மணிக்கு 82 கி.மீ வேகம்... அதிவேக சார்ஜிங்... புதிய பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ‘TVS iQube S’!

டிவிஎஸ் நிறுவனம் தனது ஐக்யூப் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புதிய 4.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக்குடன் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
TVS iQube S
TVS iQube Simage credit-autocarindia.com
Updated on

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor) உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். பைக், ஸ்கூட்டர், மொபெட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை (EVs) தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் 1911-ம் ஆண்டு டி.வி.சுந்தரம் ஐயங்காரால் மதுரையில் தொடங்கப்பட்டது.

தற்போது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் ஆட்டோமொபைல், நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது வர்த்தகத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது. மேலும் இருசக்கர மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை விரிவுபடுத்த இந்நிறுவனம் ரூ.3500 கோடி வரை முதலீடு செய்துவருகிறது.

இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐக்யூப் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புதிய 4.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக்குடன் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.முன்பு 3.5kva பேட்டரியுடன் விற்பனையில் இருந்த இந்த மாடல் தற்போது அதிக ரேஞ்ச் வழங்கும் வகையில் அப்பேட் செய்யப்பட்டிருக்கிறது.

பெரிய பேட்டரி பேக், மேம்பட்ட பயண வரம்பு மற்றும் அதிகபட்ச வேகம் ஆகியவற்றை வழங்குகிறது. டிவிஎஸ் ஐக்யூப் எஸ் (TVS iQube S) மாடல் சார்ஜில் 175 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
3.5 மணி நேர சார்ஜ்... 179 கி.மீ. ரேஞ்ச்! தமிழகத்தைக் கலக்கும் டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் மின்சார ஆட்டோ
TVS iQube S

அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 175 கி.மீ வரை பயணிக்கலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.37 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொக்கானிக்கலாக பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதில் இடம்பெறும் எலெட்ரிக் மோட்டர் அதிகபட்சமாக 4.4 கிலோவாட்ஸ் பவரை வெளிப்படுத்தும். மணிக்கு 82 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர், 0-40 கிமீ வேகத்தை வெறும் 4.3 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது.

புதிய பெரிய பேட்டரி காரணமாக ஸ்கூட்டரின் எடை 128.8 கிலோவாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது ஐக்யூப் எஸ்.டி மாடலை விட சற்று இலகுவானதாகவே உள்ளது. மேலும் இந்த பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சுமார் 4 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய 'மேக்னிஃபிசென்ஸ் பர்ப்பிள் பெய்ஜ்' மற்றும் 'ஹார்லிகுவின் ப்ளூ பெய்ஜ்' என இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெய்ஜ் வண்ணமானது ஸ்கூட்டருக்கு ஒரு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

இது 175 கி.மீ வரையிலான அதிகபட்ச ரேஞ்ச் (Range) மற்றும் 32 லிட்டர் பெரிய இருக்கை சேமிப்பு (Under-seat storage) வசதியைக் கொண்டுள்ளது. 7 அங்குல (TFT) வண்ண டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (SMS) எச்சரிக்கைகளை நிர்வகிக்கலாம். 118-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களை இதில் பெறலாம்.

வாய்ஸ் அசிஸ்ட் (Voice Assist), ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் (Hill Hold Control) மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் அதே ஃபிரேம், வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க், இரட்டைப் பின்புற ஷாக் அப்சார்பர்கள், முன்புற டிஸ்க் பிரேக் மற்றும் 12-இன்ச் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதில் குரல் உதவி, பேட்டரி தீரும் தூரம் மற்றும் ரிமோட் சார்ஜ் நிலை ஆகியவற்றைக் காட்டும் வசதிகளும் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 32-லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய சேமிப்பு இடமும், ஒரு USB சார்ஜரும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஜூபிடர் 125 ஸ்கூட்டர் - டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்!
TVS iQube S

தற்போது டிவிஎஸ் ஐக்யூப் வரிசையில், ஸ்டாண்டர்ட் ஐக்யூப், புதிய ஐக்யூப் எஸ் மற்றும் டாப்-எண்ட் ஐக்யூப் எஸ்.டி. என மூன்று முக்கிய வேரியண்ட்கள் விற்பனையில் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com