உங்கள் பணம் இருமடங்காக வேண்டுமா? இந்திய அரசின் டாப் 9 முதலீட்டுத் திட்டங்கள்!
பணம் சேமிப்பது என்பது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான முதல் படியாகும். பங்குச் சந்தை போன்ற ஆபத்தான முதலீடுகளில் ஈடுபட தயங்குபவர்களுக்காகவே இந்திய அரசு பாதுகாப்பான, அதிக வருமானம் தரும் பல சிறு சேமிப்புத் திட்டங்களை( investment schemes) வழங்குகிறது. இந்தப் பதிவில், அதிக வட்டி விகிதம் மற்றும் வரிச் சலுகைகளுடன் கூடிய 9 சிறந்த அரசு சேமிப்புத் திட்டங்களைப் (top 9 investment schemes) பற்றி பார்ப்போம்.
1. பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) (PPF):
இது 7.1% வட்டியுடன் கூடிய 15 வருடத்திற்கான நீண்டகால சேமிப்புத் திட்டம். இதில் முதலீடு செய்யப்படும் பணம், வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் வரி விலக்கு பெறுகிறது. ஓய்வூதியத்திற்காக பணத்தைச் சேர்க்க நினைப்பவர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் இது சிறந்த திட்டம்.
2. சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) (SSY):
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் இது.
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர்கள் கணக்கைத் தொடங்கலாம். இது 21 வருட முதிர்வு காலம் கொண்டது. 8.2% வட்டி விகிதத்துடன், கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
3. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme) (SCSS):
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டம், ஓய்வூதியப் பணத்துக்கு நிலையான, அதிக வருமானத்தை வழங்குகிறது. இது 8.2% வட்டியுடன் கூடிய ஐந்து வருட முதிர்வு காலத்தைக் கொண்டது.
4. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate) (NSC):
ஐந்து வருட நிலையான வருமான முதலீட்டுத் திட்டம் இது. ஒவ்வொரு வருடமும் வட்டி சேர்க்கப்படும். இதில் முதலீடு செய்யப்படும் ₹1.5 லட்சம் வரை 80C பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. இந்த திட்டத்தின் வட்டிவீதம் 7.7% ஆகும்.
5. கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) (KVP):
இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீடு, சுமார் 115 மாதங்களில் (9 ஆண்டுகள், 7 மாதங்கள்) 7.5% வட்டிவீதத்துடன் இரட்டிப்பாகும். இதில் முதலீட்டிற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
6. அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme) (POMIS):
மாதாந்திர வருமானத்தை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. இதில் ₹9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 7.4% வட்டியுடன் கூட்டுக் கணக்கில் ₹15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
7. தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) (NPS):
இது 9% வட்டிவீதம் (சந்தையின் அடிப்படையில் மாறும்) கொண்டது. இது ஒரு தன்னார்வ ஓய்வூதியத் திட்டம். ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.
8. மஹிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (Mahila Samman Savings Certificate) (MSSC):
பெண்களுக்காகவே தொடங்கப்பட்ட இத்திட்டம், 7.5% வட்டியுடன் கூடிய இரண்டு வருட கால முதலீட்டுத் திட்டமாகும். இதில் ₹2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
9. அஞ்சல் அலுவலக மூன்று வருட நிலையான வைப்புத் திட்டம் (Post Office Three-Year Fixed Deposit Scheme):
இது 7.1% வட்டியுடன் கூடிய மூன்று வருட லாக்-இன் காலத்துடன் கூடிய அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத் திட்டம். இது ஒரு குறுகியகால முதலீடாகக் கருதப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் உங்கள் தேவைகளுக்கேற்ப பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை உறுதி செய்கின்றன. எதிர்காலத்தைப் பற்றி யோசித்து, உங்கள் பணத்தை சரியான திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்.