மிஸ் பண்ணிடாதீங்க! ஜூலை 10 வரை ஓடிடியில் வெளியாகும் டாப் படங்கள்!

ஓடிடியில் வரும் ஜூலை 10 வரை வெளியாகும் மிஸ் பண்ணக் கூடாத சில படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஓடிடி படங்கள்
OTT moviesimage credit - imdb.com
Updated on

திரையரங்குகளுக்குச் சென்று பெரிய திரையில் படம் பார்ப்பது ஒரு வகை சுகம் என்றால், வெளியே அலையாமல் கூட்டம் இல்லாமல் வீட்டில் அமர்ந்து நாம் மட்டும் அல்லது குடும்பத்துடன் ஓடிடி படங்கள் அல்லது தொடர்கள் பார்ப்பது மற்றொரு வகையான தனி சுகம் தான். தியேட்டரில் ஒரே ஒரு படம் தான் பார்க்க முடியும்.. ஆனால் ஓடிடியில் பல மொழிப்படங்களைக் கண்டு ரசிக்கலாம்.

அப்படி ஓடிடியில் ஜூலை 10 வரை வெளியாகும் மிஸ் பண்ணக் கூடாத சில படங்கள் லிஸ்ட் இங்கு..

‘கரக்கம்' (Karakkam) - மலையாளம்

இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட தென்னிந்திய நடிகர்களில் ஸ்ரீநாத் பாசியும் ஒருவர். அவரது நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படமான 'கரக்கம்' (Karakkam), ஜூலை 3-ம்தேதி சோனி லிவ் (SonyLIV) ஓடிடி தளத்தில் வெளியானது. மியூசிக்கல் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பார்ப்பதற்காக தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது போதையில் இரு இளைஞர்கள் ஒரு தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று, அங்கிருந்த ஐந்து பித்தளை சிலுவைகளை வேரோடு பிடுங்கி விட, அந்த கல்லறைகளில் இருந்து வெளிவரும் அமைதியற்ற ஆவிகள் அந்த இளைஞர்களைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன. தங்கள் நிம்மதியைப் பறிக்கும் அந்த பேய்களிடம் இருந்து தப்பிக்க, அந்த இளைஞர்கள் மேற்கொள்ளும் நகைச்சுவையான பயணமும், திகில் சம்பவங்களுமே படத்தின் முக்கிய கதையாகும்.

பயமும், சிரிப்பும், திகிலும் கலந்த ஒரு ஜாலியான அனுபவத்தை 'கரக்கம்' திரைப்படம் நிச்சயம் உங்களுக்கு வழங்கும். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை விரும்புவோருக்கு இந்தப் படம் ஒரு நல்ல சாய்ஸ்.

‘பிரிதம் அண்ட் பெட்ரோ' (Pritam and Pedro) - இந்தி

ராஜ்குமார் ஹிரானியின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட OTT அறிமுகமான இந்தத் தொடர், கோவாவில் நடக்கும் ஒரு சைபர் கிரைம் நண்பர்கள் நகைச்சுவைத் தொடராகும். இதில், அர்ஷத் வார்சியாக நடித்த ஒரு பழமைவாத காவல் ஆய்வாளரும், வீர் ஹிரானியாக நடித்த தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த இளம் ஹேக்கரும், ஒரு அமைச்சரின் கடத்தப்பட்ட மகனைக் கண்டுபிடிக்க ஒன்றாக இணைகிறார்கள்.

அவினாஷ் அருண் இயக்கிய எட்டு எபிசோடுகள் கொண்ட இத்தொடரில், விக்ராந்த் மாசி ஒரு அச்சமூட்டும் சைபர் குற்றவாளியாகவும், சஞ்சய் தத் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளனர். ஜூலை 3 அன்று வெளியான இந்த தொடர், தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் (JioHotstar) ஒளிபரப்பாகி வருகிறது.

'மோலிவுட் டைம்ஸ்' - மலையாளம்

அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில், இளம் நடிகர் நஸ்லென் நடிப்பில் உருவான 'மோலிவுட் டைம்ஸ்' திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் ஜூலை 3 அன்று அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் (Re-release) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. திரையரங்குகளில் மீண்டும் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே, மிகக் குறுகிய காலத்தில் இதன் டிஜிட்டல் வெளியீடு அறிவிக்கப்பட்டு இருப்பது சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஓடிடி படங்கள்
OTT releaseimage credit - imdb.com

இதன் கதையும் திரில்லர் ப்ளஸ் காமெடி கலந்தது. மிகச்சிறந்த திகில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் ஒரு வளரும் திரைப்பட இயக்குநர், தனது கனவைத் துரத்திச் செல்லும் பயணத்தில், திரையுலகின் சவால்கள், படைப்பு ரீதியான போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட பின்னடைவுகளை எதிர்கொள்வதைப் பற்றியது.

நஸ்லென், ஷரஃப் யு தீன், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் நடித்துள்ள, காமெடி கலந்த இந்த உளவியல் படம் ஜூலை 3 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் காணலாம்.

