இன்று ஓடிடியில் வெளியாகும் 'புஷ்பா 2' ரீலோடட் வெர்ஷன்! வீகெண்ட் விருந்து டோய்!

நெட்பிளிக்ஸில் புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
pushpa 2
pushpa 2
Published on

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான ‘புஷ்பா 2’ படம் கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் தற்போது வரை வசூலை குவித்து வருகிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கடும் எதிர்ப்பு எதிரொலி - நடிகை ராஷ்மிகாவின் நடன காட்சி நீக்கம்
pushpa 2

சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் ரிலீசான முதல் நாளே ரூ.294 கோடி வசூலித்தது. இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது புஷ்பா 2.

அதுமட்டுமில்லாமல் குறுகிய காலத்திலேயே ரூ.1000 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 32 நாட்களில் இது வரை ரூ.1831 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் இணைந்த பிரபல நடிகை
pushpa 2

ஐதராபாத்தில் உள்ள தியேட்டரில் ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமீனில் வந்துள்ளார். இதன் பின்னர் நடந்த பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்கு மத்தியிலும் ‘புஷ்பா 2’ வசூல் குவிப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கடந்த 11-ம்தேதி மேலும் 20 நிமிட காட்சியை படக்குழு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 3 மணிநேரம் 20 நிமிடம் கொண்ட இந்த படம் 20 நிமிட காட்சிகளை சேர்ப்பதன் மூலம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும்.

இதையும் படியுங்கள்:
"இது எதையும் நீங்க செய்ய போறது இல்ல..." அனைவர் வாயையும் அடைத்த ஸ்ருதிஹாசன்
pushpa 2

வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. நெட்பிளிக்ஸில் புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com