

பண்டிகை காலம் வந்துவிட்டாலே வீட்டில் உள்ள சிறுசு முதல் பெரிசு வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான். ஏன்னா பண்டிகை காலங்களில் ஒவ்வொரு டிவி சேனல்களும் புதுப்படங்கள் ஒளிபரப்பும். அந்த வகையில், நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு டிவி சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்படங்களை ஒளிபரப்ப தயாராகி உள்ளன. ரசிகர்களும் எந்த டிவி சேனலில் எந்த படம் ஒளிபரப்பாக உள்ளது என்று ஆவலுடன் காத்திருந்த நிலையில் அதற்காக முழு அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், ஜீ திரை, கே டிவி, கலைஞர் டிவி என ஒவ்வொரு சேனல்களிலும் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
சன் டிவி :
ஜனவரி 15-ந்தேதி வியாழக்கிழமை, தைப்பொங்கலன்று காலை 11 மணிக்கு தனுஷ், நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படமும், 3 மணிக்கு சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படமும், மாலை 6.30 மணிக்கு சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
ஜனவரி 16-ம்தேதி வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி, தான்யா நடித்த கருப்பன் திரைப்படமும், பிற்பகல் 3 மணிக்கு ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் திரைப்படமும், மாலை 6.30 மணிக்கு ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்த அண்ணாத்த திரைப்படம் ஓளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 17-ந் தேதி சனிக்கிழமை காணும் பொங்கல் அன்று காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்த மாவீரன் திரைப்படமும், பிற்பகல் 3 மணிக்கு விஷால், ரீமா சென் நடித்த திமிரு திரைப்படமும், மாலை 6 மணிக்கு அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 18-ந்தேதி ஞாயிற்று கிழமை காலை 11 மணிக்கு தனுஷ், தமன்னா நடித்த படிக்காதவன் திரைப்படமும், பிற்பகல் 3 மணிக்கு ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த தனி ஒருவன் திரைப்படமும், மாலை 6.30 மணிக்கு விஷால், ஸ்ருதி ஹாசன் நடித்த பூஜை திரைப்படமும், இரவு 9.30 மணிக்கு பிச்சைக்காரன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவி :
ஜனவரி 15-ந்தேதி பொங்கல் தினத்தன்று காலை 10.30 மணிக்கு ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் திரைப்படமும், மாலை 4 மணிக்கு துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 16-ம்தேதி வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் அன்று காலை 10.30 சசிக்குமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும், மாலை 4 மணிக்கு விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 17-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அதர்வா நடித்த DNA திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
ஜனவரி 18-ந் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 3.30 மணிக்கு விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் :
ஜனவரி 15-ந்தேதி பொங்கல் தினத்தன்று காலை 10.30 மணிக்கு சூரி நடித்த மாமன் திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு ஹவுஸ் மேட்ஸ் திரைப்படமும், மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 16-ம்தேதி மாட்டு பொங்கல் அன்று காலை 12.30 மணிக்கு விஜய்யின் Goat திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு Kantara: Chapter 1 திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 17-ந்தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
கே டிவி:
ஜனவரி 15-ந்தேதி பொங்கல் தினத்தன்று காலை 7 மணிக்கு சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் திரைப்படமும், மதியம் 1 மணிக்கு சுந்தர பாண்டியன் திரைப்படமும், மாலை 4 மணிக்கு வைகுண்டபுரம் திரைப்படமும், இரவு 7 மணிக்கு ஹீரோ திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 16-ம்தேதி மாட்டு பொங்கல் அன்று காலை 7 மணிக்கு நானும் ரவுடி தான் திரைப்படமும், காலை 10 மணிக்கு பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படமும், மதியம் 1 மணிக்கு கொம்புவச்ச சிங்கம்டா திரைப்படமும், மாலை 4 மணிக்கு அருள்நிதி நடித்த RAMBO திரைப்படமும், இரவு 7 மணிக்கு திமிரு புடிச்சவன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 17-ந் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு சேட்டை திரைப்படமும், காலை 10 மணிக்கு நண்பேண்டா திரைபடமும் மதியம் 1 மணிக்கு Jigarthanda TRIPLE X திரைப்படமும், மாலை 4 மணிக்கு விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை திரைப்படமும், இரவு 7 மணிக்கு ராட்சசன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
Z திரை :
ஜனவரி 15-ந்தேதி பொங்கல் தினத்தன்று காலை 6 மணிக்கு வெள்ளக்காரதுரை திரைப்படமும், காலை 8 மணிக்கு மகளிர் மட்டும் திரைப்படமும், காலை 10.30 மணிக்கு களவாணி 2 திரைப்படமும், மதியம் 1 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த Ace திரைப்படமும், மாலை 4 மணிக்கு யாமிருக்க பயமே திரைப்படமும், இரவு 7 மணிக்கு வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 16-ம்தேதி அன்று காலை 6 மணிக்கு தும்பா திரைப்படமும், காலை 10.30 மணிக்கு தேசிங்கு ராஜா திரைபடமும், மாலை 4.30 மணிக்கு வீட்ல விசேஷம் திரைப்படமும், இரவு 7 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 17-ந்தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு GHAZI திரைப்படமும், காலை 8 மணிக்கு மிருகா திரைப்படமும், காலை 10.30 மணிக்கு கிங்ஸ்டன் திரைப்படமும், இரவு 7 மணிக்கு பத்து தல திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
கலைஞர் டிவி :
கலைஞர் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.அதன்படி, பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 14-ந்தேதி காலை 10 மணிக்கு பிரதீப்ரங்கநாதன் நடிப்பில் லவ் டுடே திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு எஸ்.ஜே.சூர்யா, லைலா,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் உருவான ‘வதந்தி-பகுதி 1’ வெப் சீரிஸூம், இரவு 10 மணிக்கு டைரி திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
ஜனவரி 15-ம்தேதி காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவை சிறப்பு பட்டிமன்றமும், காலை 11 மணிக்கு விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ‘வதந்தி - பகுதி 2’ மற்றும் மாலை 6 மணிக்கு மணிகண்டன் நடிப்பில் ‘குடும்பஸ்தன்’ சூப்பர்ஹிட் திரைப்படமும், இரவு 9.30 மணிக்கு ஆதவன் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
ஜனவரி 16-ம்தேதி காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன்-பிரியங்கா மோகன் நடிப்பில் ‘டான்’ திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ‘வதந்தி - பகுதி 3’ , மாலை 6 மணிக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படமும் ஒளிப்பரப்பாகிறது.
ஜனவரி 17-ந் தேதி காலை 10 மணிக்கு சிலம்பரசன் நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கின்றன.