ளது.
இதற்கான ஆள்சேர்ப்பு முறை கணினி வழி தேர்வுகள் மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் :
அதில், மேலாளர் (பொறியியல்-சிவில்) / Manager (Engineering-Civil): 145
மேலாளர் (பொறியியல்-மின்சாரம்)/(Engineering-Electrical): 16
மேலாளர் (நிதி)/(Finance): 34
மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)/(Information Technology): 5
மேலாளர் (கட்டிடக்கலை)/(Architecture): 4
மேலாளர் (சட்டம்)/(Law): 2
மேலாளர் (தீயணைப்பு சேவைகள்)/(Fire Services): 14
மேலாளர் (செயல்பாடுகள்)/(Operations): 28
மேலாளர் (வணிகம்)/(Commercial): 9
மேலாளர் (நிறுவனத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை சேவைகள்)/(Corporate Planning & Management Services): 1
மேலாளர் (நிறுவனத் தொடர்புகள்)/(Corporate Communications): 2
இளநிலை நிர்வாகி (நிதி)/(Finance): 36
இளநிலை நிர்வாகி (சட்டம்)/(Law): 6
இளநிலை நிர்வாகி (செயல்பாடுகள்)/(Operations): 79
இளநிலை நிர்வாகி (நில அளவை மற்றும் வரைபடவியல்)/(Survey & Cartography): 8
வயது வரம்பு :
* மேலாளர் பணிக்கு, 2026 செப்டம்பர் 7-ம்தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* இளநிலை நிர்வாகி பணிக்கு, 7 செப்டம்பர் 2026 அன்று அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் அரசு விதிகளின்படி தகுதியான பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். இதில் பட்டியல் சாதியினர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC - Non-Creamy Layer) 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு பெறலாம்.
துறைகள், கல்வித்தகுதி, பணி அனுபவம் :
* மேலாளர் பதவிகளுக்கு, துறையைப் பொறுத்து, தொடர்புடைய இளங்கலை அல்லது முதுகலைப் பட்டத்துடன் மூன்று வருட பணி அனுபவமும் தேவைப்படுகிறது.
* ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு முன் பணி அனுபவம் தேவையில்லை என்பதால், புதிதாக பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* B.E., B.Tech, B.Arch, LLB, MBA, CFA, CA உள்ளிட்ட தொடர்புடைய கல்வித் தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்குள், அனைத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவத் தேவைகளையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பளம் :
* மேலாளர் பணிக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1.80 லட்சம் வரையிலும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரையிலும் சம்பளம் வழங்கப்படும்.
* மேலாளர்களுக்கான தோராயமான ஆண்டு மொத்த சம்பளம் (CTC) ரூ. 21 லட்சமாகவும், இளநிலை நிர்வாகிகளுக்கானது ரூ. 14 லட்சமாகவும் உள்ளது.
தேர்வு முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலாளர் பணிக்கு நேர்காணலும் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் செப்டம்பர் 7-ம்தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை கவனமாகப் படித்து, அனைத்து விவரங்களும் ஆவணங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.