மீண்டும் பிக்பாஸ் 8ல் சாச்சனா… ரசிகர்கள் உற்சாகம்!

 Sachana reentry in BB 8
BB 8
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பிக்பாஸ் சீசன் 8 தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளேயே சாச்சனா எவிக்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்றைய ப்ரோமோவில் மீண்டும் அவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸில் கடந்த 7 சீசன் கமலஹாசனால் தொகுக்கப்பட்டு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது. இதனையடுத்து விஜய் சேதுபதி தொகுக்கும் இந்த சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. அந்த அத்தனை சந்தேகங்களையும் விஜய் சேதுபதி முதல் நாளே உடைத்துவிட்டார்.

இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இருவீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இதில் 24 மணி நேரத்திற்குள் ஒரு எவிக்ஸன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் பலர் சாச்சனாவை நாமினேட் செய்தார்கள். இதனால் அவர் ஒரு நாளுக்குள்ளையே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் சாச்சனாவை எவிக்ட் செய்தது குறித்து பலர் பேச ஆரம்பித்தனர். அதாவது சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ததால் மட்டும் எப்படி எவிக்ட் செய்ய முடியும் என்றும், போட்டியே வைக்காமல் ஒரு போட்டியாளரை எப்படி வெளியேற்ற முடியும் என்றும் கருத்துக்கள் எழுந்தன. மேலும் பல கனவுகளுடன் வந்த சாச்சனாவை இப்படி அனுப்பியது நியாயமே இல்லை என்றும் பரவலாக பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ராஜா ராணி 3 சீரியலில் மீண்டும் இணையும் ஜோடி!
 Sachana reentry in BB 8

இதனையடுத்து இன்றைய ப்ரோமோவில் சாச்சனா யாருக்கும் தெரியாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து உட்கார்ந்திருக்கிறார். அது தெரியாமல் விஜே விஷால் உள்ளே வருகிறார். பெரிய ஷாக்குடன் அவரை வரவேற்கிறார்.

பின் வீக் போட்டியாளர்கள் என்று சாச்சனா மூவரை கூறுகிறார். அந்த மூவரில் தனக்கு யார் மிகவும் வீக் என்று சொல்வதற்குள் ப்ரோமோ முடிகிறது. இதனையடுத்து சாச்சனா இதையெல்லாம் சொல்லிவிட்டு போய்விடுவாரா அல்லது மீண்டும் பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்குவாரா போன்றவற்றை இன்றைய எபிசோடில் முழுவதுமாகப் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com