விமர்சனம் - வெஞ்சென்ஸ் - பழிவாங்கியது ரசிகர்களையா? தயாரிப்பாளரையா?

Vengeance
Vengeance
Published on
ரேட்டிங்(2 / 5)

அபர்ணதி, Y.G மஹேந்திரன், ஜான் விஜய் நடிப்பில், ராகுல் அசோக் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் வெஞ்சென்ஸ் (Vengeance).

வேணி (அபர்ணதி) என்ற பத்தாவது படிக்கும் பெண்ணிற்கு தன்னை யாராவது புகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக கஷ்ட்டப்பட்டு படித்து பத்தாவது பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறுகிறார். இந்த புகழ் தரும் மோகத்தால் இன்னும் போராடி படித்து கலெக்டர் ஆகிறார். கலெக்டர் ஆக இருந்து கொண்டு மக்களுக்கு பல நன்மைகள் செய்கிறார். இதனால் பல அரசியல் எதிரிகள் வேணிக்கு உருவாக்கிறார்கள். ஆனால் பிரதமர், வேணிக்கு ஆதரவு தந்து ஆலோசகராக வைத்துக் கொள்கிறார். இது உட்கட்சி, எதிர்கட்சி என பலருக்கு பிடிக்கவில்லை. மாதவ் என்ற அரசியல்வாதி வேணியை கொல்ல முயற்சி செய்கிறார். இந்த முயற்சி வெற்றி பெற்றதா? என்று சொல்கிறது இந்த கதை.

படத்தின் தொடக்கம் ஒரு மாறுபட்ட படத்தை பார்க்க வந்த உணர்வை தருகிறது. அதன் பிறகு கலெக்டர், அரசியல் ஆலோசகர் முன்னால் முதல்வர் மகள் என்ற பல கதைகளை படத்தில் வைத்து எதை தொடர்வது என்ற குழப்பத்தை தருகிறது. லிவிங்ஸ்டன், ஜான் விஜய் இருவரும் வில்லத்தனம் செய்கிறேன் என்று சிரிக்க வைக்கிறார்கள். Y.G. மஹேந்திரன் படத்தின் தொடக்கத்திலும் கடைசியிலும் மட்டும் வந்து செல்கிறார்.

படத்தில் வரும் பல காட்சிகள் பெரிய ஹீரோ நடிக்க வேண்டிய படம் போல் இருப்பதும் ஒரு குறை. "இவன் அடிச்ச பத்து பேரும் டான் தான்" என்ற ரேஞ்சில் ஹீரோயின்க்கு பில்டப் தருகிறார்கள். இந்த படத்தில் வேணி கேரக்டர்க்கு நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 'கெணத்த காணோம்' இல்ல கதையை காணோம்!
Vengeance

படத்தில் ஒன் அண்ட் ஒன்லி பாராட்ட பட வேண்டிய விஷயம் வேணியாக நடிக்கும் அபர்ணதியின் நடிப்பு மட்டும் தான். கலெக்டராக வரும் போதும் அரசியல் சதுரங்கத்தில் காய் நகரத்தும் போது அபர்ணதி நடிப்பு சபாஷ் போட வைக்கிறது. சிறந்த நடிப்பு அளவிற்கு கதை சரியாக இருந்திருந்தால் இவரது நடிப்பு பேசப்பட்டிருக்கும்.

படத்தின் இசை கார்த்திக் ராஜா. இவரை விட அதிகம் ஸ்கோர் செய்வது இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்த அருண் ராஜா தான். வெஞ்சென்ஸ் (பழிவாங்குதல்) என்ற தலைப்பிற்கும் உள்ளே உள்ள கதைக்கும் என்ன தொடர்பு என்று யோசித்தால் படம் முடிந்த பின்பு தான் புரிந்தது, பழி வாங்கியது ரசிகர்களாகிய நம்மையும், இந்த படத்தின் தயாரிப்பாளரையும்தான் என்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com