அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

ஜூலை 24 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங்; அன்னா பென், யோகி பாபுவுடன் கலக்கிய டார்க் காமெடி திரில்லர்!
கான் சிட்டி
கான் சிட்டிsource:hindusthantimes
Updated on

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான 'கான் சிட்டி' (Con City) திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பவர் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான கான்சிட்டி ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் இணைந்து நடித்த கிரைம் மற்றும் காமெடி திரைப்படமாகும். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.

'பவர் ஹவுஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'கான் சிட்டி' திரைப்படத்தை ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், ஒரு கிரைம் மற்றும் காமெடி கலந்த ஃபேண்டஸி திரைப்படமாகும். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், நல்ல காமெடி மற்றும் குற்றப் பின்னணி கதை என்றாலும் மக்களிடம் போதுமான வரவேற்பை பெறாமல் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதன் ஓடிடி வெளியீடு குறித்து அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். காரணம் இதன் இன்ட்ரெஸ்டிங்கான கதை.

சென்னையை மையமாகக் கொண்டு நகரும் கதையில், பணக்காரர்களையும் மோசடி செய்பவர்களையும் குறிவைத்து நூதனமான திட்டங்கள் மூலம் ஏமாற்றும் இளைஞராக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். அதே நேரம் சாதாரண வாழ்க்கை வாழும் அவரது குடும்பம், எதிர்பாராத ஒரு சம்பவத்தால் பெரிய சிக்கலில் சிக்குகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள், அந்தப் பயணத்தில் நடக்கும் நகைச்சுவை, பதற்றம் மற்றும் திருப்பங்களே படத்தின் மையக்கருத்தாக இருப்பதால் படத்துடன் எளிதில் கவரப்பட்டு இணைந்து விடுவது படத்தின் சிறப்பு.

சரவணனாக அர்ஜுன் தாஸ் , அவரது மனைவி மித்ராவாக நடிக்கும் அன்னா பென் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொருளாதார நெருக்கடியில் வாழும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் மின்னல் தாக்கியதால், அவர்கள் பயன்படுத்தும் ரசீது அச்சிடும் மெஷினில் விசித்திரமான மாற்றம் ஏற்படுகிறது. அதன் பிறகு, ரசீதுகளுக்குப் பதிலாக ₹500 நோட்டுகள் அச்சாகத் தொடங்குகின்றன.

முதலில் இந்த ரகசியத்தை குடும்பத்தினர் மட்டுமே அறிந்து, கடன்களை அடைத்து, நல்ல வாழ்க்கை வாழ முயற்சிக்கிறார்கள். ஆனால், அளவுக்கு மீறிய பணம் காரணமாக அரசியல்வாதிகள், காவல்துறை, குற்றவாளிகள் உள்ளிட்ட பலரின் கவனமும் சந்தேகத்துடன் அந்த மெஷினின் மீது திரும்புகிறது.

இதற்கிடையில், குடும்பத்தின் சிறுவன் ஜீவா கடத்தப்படுகிறான். ஜீவாவை மீட்க, சரவணனும் அவரது குடும்பமும் தாங்கள் மறந்துவிட்ட பழைய மோசடி திறமைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதற்கான புத்திசாலித்தனமான திட்டங்கள், மாறுவேடங்கள் மற்றும் நகைச்சுவையான சம்பவங்கள் மூலம் அவர்கள் எப்படி எதிரிகளை வீழ்த்துகிறார்கள் என்பதும் இறுதியில் இவ்வளவு பிரச்சினைக்கும் மூலகாரணமான அந்த மெஷின் என்ன ஆயிற்று என்பதே கதை.

con city
con citysource:cinemaexpress
  • நடிப்பு: அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான கம்பீரமான, சீரியஸான தோற்றத்திலிருந்து சற்று விலகி, நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துப் படம் முழுவதையும் தன் தோளில் சுமக்கிறார். நாயகி அன்னா பென் குடும்பத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  • நகைச்சுவை: யோகி பாபு, வடிவக்கரசி ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. இவர்களுடன் வி.டி.வி. கணேஷ், இமான் அண்ணாச்சி ஆகியோரும் தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

  • தொழில்நுட்பக் கலைஞர்கள்: அரவிந்த் விஸ்வநாதனின் அழகான ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இதமான இசையும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் முதல் படத்திலேயே ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளார்.

இருப்பினும், சீரியஸான கதையில் 'டார்க் காமெடி' (Dark Comedy) டோன் பல இடங்களில் ஒட்டவில்லை என்றும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை தொய்வாக நகர்கிறது என்றும் விமர்சகர்கள் தரப்பில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் அரவிந்த் விஸ்வநாதன் அழகான ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இதமான இசையும் படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளன எனலாம். இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் தனது முதல் படத்திலேயே அழுத்தமான முயற்சியை வெளிப்படுத்தியதை பாராட்ட வேண்டும். கிளைமாக்ஸ். எமோஷனல், கமர்ஷியல், குடும்ப சென்டிமெண்ட் என்று பல தளங்களில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. முதல் பாதி வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை மெதுவாக இருந்தாலும், தொடர்ந்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தக்க வைத்திருப்பது படத்தின் சிறப்பு.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கான் சிட்டி வழக்கமான க்ரைம் படமாக இல்லாமல், கற்பனை, நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைக்கும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது எனலாம். வழக்கத்திலிருந்து மாறுபட்டு புதிய களத்தில் லாஜிக் இல்லாத கதைகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். அதே நேரத்தில், முழுக்க யதார்த்தமான கதையை எதிர்பார்ப்பவர்கள் இதை ஃபேன்டஸி–என்டர்டெய்னர் என்ற மனநிலையுடன் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும்.

சரி ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள் ஜூலை 24ஆம் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆம் கான்சிட்டி திரைப்படம் ஜூலை 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்துடன் ஓடிடியில் பார்த்து சிரித்து என்ஜாய் பண்ண நல்ல சாய்ஸ் கான்சிட்டி.

இதையும் படியுங்கள்:
இனி அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக நன்கொடை வழங்கலாம்.100 ரூபாய் கொடுத்தாலும் 100% வெளிப்படைத்தன்மை
கான் சிட்டி
இதையும் படியுங்கள்:
நடிகை சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கான் சிட்டி
logo
Kalki Online
kalkionline.com