

முன்பெலலாம் நாம் இந்த பணப் பரிவர்த்தனையை money order மூலமாகத்தான் செய்து கொண்டிருந்தோம். இல்லை என்றால் நேரடியாக பணத்தை கொடுப்போம். அதுவும் இல்லையென்றால் செக் புக் அறிமுகமான பிறகு, அந்த செக் புக்கில் யார் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்களின் பெயரை எழுதிக் கொடுத்துவிடுவோம்.
அவர்கள் தங்கள் வங்கியில் அதை கொடுப்பார்கள். ஒரு வாரத்திற்குப் பிறகு வங்கிகளில் அந்த பணம் வந்து சேரும். ஆனால் இப்போதெல்லாம் டிஜிட்டல் முறை மிக வேகமான முறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது பெரும்பாலும் இப்போதெல்லாம் phone pay, g pay போன்றவற்றில்தான் பண பரிமாற்றத்தை செய்து கொள்கிறார்கள்.
ஆனாலும் ஒரு சில விஷயங்களில் net banking முறைதான் பாதுகாப்பான முறையாக கருதப்படுகிறது. இந்த நெட் பேங்கிங் முறைகளில் இரண்டு விதமான வகைகளில் பண பரிமாற்றம் அதாவது நெஃப்ட் (neft) அல்லது ஆர்டிஜிஎஸ் ((RTGS) . இந்த இரண்டிற்குமே பணம் பெற்றுக் கொள்பவருடைய வங்கி கணக்கு எண்,IFSC கோட், பெறுபவரின் பெயர் என இவை மூன்றும் மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.
இந்த ஐஎஃப்சி குறியீடு என்றால் என்ன?? அந்த ஐஎஃப்சி குறியீட்டில் இருக்கும் 11 எண்கள் எதைக்குறிக்கின்றன என்பதை பற்றி பார்க்கலாம்.
IFSC குறியீடு என்றால் என்ன?
IFSC என்றால் இந்திய நிதி அமைப்பு குறியீடு (Indian Financial System Code) என்பதன் சுருக்கமாகும். இது காசோலை மற்றும் பாஸ்புக் போன்ற பிற வங்கி ஆவணங்களில் காணப்படும் 11 இலக்கக் குறியீடாகும். இந்த 11 இலக்கக் குறியீடு, பல்வேறு வங்கிக் கிளைகளை அடையாளம் காண உதவுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் IFSC குறியீடுகளை ஒதுக்குகிறது.
ஒரு இணைப்பு நிகழாத வரையில், ஒரு வங்கி தன்னுடைய IFSC-ஐ மாற்றுவதற்கான வாய்ப்பில்லை.
IFSC குறியீட்டை வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கத்திலோ, மொபைல் பேங்கிங் செயலியிலோ அல்லது வங்கியின் நெட் பேங்கிங் தளத்திலோ காணலாம்.
பரிவர்த்தனையை நிறைவு செய்யும்போது பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பை இந்த IFSC குறியீடு குறைக்கிறது.
IFSC குறியீடு, வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை விரைவாகவும் எளிதாகவும் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. அனைத்து மின்னணு அல்லது ஆன்லைன் நிதிப் பரிமாற்றங்களையும் எளிதாக்குவதற்கு IFSC குறியீட்டின் பயன்பாடு மிகவும் அவசியமாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளையும் தவறாமல் பதிவு செய்வதற்கும், நிதிப் பரிமாற்றச் செயல்பாட்டில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்கும் IFSC குறியீட்டைப் பயன்படுத்துகிறது.
IFSC குறியீட்டின் வடிவம் என்ன?
IFSC குறியீடு என்பது எழுத்துக்கள் மற்றும் எண்களால் ஆன ஒரு எழுத்து-எண் குறியீடு ஆகும். இதில் முதல் நான்கு எழுத்துக்கள் வங்கியின் பெயரையும், ஐந்தாவது எழுத்து பூஜ்ஜியத்தையும், கடைசி ஆறு எண்கள் கிளைக் குறியீட்டையும் குறிக்கின்றன.
முதல் நான்கு எழுத்துக்கள் - வங்கியின் பெயர்
ஐந்தாவது எண் – பூஜ்ஜியம் , இது எப்போதும் பூஜ்ஜியமாகவே ('0') இருக்கும், இது எதிர்காலப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடைசி ஆறு எண்கள் – நம் வங்கியின் கிளை குறியீட்டை குறிக்கும்.
IFSC குறியீடு இப்படித்தான் இருக்கும்.
உதாரணத்திற்கு, என் வங்கியின் IFSc குறியீடு CNRB0003708 எனபதாகும்.
CNRB என்றால் canara bank
0 இது எல்லாவற்றிலும் இருக்கக் கூடிய ஜந்தாம் எண்.
003708 என்றால் என்னுடைய சேமிப்பு கணக்கு வங்கி கிளையை குறிக்கிறது. அதாவது நான் ஜம்ஷேட்பூரில் சோனாரி என்கிற இடத்திலிருக்கிறேன். ஆகவே 003708 எனறால் sonary branch, jamshedpur என்று பொருளாகும்.
நீங்கள் யாருக்காவது பணத்தை அனுப்பும்போது, நெட் பேங்கில் நீங்கள் ஐஎஃப்சி கோடை டைப் செய்த பிறகு verify ifsc code என்கிற ஒரு option வரும் அதை கிளிக் செய்தால் நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அந்த நபருடைய வங்கியின் பெயர், கிளை மற்றும் ஊர் பெயர் வரும். இதன் மூலமாக நீங்கள் யாருக்கு அனுப்புகிர்களோ அவர்களுடைய வங்கியை verify செய்துகொள்ளலாம்.
இந்த IFSC code நெட் பேங்கிங் செய்வதற்கான மிக ஒரு முக்கியமான குறியீடாகும் நீங்கள் எப்பொழுது யாருக்கு பணம் அனுப்பினாலும் இந்த குறியீட்டை verify செய்து அதற்குப் பிறகு பணத்தை அனுப்பவும்.
இவ்வாறு verify செய்வதன் மூலமாக எந்தவிதமான தவறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். எந்தவிதமான தவறும் ஏற்படக்கூடாது என்கிற காரணத்தினால்தான் இந்த IFSC குறியீட்டை RBI உருவாக்கி இருக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: