கோமாவில் காதலன்... விளம்பரப் பட நடிகையாக மாறிய சித்தி இதானி: 'நூறு கோடி வானவில்' விமர்சனம்!

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஜி5 தளத்தில் வெளியாகியுள்ள படத்தின் விமர்சனம்.
நூறு கோடி வானவில்
நூறு கோடி வானவில்
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 
ரேட்டிங் (3 / 5)

பூ, சொல்லாமலே, பிச்சைக்காரன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் சசி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், சித்தி இதானி ஹீரோயின் ஆக நடித்துள்ளார்கள். கோவாவில் வசித்து வருகிறார் சித்தி. காதலில் ஏற்பட்ட ஒரு குழப்பத்தால் ஒரு விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜில் இருக்கிறார்.

சித்தி இதானியின் காதலர். இவரை காப்பாற்ற, மீண்டும் சுய உணர்வுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் சித்தி. இந்த சூழ்நிலையில் விளம்பர படங்களை இயக்கும் ஹரிஷ் கல்யாண் மும்பையில் இருந்து கோவாவிற்கு வருகிறார். சித்தி அழகாக இருப்பதால் தனது விளம்பரப் படத்திற்கு நடிக்க வைக்கிற முயற்சி செய்கிறார். ஆனால் சித்தி முதலில் மறுக்கிறார்.

கோமாவில் இருக்கும் தன் காதலனுக்கு மருத்துவ செலவு தேவைப்படுவதால் வேறு வழி இல்லாமல் விளம்பரப் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்கிறார். இப்படி விளம்பரத்தில் நடித்துக் கொண்டே இருக்கும் சமயத்தில் ஹரிஷ் கல்யாண் சித்தி மீது காதல் வயப்படுகிறார். சித்திக்கும் லேசாக ஹரிஷ் மீது காதல் அரும்புகிறது. இந்த சூழ்நிலையில் சித்தியின் காதலர் கோமாவில் இருந்து மீண்டு வருகிறார்.

சித்தி இது போன்ற விளம்பர படத்தின் நடிப்பது காதலருக்கு பிடிக்கவில்லை. இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. பிரச்சனை மிகப் பெரிய அளவில் வந்து கோவாவை விட்டு மீண்டும் மும்பைக்கே வருகிறார் ஹரிஷ் கல்யாண். இந்த சூழ்நிலையில் சித்தி என்ன முடிவெடுத்தார்? பின்னால் காதலன் சேர்ந்தாரா?அல்லது ஹரிஷ் காதலை ஏற்றுக் கொண்டாரா? என்று சொல்கிறது மீதி கதை. 

 காதலுடன் ஏக்கத்துடன் சித்தி..

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் சித்தி இதானி தான். இதை தைரியமாக சொல்லலாம் அழகாக வெளியில் சிரித்துக் கொண்டே உள்ளுக்குள் ஒரு சோகத்தை வைத்துக்கொண்டு மிகப் சிறப்பாக நடிக்கிறார் சித்தி இதானி. இதுவரை சில படங்களில் கிளாமராக நடித்து வந்தவர் இந்த படத்தில் நடிப்பில் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார்.

நூறு கோடி வானவில்
நூறு கோடி வானவில்

ஒட்டுமொத்த படத்தையும் தனது நடிப்பால் தாங்கி பிடிக்கிறார் சித்தி. சபாஷ் சித்தி. ஸ்கூட்டர் தேவதை என்ற கான்செப்டில் நடிப்பை மிக அற்புதமாக தந்துள்ளார். ஹரிஷ் காதலை ஏற்க முடியாமல் தவிப்பதும் பழைய காதலன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணரும் இடத்திலும் சித்தி சபாஷ் போட வைக்கிறார்.

ஆஹா ஹரிஷ்..

இதுவரை சாதாரண சாக்லேட் பாய் போல நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் ஒரு மாறுபட்ட காதலராக நடித்திருக்கிறார். சித்தி மீது தன்னை அறியாமல் காதல் ஏற்படும் இடத்தில் தனது நடிப்பை மிக அழகாக தந்திருக்கிறார். புது ஐடியாக்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஆங்காங்கே உள்ள சில ஐடியாக்கள் தான் ஒரு விளம்பர நிறுவனம், அந்த விளம்பர நிறுவனத்தை பிரமோட் செய்ய ஒரு ஸ்கூட்டர் தேவரை கான்செப்ட், அதன் மூலமாக ஒரு கதை என்று அழகாக யோசித்திருக்கிறார் சசி.

கோவாவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. இருந்தாலும் கோவாவை இன்னும் அழகாக படம் பிடித்திருக்கலாம் என்று சொல்ல தோன்றுகிறது. பாடல்கள் பெரிய அளவில் செல்லும்படி இல்லாவிட்டாலும் பின்னணி இசை நன்றாக உள்ளது. சில கேள்விகள் கோவா என்றால் எப்பொழுதும் சில விஷயங்கள் நம்மில் எழும்.

நூறு கோடி வானவில்
நூறு கோடி வானவில்

அதாவது பெண்கள் மாடனாக இருப்பது, கலாச்சார மாற்றம் இப்படி சில விஷயங்கள் இருந்தாலும் இதை வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார் சசி என்று சொல்லும் அளவில் ஒரு காட்சி உள்ளது. அதாவது கோவை சரளா பாட்டியாக நடிக்கிறார். இவர் ஒரு காட்சியில் புகை பிடிக்கிறார். இந்த காட்சி எதனால் இயக்குனர் வைத்தார் என்று தெரியவில்லை. இது போன்ற காட்சிகளை டைரக்டர் தவிர்த்து இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
போட்டோகிராபர் விமர்சனம்: அஷ்ரப்பின் சர்வைவல் திரில்லர் ஜெயித்ததா?
நூறு கோடி வானவில்

மேலும் பட தின் கதை என்பது இதற்கு முன்பு வந்த சில படங்களின் கதையில் சாயலில் இருப்பதும் ஒரு குறை ஆகும். படத்தில் ஒரு திருநங்கை போன்ற கேரக்டரில் வரும் ஒருவரை லேசாக நகைச்சுவை காட்சிகளில் பயன்படுத்த உள்ளார் சசி. நல்ல படத்தை தந்த இயக்குனர் இதை தவிர்த்து இருக்கலாம். 

இறுதியில் சசி டச் இருந்ததா?...

சசி என்றால் படத்தில் ஒரு அழகியல் இருக்கும். அந்த அழகியல் படத்தில் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு வந்த பிச்சைக்காரன், சொல்லாமல் காதலை சொன்ன சொல்லாமலே, ஒரு அழகான கரிசல் காட்டு காதலை சொன்ன பூ இதுபோன்ற சசியின் டச் இந்த படத்தில் குறைவாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்:
அழகு முக்கியமா, மனசு முக்கியமா? பேசும் 'ட்ரோன்ஸ்' படம்!
நூறு கோடி வானவில்

இருந்தாலும் படம் பார்த்து முடித்தவுடன் ஏதோ ஒரு அழகான காதல் படத்தை பார்த்து விட்டோம் என்ற ஒரு வித திருப்தி மட்டும் ஏற்படுகிறது. அதற்காக இந்த படத்தை நாம் பார்க்கலாம். இப்படத்தை வரும் நவம்பர் 6 என்று ஜி5 ஒரிஜினல் தளத்தில் பார்க்கலாம். காதலைப் பற்றி வித்தியாசமாக ஒரு படம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நூறு கோடி வானவில் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

படத்தின் சுவாரஸ்யமான கதைக்களத்தை வெளிப்படுத்தி, படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விமர்சன அனுபவம்.