Baakiyalakshmi update: பாக்கியாவை பழி வாங்கத் துடிக்கும் கோபி… வலையில் சிக்கிக்கொள்வாரா பாக்கியா?

Baakiyalakshmi serial update
Baakiyalakshmi
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை பழி வாங்கும் திட்டத்தோடு களமிறங்குகிறார்.

முதலில் பாக்கியாவின் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி, யார் தவறு செய்தாலும் பாக்கியாதான் காரணம் என்று ஈஸ்வரி சொல்வார். ஆனால், கோபியின் உண்மை முகத்தை அறிந்துக்கொண்ட ஈஸ்வரி, இப்போது பாக்கியாவுக்கே முழுமையாக சப்போர்ட் செய்கிறார். ஈஸ்வரியின் இடத்தை நிரப்ப இப்போது கோபி களமிறங்கியுள்ளார். என்னத்தான் முன்பெல்லாம் கோபி பாக்கியாவை திட்டிக்கொண்டே இருந்தாலும், இப்போது அனைத்திற்கும் காரணம் பாக்கியாதான் என்று அவரை பழி வாங்கும் எண்ணத்திற்கே வந்துவிட்டார்.

கோபியின் அம்மா அப்பா சந்தோஷத்திற்காக பாக்கியா தனது மாமனாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கோலாகலமாக நடத்தினார். அப்போது கோபி, பாக்கியாவை தொந்தரவு செய்தார்.

பின் தாத்தா இறந்துவிட்டதும், கோபி செய்தது அனைத்தும் ஞாபகம் வந்து ஈஸ்வரி அவரை எந்த காரியங்களையும் செய்யக்கூடாது என்று கூறிவிட்டார். இதனையடுத்து பாக்கியாதான் அனைத்து காரியங்களையும் செய்தார். இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் பாக்கியாதான் காரணம் என்று எண்ணிய கோபி, ஒரு புது ப்ளான் போட ஆரம்பித்துள்ளார்.

அதாவது பாக்கியாவின் ரெஸ்ட்டாரண்டில் ஒரு குளறுபடி செய்து பிரச்சனையை உண்டாக்க திட்டம் செய்துள்ளார். பாக்யா நடத்தும் ஹோட்டலில் ஒரு செப் தேவைப்படுகிறது என்பதை கோபி தெரிந்து கொண்டார்.

அதனால் கோபி அவருக்கு தெரிந்த ஒரு வேலை செய்யும் நபரை பாக்கியா ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கிறார். அதன்படி அந்த நபர் பாக்கியா ஹோட்டலில் இன்டர்வியூக்கு போகிறார். இவரை கேள்வி கேட்ட பாக்கியா இந்த ஹோட்டலுக்கு நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று முடிவு செய்து அவரை தேர்வு செய்து விட்டார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வருகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: கோழிப்பண்ணை செல்லதுரை - இது கொஞ்சம் பழைய கோழி!
Baakiyalakshmi serial update

கோபி அந்த செப்பிடம், நீங்க என்னத்தான் அங்க வேலைப் பாத்தாலும், எனக்குத்தான் விசுவாசமா இருக்கனும் என்று கூறுகிறார். நீங்கள் என்னுடைய ஆளு என்று எக்காரணத்தை கொண்டும் அங்கு இருப்பவர்களுக்கு தெரிய கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிடுகிறார்.

இந்த ப்ளான் மூலம் பாக்கியாவின் ஹோட்டலை அபகரித்து அவரை நடுத்தெருவில் நிறுத்த வேண்டும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகள் மற்றும் அம்மாவிடமிருந்து பாக்கியாவை பிரித்து அனாதையாக நிறுத்த வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டிருக்கிறார் கோபி.

logo
Kalki Online
kalkionline.com