பரிமளா & கோ - தமிழ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாண்டியராஜ் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன் சார்பில் உருவான 'பரிமளா அண்ட் கோ' ZEE5 தளத்தில் ஜூலை 10-ஆம் தேதி முதல் வெளியாகிறது.

இந்தப் படம் ஒரு நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட டார்க் காமெடி மற்றும் த்ரில்லர் வகைப் படமாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து நகைச்சுவையாக நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு. படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசியின் அனுபவம் மிகுந்த நடிப்பு, சில இடங்களில் வரும் டைமிங் காமெடி மற்றும் பொருத்தமான நடிகர்களின் தேர்வு ஆகியவற்றை நிச்சயம் ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 6 படங்கள்! ஓடிடி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா ட்ரீட்..!
ஓடிடி படங்கள்

சைலோ சீசன் 3 — ஆங்கிலம்

இந்த அறிவியல் புனைகதை மற்றும் அவலநிலை நாடகத்தின் இறுதிக்கு முந்தைய அத்தியாயம், ரெபேக்கா ஃபெர்குசன் நடித்த ஜூலியட் நிக்கோல்ஸ் நினைவாற்றல் இழப்புடன் வாழ்க்கையை எதிர்கொள்வதிலிருந்து தொடங்குகிறது. அதே சமயம், மற்றொரு இணைக்கதை, அந்தப் பேரழிவின் இருண்ட மூலங்களையும், சைலோக்களின் கட்டுமானத்திற்குப் பின்னால் உள்ள தீய சதியையும் வெளிக்கொணர்கிறது.

இதன் புதிய அத்தியாயங்கள் ஜூலை 3 முதல் ஆப்பிள் டிவி பிளஸில் (Apple TV Plus ) வாரந்தோறும் வெளியாகும். இந்த மூன்றாவது சீசன் முந்தைய சீசன்களைப் போலல்லாமல் ரசிகர்களைக் கவரும் வகையில் ஒரு புதிய கதைக்களத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 10 எபிசோட்களில், முதல் எபிசோட் 10-ம்தேதி அன்று ஒளிபரப்பப்பட்டது, தொடர்ந்து செப்டம்பர் 4, 2026 வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய எபிசோட்கள் வெளியாகின்றன.

பல்டி (Balti) - மலையாளம்

பல்டி ஜூலை 10 முதல் சோனி லைவ் (Sony LIV) தளத்தில் வெளியாகிறது. தமிழ் டப்பிங் மற்றும் பிற மொழிகளில் வெளிவரும் இதில் ஷேன் நிகாம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் மையக் கதை விளையாட்டுடன் தொடர்புடையது. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் எல்லையோரக் கிராமத்தில் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான ஒரு அதிரடித் திரைப்படமாகும்.

இதையும் படியுங்கள்:
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்!
ஓடிடி படங்கள்

கேரள-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள ஒரு காலனியில் வாழும் நான்கு கபடி வீரர்கள். அவர்கள் எவ்வாறு உள்ளூர் கடன்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் சிக்குகிறார்கள், அதன்பின் ஏற்படும் மோதல்கள் என்பதே கதை . இது ஒரு ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்‌ஷன் திரைப்படமாக இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இக்கா (Ikka) - ஹிந்தி

இக்கா என்ற ஹிந்திப்படம் நெட்ஃபிக்ஸ் (Netflix) தளத்தில் ஜூலை 10 அன்று வெளியாகிறது. சட்டப் போராட்டம நிறைந்த திரில்லர் திரைப்படமாகும்.

சித்தார்த் பி. மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படத்தில் சன்னி தியோல் மற்றும் அக்‌ஷய் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நேர்மைக்கும், கொள்கைகளுக்கும் பெயர்போன அர்ஜுன் மெஹ்ரா (சன்னி தியோல்) என்ற வழக்கறிஞர், தனது கடந்த கால வாழ்க்கையில் தான் தோற்கடித்த ஒரு நபரையே கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.

குடும்பப் பாசம், நீதி, மற்றும் தனிப்பட்ட விசுவாசம் ஆகியவற்றிற்கு இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. சன்னி தியோல் மற்றும் அக்‌ஷய் கண்ணா ஆகியோர் சுமார் 3 தசாப்தங்கள் கழித்து மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இது சன்னி தியோலில் முதல் நெட்ஃபிக்ஸ் (Netflix) படம் என்பது கூடுதல் சிறப்பு.

இதையும் படியுங்கள்:
ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள ₹20 கோடிக்கு ஓடிடி விற்பனை! மணிரத்னம் படத்தின் அசுர வேட்டை!
ஓடிடி படங்கள்

இவை தவிர வேறு சில படங்கள் மற்றும் சூப்பரான வெப்சீரிஸ் தொடர்களும் வெளியாகி உள்ளது. என்ன ரசிகர்களே ஓடிடி தரும் புத்தம் புதிய படங்களை ரசிக்கத் தயாரா?

logo
Kalki Online
kalkionline.com