டிராகன் முதல் ஃபயர் வரை இன்று ஓடிடி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

டிராகன் முதல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வரை இன்று ஓடிடியில் 6 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
டிராகன் முதல் ஃபயர் வரை இன்று ஓடிடி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்
Published on

மக்களை குஷிப்படுத்த வாரவாரம் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாகின்றன. தியேட்டரில் சென்று படம் பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் கண்டு களிக்கும் வகையில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், டெண்ட்கொட்டா போன்ற பல்வேறு ஓடிடி தளங்கள் உள்ளன. அந்த வகையில் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் 6 திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

ஃபயர்:

ஜெ. சதீஷ்குமார் தயாரித்து, இயக்கி போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ஃபயர் படம் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று ரூ 1.82 கோடி வசூலித்தது. பிக் பாஸ் பிரபலங்களான பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சுரேஷ் சக்கரவர்த்தி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார். இன்று (மார்ச் 21-ம் தேதி) டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

டிராகன்:

அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் வசூலையே உலகளவில் முறியடித்து இந்தாண்டு வெளியான படங்களிலேயே இதுவரை அதிக வசூல் (ரூ. 150 கோடி) செய்த தமிழ் படமாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் உள்ளது. இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் நடித்துள்ளனர். மேலும், சினேகா, மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
புதிய ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்திய பிரசார் பாரதி; கட்டணம் எவ்வளவு தெரியுமா?
டிராகன் முதல் ஃபயர் வரை இன்று ஓடிடி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிகேத் பொம்மிரட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இந்தப்படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட் கொடுத்தது. AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வாங்கியுள்ள நிலையில், இன்று (மார்ச் 21ம் தேதி) ஓடிடியில் வெளியாக உள்ளது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்:

கடந்த மாதம் 21ம் தேதி டிராகன் படத்துக்கு போட்டியாக தியேட்டரில் களமிறங்கிய தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் வெளியாவதற்கு முன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் வெளியான பின் சொல்லும் அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை.

ரொமாண்டிக் காமெடி படமாக உருவான இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாக, இவருடன் மேத்யு தாமஸ் , அனிகா சுரேந்திரன் , பிரியா பிரகாஷ் வாரியர் , சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தனுஷ் தனது வண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தியேட்டரில் ஹிட் அடிக்காத இப்படம் மீண்டும் டிராகன் படத்துக்கு போட்டியாக ஒரே நாளில் ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிடியில் போட்டி போட வருகிறது. அந்த வகையில் இப்படம் இன்று (மார்ச் 21ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.

பேபி & பேபி:

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் உருவான பேபி & பேபி திரைப்படத்தில் நடிகர் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. குழந்தைகளை மையப்படுத்தி, குடும்ப உறவுகளின் பின்னணியில், அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நடுத்தர மக்கள் கொண்டாடிய குடும்பஸ்தன்... ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
டிராகன் முதல் ஃபயர் வரை இன்று ஓடிடி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

கடந்த மாதம் 14-ம்தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று (மார்ச் 21ம்-ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்:

யூடியூப் மூலம் பிரபலமான ஹரி பாஸ்கரும், பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியாவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'. ஒரு பெண்ணை வேலை வெட்டி இல்லாத இளைஞன் துரத்தி துரத்தி காதலிப்பது தான் இந்த படத்தின் கதை. இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி தியேட்டரில் ரிலீசான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை தேனாண்டாள் ராமசாமி மற்றும் நிதின் மனோகர் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசை ஓஷோ வெங்கட்டும், ஒளிப்பதிவு குலோத்துங்கவர்மனும் செய்துள்ளார். இப்படம் இன்று (21ம் தேதி) டெண்ட்கோட்டா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ரிங் ரிங்:

பிரவீன் ராஜ் நடித்த தமிழ் திரைப்படமான ரிங் ரிங் கடந்த ஜனவரி 31-ம்தேதி திரையரங்கில் வெளியானது. சக்திவேல் எழுதி இயக்கிய நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில், சாக்ஷி அகர்வால், வெங்கட் பிரசன்னா, அர்ஜூனன், டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று (மார்ச் 21-ம்தேதி) வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
டிராகன் முதல் ஃபயர் வரை இன்று ஓடிடி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com