
இந்திய இளைஞர்களிடையே ஸ்போர்ஸ் பைக்குகளுக்கான வரவேற்பு எப்போதும் உண்டு. அதிரடியான தோற்றம், சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் சுவாரசியமான ஓட்டும் அனுபவத்தை வழங்கும் பைக்குகளை (ஸ்போர்ட்ஸ் பைக்குகள்) வாங்க விருப்புபவர்களுக்கு ரூ.2 லட்சத்திற்குள் (ஷோரூம் விலை) பல சிறந்த தேர்வுகள் உள்ளன.
இந்த பட்டியலில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்று யமஹா ஆர்15 வி4. 155 சிசி. லிக்விட்-கூல்டு என்ஜின், விவிஏ (VVA) தொழில்நுட்பம், டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச், குவிக் ஷிப்டர், டூயல்-சேனல் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் எல்இடி விளக்குகள் போன்ற அம்சங்களை கொண்ட பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக்காகும். மோட்டோஜிபி பைக்குகளை நினைவூட்டும் வடிவமைப்பு மற்றும் சிறந்த ஹேண்ட்லிங் திறன் காரணமாக, டிராக் ரைடிங் அனுபவத்தை குறைந்த விலையில் பெற விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.1.73 லட்சம் முதல் ரூ.2.12 லட்சம் வரை மாறுபடுகிறது. சென்னையில் இதன் தொடக்க விலை சுமார் ரூ.1.88 லட்சமாகும்.
பஜாஜ் பல்சர் என்.எஸ்.200 (Bajaj Pulsar NS200) என்பது சக்திவாய்ந்த 199.5 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் 24 ஹெச்.பி சக்தி வழங்கும், 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் நவீன LED விளக்குகளுடன் கூடிய ஒரு புகழ்பெற்ற ஸ்ட்ரீட்-ஃபைட்டர் மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த விலை பிரிவில் அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளில் ஒன்றாகும். யூஎஸ்டி போர்க், டிஜிட்டல் மீட்டர், புளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. சக்தி மற்றும் ஸ்ட்ரீட் பைட்டர் தோற்றத்தை விரும்புபவர்களுக்கு இது ஏற்ற மாடல்.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.36 லட்சம் முதல் ரூ.1.46 லட்சம் வரை. சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ1,68,958 ஆகும்.
249 சிசி என்ஜினில் 29.5 ஹெச்.பி. சக்தி வழங்கும் இந்த பைக், பட்டியலில் அதிக சக்திவாய்ந்த ஸ்போர்ஸ் பைக் மாடலாக உள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச், யூஎஸ்டி போர்க், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 249.03 சிசி லிக்விட்-கூல்டு எஞ்சின், 30 பிஎஸ் ஆற்றல் மற்றும் 25 என்எம் டார்க்கைக் கொண்டுள்ளது. 9,250 rpm-ல் 30 PS ஆற்றலையும், 7,250 rpm-ல் 25 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. லிட்டருக்கு சுமார் 36 முதல் 37 கி.மீ வரை மைலேஜ் தரும். 150 சிசி அல்லது 160 சிசி பைக்குகளில் இருந்து மேம்பட்ட திறன் கொண்ட மாடலுக்கு மாற விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 1.66 லட்சம் முதல் ரூ. 1.73 லட்சம் வரை தொடங்குகிறது.
மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த பைக்காக அறியப்படும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4சி, ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளை வழங்குகிறது. 'ஸ்போர்ட்' (Sport) மோடில், இந்த இன்ஜின் 9000rpm-இல் 20.82PS ஆற்றலையும், 7250rpm-இல் 17.25Nm அதிகபட்ச டார்க் (torque) திறனையும் வெளிப்படுத்துகிறது. 197.75 சிசி என்ஜின், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ், முழு எல்இடி விளக்குகள் மற்றும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் புளூடூத் வசதியுடன் வருகிறது. இந்த இன்ஜின் வேகமான மற்றும் துடிப்பான செயல்பாட்டைக் கொண்டிருப்பதோடு, நகரப் போக்குவரத்து நெரிசலில் சிறப்பாகச் செயல்படுகிறது. தொழில்நுட்ப அம்சங்களை அதிகம் விரும்பும் ரைடர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.1.37 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
சுசூகி ஜிக்ஸர் எஸ் எப் 250 என்பது இந்தியாவில் கிடைக்கும் ஒரு புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் ஆகும். முழு பேரிங் வடிவமைப்புடன் கிடைக்கும் இந்த பைக், 249சிசி ஆயில்-கூல்டு என்ஜினில் 26.1 ஹெச்.பி சக்தி வழங்குகிறது. இது 6-கியர் டிரான்ஸ்மிஷன், இரு சக்கரங்களிலும் ஏபிஎஸ் (Dual Channel ABS) வசதி மற்றும் புளூடூத் கனெக்டிவிட்டி போன்ற நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறந்த ஏரோடைனமிக் வடிவமைப்பு, டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற வசதிகளால் நீண்ட தூர பயணங்களை விரும்புபவர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இதன் ஆரம்ப விலை சுமார் ரூ. 1.90 லட்சம் முதல் ரூ 1.98 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.
கேடிஎம் ஆர்சி 200, பந்தயப் பாணி ஓட்டுதல் அனுபவத்திற்கு ஏற்றது. இது 199.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூல்-கூல்டு எஞ்சின் (25 PS பவர் மற்றும் 19.2 Nm டார்க்கை வழங்குகிறது) மற்றும் சூப்பர்மோட்டோ மோட் கொண்ட டூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS), 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டிஆர்எல் (DRLs) விளக்குகள் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
கேடிஎம் ஆர்சி 200 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் தோராயமாக ரூ. 2 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
- செயல்திறன், தொழில்நுட்ப வசதிகள், ஸ்டைல் மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டால், ரூ.2 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளாக இந்த ஐந்து மாடல்களும் திகழ்கின்றன.
ஒவ்வொரு பைக்கும் வெவ்வேறு வகையான ரைடர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.