

தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களில் பிரபல இருக்கும் பிக் பாஸ் (Big Boss) நிகழ்ச்சியை உருவாக்கியவர் ஜான் டி மோல் ஜூனியர் (John de Mol Jr.) எனும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஏப்ரல் 24, 1955 பிறந்த இவர் நெதர்லாந்து நாட்டின் ஒரு புகழ்பெற்ற டச்சு ஊடகத் தொழிலதிபர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஆவார். உலகளவில் பிரபலமான பல உண்மைநிலை (Reality TV) மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை உருவாக்கியவர்.
எண்டெமோல் (Endemol )மற்றும் தல்பா மீடியா (Talpa Media)ஆகிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆவார். 1999 ம் ஆண்டு இவர் உருவாக்கிய நிகழ்ச்சி தான் 'பிக் பிரதர்' (Big Brother) எனும் உலகப் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ.
பிக் பிரதர் நிகழ்ச்சிக்கான கரு ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 'நைன்டீன் எய்ட்டி-ஃபோர்' என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது . 1948-ல் எழுதப்பட்ட இந்த நாவலின் கதை களம், ஒரு அராஜக அரசு தொடர்ச்சியான முரண்பாடான பிரச்சாரங்கள் மூலம் மக்களின் மொழி மற்றும் எண்ணங்கள் உட்பட அனைத்தையும் கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறது.
அரசாங்கம் வெளிப்படையாக 'பிக் பிரதர்' என்று அழைக்கப்படும் ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதுவும்' பிக் பிரதர் உங்களை கண்காணிக்கிறார்' என்ற வாசகத்துடன் ஒரு 'கண் பட 'சின்னம் கொண்ட போஸ்டர் நாடு முழுவதும் ஒட்டப்பட்டு நடைமுறை படுத்தப்படுகிறது. இந்த கான்செப்ட்யை அடிப்படையாக கொண்டு ஜான் டி மோல் உருவாக்கியது தான் பிக் பிரதர் நிகழ்ச்சி.
ஜார்ஜ் ஆர்வெல்லின் 1948 ஆம் ஆண்டு நாவலான 1984 ('நைன்டீன் எய்ட்டி ஃபோர்' (Nineteen Eighty-Four) புத்தகத்தில் உள்ள 'பிக் பிரதர்' என்ற கதாபாத்திரத்தின் வார்த்தையிலிருந்து இந்நிகழ்ச்சியின் பெயர் மற்றும் கண் சின்னம் பெறப்பட்டது. முதல் 'பிக் பிரதர்' நிகழ்ச்சி 1999 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஒளிபரப்பாகி உலகளவில் பிரபலமானது. 2000 ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. அது தான் தற்போது பிக் பாஸ் என்கிற பெயரில் உலகின் 50 நாடுகளில் நடைபெறும் பிரபலமான ரியாலிட்டி ஷோ.
'தி வாய்ஸ்' (The Voice), 'டீல் ஆர் நோ டீல்' (Deal or No Deal), 'ஃபியர் ஃபேக்டர்' (Fear Factor) போன்ற உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை உருவாக்கியவரும் ஜான் டி மோல் தான். உலகத் தொலைக்காட்சித்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இவர், தனது நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கான மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர். தற்போது நெதர்லாந்து நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். சொந்தமாக விமானம் வைத்து அதனை அவரே ஓட்டி வலம் வருகிறார்.
அவரது தயாரிப்பு நிறுவனமான எண்டெமோல், 1994-ல் ஜூப் வான் டென் எண்டே டிவி-புரொடக்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை உருவாக்கியதுடன், பின்னர் 2014-ல் "யூடோபியா" நிகழ்ச்சியையும் அறிமுகப்படுத்தியது. எண்டெமோல் நிறுவனத்தின் பங்குகளை டெலிஃபோனிகா நிறுவனத்திற்கு விற்ற டி மோல், தல்பா மீடியாவை நிறுவினார். பின்னர், எஸ்.பி.எஸ் பிராட்காஸ்டிங்கின் டச்சு செயல்பாடுகளைக் கையகப்படுத்தினார். எண்டெமால் உலகின் மிகப்பெரிய சுதந்திரமான தயாரிப்பு நிறுவனமாகும். இது 76 பிராந்தியங்களில் 800-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் கொண்டு, உலகம் முழுவதும் 295 அலைவரிசைகளில் அவற்றை ஒளிபரப்புகிறது.
பிக் பாஸ் என்பது பிக்பிரதர் என்ற பெயரில் உள்ள ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின். இந்திய மொழிகளின் பதிப்பாகும். இந்த நிகழ்ச்சி நெதர்லாந்தில் உள்ள எண்டெமால் உருவாக்கிய பிக் பிரதர் வடிவத்தைப் பின்பற்றுகிறது .இதன் இந்தியப் பதிப்பான 'பிக் பாஸ்' முதலில் ஹிந்தியில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று தொடங்கப்பட்டது. பின்னர் இது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் விரிவாக்கம் பெற்றது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல்முறையாக 2017 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது.அன்று அதன் முதல் ஒளிபரப்பிலிருந்து, தற்போது இந்த நிகழ்ச்சி 10 சீசன்கள் வந்துள்ளது.
ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தற்போது இந்திய மொழிகளில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்த நிகழ்ச்சி இந்திய மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தி மொழியில் தற்போது 20-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில் தென்னிந்திய மொழிகளில் கன்னடத்தில் 13-வது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 10-வது சீசன் மற்றும் மலையாள மொழியில் தற்போது 8-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.
தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இந்த 2026-ம் ஆண்டில் அனைத்து மொழிகளிலும் ஒரே நாளான செப்டம்பர் 06-ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் வெளியுலக தொடர்பு இல்லை என்றாலும் சில சலுகைகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு ஸ்மோக்கிங் ஏரியா என்ற ஒரு பகுதி உள்ளது. இது வெளியுலக வாழ்க்கையில் செயின் ஸ்மோக்கர்களாக உள்ள போட்டியாளர்களுக்கு உள்ளே புகைப்பிடிக்கு வசதியை நிகழ்ச்சி குழு செய்து வைத்து இருக்கும். ஆனால் அதனை கேமராவில் பதிவு செய்து ஒளிபரப்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெயர், கண் சின்னம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள '1984' நாவலின் வரலாற்றுத் தொடர்புகளை வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.