ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘காதலிக்க நேரமில்லை’ - எப்போ தெரியுமா?

kadhalikka neramillai
kadhalikka neramillaiimage credit - @bergamo9
Published on

2003-ம் ஆண்டு ஜெயம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் இவர் நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை தந்தது மட்டுமில்லாமல் முன்னணி கதாநாயகனாகவும் உயர்த்தியது. இவரது சுமார் 22 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளார்.

காதலிக்க நேரமில்லை படம் வெளியாவதற்கு முன்னதாக தன்னை இனிமேல் யாரும் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும் ரவி அல்லது ரவி மோகன் என அழைத்தால் சந்தோஷப்படுவேன் என்றும் ஜெயம் ரவி அறிவித்திருந்தார். நடிகர் ரவி மோகன் தற்போது ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்:
நடுத்தர மக்கள் கொண்டாடிய குடும்பஸ்தன்... ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
kadhalikka neramillai

இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இதையடுத்து, அவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்தன என்றே சொல்லலாம்.

இந்நிலையில், ரவி மோகன் சமீபத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் நடித்திருந்தார். காதல் நகைச்சுவைத் திரைப்படமான இந்தப்படம் கடந்த ஜனவரி 14-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸின் கீழ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதி கேவ்மிக் யு. ஆரி, படத்தொகுப்பு லாரன்ஸ் கிஷோர்.

இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் யோகி பாபு, வினய் ராய், டி.ஜே. பானு மற்றும் லால் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

இதையும் படியுங்கள்:
போன வேகத்துலேயே திரும்பி வந்த 'கேம் சேஞ்சர்'... ஓடிடியில் இன்று வெளியாகும் 5 படங்கள்
kadhalikka neramillai

இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் இளம் வயதினர் மற்றும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதமே ஆனநிலையில் ‘காதலிக்க நேரமில்லை’ படம் Netflix ஓடிடி தளத்தில் வரும் 11-ம்தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பு, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரம் என இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில் நவீன காதல் கதையாக உருவான இந்த திரைப்படம் ரூ.10 கோடி வரை வசூலித்து வணிக ரீதியில் தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் ரூ.6 கோடி …வசூலோ ரூ.75 கோடி - ‘கெத்து’ காட்டும் மலையாள படம்!
kadhalikka neramillai

காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களை மகிழ்விக்க Netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த படத்தை பார்த்து மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com