யு.பி.ஐ. சேவை ஏப்ரல் 1-ம்தேதி முதல் யாருக்கொல்லாம் செயல்பாடது தெரியுமா?

ஏப்ரல் 1-ம்தேதி முதல் சில பயனர்களின் யுபிஐ, ஐடிகளை தேசிய பணம் செலுத்தும் நிறுவனம்(என்.பி.சி.ஐ) ரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

UPI transaction
UPI transaction
Published on

யுபிஐ (UPI) என்பது, இந்தியாவில் நிகழ்நேர மொபைல் பேமெண்ட் அமைப்பாகும். 2016-ல் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வடிவமைத்து தொடங்கப்பட்டது. இது வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடி பணப் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. யுபிஐ ஆனது 24x7x365 என்ற வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது.

விரைவான மற்றும் எளிதான பணப் பரிமாற்றங்கள், பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது, டிஜிட்டல் நிதி சேர்க்கைக்கு பங்களிப்பது என யுபிஐ பல்வேறு சேவைகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுக்கு 4 யு.பி.ஐ. ஐடிகள் வரை சேர்க்கலாம். அத்துடன் எப்போது வேண்டுமானாலும் அவற்றை அகற்றலாம். ஒரே பேங்க் அக்கவுண்ட்டுக்கு நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட யு.பி.ஐ. ஐடிகளையும் வைத்துக்கொள்ளலாம்.

UPI எண் என்பது ஒரு தனித்துவமான 8, 9 அல்லது 10 இலக்க எண்ணாகும், இது எந்தவொரு பேமண்ட் செயலியிலும் UPI பேமண்ட்டைப் பெறுவதற்கு பேமண்ட் முகவரியாகப் பயன்படுத்தலாம்.

பேமண்ட் செயலிகளில் பதிவு செய்ய நீங்கள் பயன்படுத்திய மொபைல் எண் உங்களின் 10 இலக்க UPI எண்ணாக இருக்கும்.

பயனர்கள் தங்கள் மொபைல் போன் மூலம் யுபிஐ செயலிகள் (UPI Apps) மூலம் பணப் பரிமாற்றங்களைச் செய்யலாம். யுபிஐ ஐடி (UPI ID) என்பது, பயனரின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான முகவரி ஆகும். அதாவது பணம் அனுப்புபவர், பணம் பெறுபவரின் UPI ஐடியை பயன்படுத்தி பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். யுபிஐ- ஐ ஆதரிக்கும் ஒரு பேமெண்ட் செயலியை (Google Pay, PhonePe, Paytm) பதிவிறக்கம் செய்து, உங்கள் வங்கிக் கணக்கை அதனுடன் இணைக்க வேண்டும். பின்னர் உங்கள் யுபிஐ ஐடியை (UPI ID) உருவாக்க வேண்டும். பிறகு, நீங்கள் யுபிஐ ஐ பயன்படுத்தி பணப் பரிமாற்றங்களைச் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
டிசம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யுங்கள்:பிரதமர் மோடி

UPI transaction

இந்த நடைமுறை மிகவும் எளிதாக இருப்பதால் தற்போது அனைவருமே யுபிஐ மூலமாகவே பணபரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி கையில் பணத்தை வைத்திருக்க வேண்டியதில்லை, பணம்தொலைந்து விடும் என்று பயப்படவும் தேவையில்லை, போனில் யுபிஐ சேவை மட்டும் இருந்தால் போதும். இந்தியாவில் பணப் பரிவர்த்தனைகளைக் குறைத்து டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிப்பதை UPI நோக்கமாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ச்சியான கட்டணங்களைச் செய்வதற்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தளத்தை வழங்குகிறது, பாதுகாப்பையும் பயன்பாட்டின் எளிமையையும் உறுதி செய்கிறது. யுபிஐ மூலம் சில நொடிகளில் உடனடி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
யுபிஐ மூலம் கடன்: நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது ரிசர்வ் வங்கி!

UPI transaction

இந்நிலையில் வரும் ஏப்ரல்1-ம்தேதி முதல், செயல்படாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ, ஐடிகளை தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் (என்.பி.சி.ஐ) ரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அத்தகைய செயல்படாத செல்போன் எண்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள், கூகுள் போ, பேடிஎம், போன்பே போன்ற ஆன்லைன் பணபரிமாற்ற செயலிகளை பயன்படுத்த முடியாது.

இதனால் செல்போன் எண்களை மாற்றியும், அதை தங்களது வங்கிக்கும் தெரிவிக்காமல் இருப்பவர்கள், வேறு நபர்களுக்கு மாற்றப்பட்ட செல்போன் எண்களை வைத்திருப்பவர்கள், அழைப்பு, குறுஞ்செய்தி போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தப்படாத செயல்படாத செல்போன் எண்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் யுபிஐ. ஐடிகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே இந்த அபாயத்தை தவிர்க்க வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். யுபிஐ ஐடியுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் செயல்படாத நிலையில் இருந்தால் வேறு புதிய எண் வாங்கி அதை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும்.

செயல்படாத செல்போன் எண்களுடன் இணைந்த யுபிஐ ஐடிகள் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்களே உடனே வங்கிக்கு சென்று உங்கள் செல்போன் எண்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதாக என்பதை என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
2,000 ரூபாய்க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு!

UPI transaction

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com