Prakambanam
Prakambanam

விமர்சனம்: பிரகம்பனம் (2026) - மலையாளம் - ஹாரர் காமெடி டிராமா!

Published on
ரேட்டிங்(3 / 5)

ரூ.4 கோடியில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படமான பிரகம்பனம் ரூ.21 கோடி பாக்ஸ் ஆபீசில் வசூல் செய்து  சாதனை படைத்துள்ளது. 30/01/2026 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப் படம் இப்போது தமிழ்  டப்பிங்கில் 13/03/2026 முதல் ஜீ5 (ZEE 5) ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. இந்தப்படத்தின் ஷூட்டிங்க்  எர்ணாகுளத்தில் ஒரு ஹாஸ்டலில் 50%, கண்ணூர் ல 50%  நடந்தது. பிரகம்பனம் என்ற சொல்லுக்கு அதிர்வு என்று  பொருள்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் 18 வயது  இளைஞன். காலேஜ் ஹாஸ்ட்டலில்  தங்கிப்படிக்கிறான். நாயகனின் பாட்டி பூஜை புனஸ்காரங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இறந்த சொந்தங்களுக்குப் படையல் போட்டு  விட்டுத்தான் நாம் சாப்பிட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். ஆனால் பாட்டியின் மகன்களுக்கு, அதாவது  நாயகனின் அப்பா, சித்தப்பா இவர்களுக்கெல்லாம் இது பிடிக்காது. காரணம் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், பகுத்தறிவுவாதிகள், பாட்டிக்கும், இவர்களுக்கும் எப்பவும் ஆகாது.

ஒரு தருணத்தில் பாட்டி திடீர் என இறந்து விட நாயகன் அங்கே வருகிறான். காரியங்கள் எல்லாம் முடிந்த பின் நாயகனின் தாத்தா நாயகனிடம் ஒரு பானையைக் கொடுத்து இதில் பாட்டியின் அஸ்தி இருக்கிறது, இதை உனக்கு நேரம் இருக்கும்போது காசியில் போய்க்கரைத்து விடு என்று கூறுகிறார். நாயகன் இவ்ளோ பெரிய பானை எல்லாம் கொண்டு போக முடியாது, எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என சொல்ல தாத்தா அவரது மூக்குப்பொடி டப்பாவில் கொஞ்சம் அஸ்தியைப் போட்டுத்தருகிறார். இதை நாயகன் காலேஜ் ஹாஸ்டலுக்கு எடுத்து வருகிறான்.

நாயகனின் நண்பன் நாயகனுக்குத் தெரியாமல் நாயகனின் பெட்டியை செக் பண்ண இந்தப் பொடி டப்பாவைப்பார்த்து எதோ போதைப்பொருள் என நினைத்து அதை உபயோகிக்க பாட்டியின் ஆவி அந்த இளைஞனின் உடம்பில் புகுந்து விடுகிறது. இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித் திரைக்கதை.

நாயகன் ஆக கணபதி கச்சிதமாக நடித்த்திருக்கிறார். இவருக்குக் காமெடி இயல்பாகவே வருகிறது. இவரது டயலாக் டெலிவரி, உடல் மொழி அனைத்தும் அருமை.

நாயகனின் நண்பன் ஆக சாகர் சூர்யா பிரமாதப்படுத்தி இருக்கிறார். நாயகனுக்கு நிகரான கேரக்ட்டர், ஆவி புகுந்தபின் இவர் செய்யும் அலப்பறைகள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் ரகம்.

நாயகனின் பாட்டி ஆக மல்லிகா சுகுமாரன் கச்சிதம், நாயகனின் தாத்தா ஆக பிபி குன்ஹி கிருஷ்ணன் சிறப்பான நடிப்பு.

படத்தில் நடித்த மற்ற அனைத்துக் கேரக்ட்டர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

பாடல்களுக்கான இசையை பிபின் அசோக்கும் பின்னணி இசையை சங்கர் சர்மாவும் கவனித்து இருக்கிறார்கள். காமெடி, திகில் கலந்த பின்னணி இசை அருமை. ஆல்பி ஆஸ்டனியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் கவனம் பெறுகிறது, இஎஸ் சூரஜின் எடிட்டிங்கில் படம் 126 நிமிடங்கள் ஓடுகிறது.

ஸ்ரீ ஹரி வடக்கன் கதை, திரைக்கதை எழுத விஜேஸ் பானத்தூர் இயக்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
MADE IN KOREA (2026) - தமிழ் - சினிமா விமர்சனம்..! இது 'குவீன்' படத்தின் காப்பியா? பிளஸ் மற்றும் மைனஸ் அலசல்!
Prakambanam

சபாஷ் டைரக்டர்

  • படம் போட்ட 32 வது நிமிடத்தில் நாயகனின் நண்பன் உடலில் பாட்டியின் ஆவி புகுந்த பின் அவரது ட்ரான்ஸ்பர்மேசன் உடல் மொழி, நடிப்பு, காமெடி எல்லாம் கலக்கல் ரகம், நாயகனை விட இவரது நடிப்பு டாப் கிளாஸ்.

  • பாடல்கள் எல்லாம் அருமை. மெலோடி சாங்க் ஆக ஆரம்பித்து ராப் பாட்டாக மாறுவது எல்லாம் செம.

  • பாட்டியின் மரணம் இயற்கை ஆனது அல்ல, கொலை என்பது ஒரு டிவிஸ்ட், கொலைகாரன் யார் என்பது இன்னொரு டிவிஸ்ட், இரண்டுமே பிளேஸ் செய்யப்பட்ட இடங்கள் கச்சிதம்.

  • முதல் பாதியில் கதை, கேரக்டர் அறிமுகங்கள் எல்லாம் முடிந்த பின் கொஞ்சம் காமெடி, பின் பாதி முழுக்கக்காமெடி என படம் எங்கேஜிங்க் ஆகக் கொண்டு போன விதம்.

  • பெரிய ஹீரோக்கள் இல்லாமல் இரண்டே லொக்கேஷன்களில் லோ பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தைக் கொடுத்த லாவகம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - வெஞ்சென்ஸ் - பழிவாங்கியது ரசிகர்களையா? தயாரிப்பாளரையா?
Prakambanam

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • நாயகனின் பாட்டியுடைய ஆவி நாயகனின் நண்பன் மீது புகுந்து கொள்ள காரணமே சரியாக சொல்லப்படவில்லை. நமக்கு எழும் இந்த சந்தேகத்தை நாயகனின் நண்பன் நாயகனிடம் கேட்பது போல சீன் இருக்கு, ஆனால் காரணம் தான் சொல்லப்படவில்லை.

  • பாட்டி தன்னைக் கொலை செய்த கொலைகாரனைக் கொலை செய்ய காலேஜ் ஹாஸ்ட்டல் வந்து என்ன பயன்? கொலைகாரன் இருப்பது பாட்டி வசித்த லொக்கேஷனில்.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கலகலப்பான காமெடி ஹாரர் டிராமா பார்க்க நினைப்பவர்கள், பேய்ப்பட ரசிகர்கள் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com