
பிக்பாஸ் சீசன் 8ல் வெளியே இருந்து உள்ளே வந்த போட்டியாளர்கள் கூறிய கருத்தால் சவுந்தர்யா மனமுடைந்து கதறி அழுதுவருகிறார்.
இதுவரை எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக இந்த சீசனில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது. உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார்.
விறுவிறுப்பாக அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போட்டியில் தற்போது 8 பேர் மீதம் இருக்கின்றனர். டிக்கெட் டு பினாலேவை தட்டி சென்ற ராயன் நேரடியாக பைனல்ஸுக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து கடந்த வார இறுதியில் ராணவும், மஞ்சரியும் எலிமினேட் செய்யப்பட்டு விட்டனர். பலரும் ராணவின் எலிமினேஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான புரோமோ ஒன்றில் பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். இதனை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள் ராணவ் மீண்டும் வரவேண்டும் என கூறி வருகின்றனர்.
அதாவது தற்போது உள்ள 8 பேரில் ரயன் நேரடியாக பைனலுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள 7 பேரில் 2 பேருக்கு பதிலாக வைல்டு கார்டு என்ட்ரியாக இருவர் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றைய எபிசோட்டில், ரவீந்தர், அர்ணவ், தர்ஷா, சுனிதா, வர்ஷினி, ரியா, சாச்சனா, சிவக்குமார் ஆகிய 8 பேரும் உள்ளே வந்தனர். அதோடு ஏற்கனவே இருந்த போட்டியாளர்களின் ஆட்டத்தை கதிகலங்க செய்தனர். மேலும் வெளியே நடக்கும் விஷயத்தை உள்ளே உள்ள போட்டியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதில் மனமுடைந்த சவுந்தர்யா தனது செய்கை மக்களுக்கு பிடிக்கவில்லை என நினைத்து விடாமல் கதறி அழுது வருகிறார். இதனால் பிக்பாஸே அவரை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து சென்று ஆறுதல் கூறி சிரிக்க வைத்தார். ஏற்கனவே மக்களுக்கு சவுந்தர்யா பிக்பாஸுடன் செய்யும் சேட்டைகள் ரசிக்கப்பட்டவையாக இருந்தது. இந்த நிலையில், இன்று நடந்த சம்பவமும் ரசிக்கும் படியாக அமைந்தது. ஒரு வழியாக சவுந்தர்யாவும் சமாதானம் ஆகி நார்மல் நிலைக்கு மாறினார்.
என்னதான் போட்டியாளர்கள் கேமிற்காக இதை செய்தாலும், சவுந்தர்யாவை இப்படி அழுக வைத்திருக்க வேண்டாம் என அவரது ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இதற்கு வார இறுதியில் விஜய் சேதுபதி என்ன சொல்வார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.