ரூம் 418-ஐ திறக்காதீங்க! மிரள வைக்கும் கன்னட ஹாரர் திரில்லர் '418' விமர்சனம்!

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு யட்சகான பின்னணியில் உருவாகியுள்ள படம்.
418 விமர்சனம்
418 விமர்சனம்
Updated on: 
ரேட்டிங்(3.5 / 5)

கிர்டன் நாககுடா இயக்கத்தில் கன்னடத்தில் இருந்து வெளிவந்திருக்கும் படம் 418. கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் சூரிய ராஜ் வீரபத்தினி மாணவராக சேர்கிறார். ஹாஸ்டல் நிர்வாகம் 417 என்ற அறையை இவருக்கு தருகிறது. அருகில் இருக்கும் 418 என்ற அறையை எக்காரணம் கொண்டும் திறக்க முயற்சிக்கக் கூடாது. திறந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று பயமுறுத்தி வைக்கிறது.

இவருடைய ரூம் மெட்டாக இருப்பவர் சரண் லாக் ராஜு. சில நாட்களில் சூரிய ராஜிக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இது எல்லாம் இதற்கு முன் நடந்த காரணம் என்று சொல்கிறார். ஆனால் இதை சரண் லாக் ராஜு நம்ப மறுக்கிறார். இருந்தாலும் சூரியராஜ் கடந்த காலத்தில் ஏதோ ஒரு விஷயம் நடந்துள்ளது அதுதான் இன்று அமானுஷ்யமாக வந்து கொண்டிருக்கிறது என்று அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க செல்கிறார்.

25 வருடங்களுக்கு முன்பு தேவிகா என்ற பெண்ணுக்கு நடந்த ஒரு விஷயமும் தற்போது நடக்கும் அமானுஷ்யத்திற்கும் தொடர்பு உள்ளது என்று கண்டுபிடிக்கிறார். அது கண்டுபிடித்த பின் என்ன ஆனது அந்த தேவிகா யார் என்று கதை சொல்கிறது

முக்கோண கதையும் நேர்த்தியான திரை கதையும்… 

ஒரு நல்ல படத்தில் இலக்கணம் என்பது படம் தொடங்கி முதல் 10 நிமிடங்களில் இந்த படம் இதைப்பற்றி தான் பேசப்போகிறது. இதுதான் இந்த படத்தின் பிரச்சனை என்று தெளிவாக சொல்லி விட வேண்டும் என்பார்கள் ஹாலிவுட் காரர்கள். அதே பாணியை இப்படத்தின் இயக்குனரும் பின்பற்றி முதல் 10 நிமிடங்களில் தெளிவாக கொண்டு வந்து விடுகிறார். அதன் பிறகு நடக்கும் எல்லா விஷயங்களும் ஒருவித பயத்துடனும் பரபரப்புடனும் நகர்ந்து செல்கின்றன. ஹாரர், உளவியல், திரில்லர் என்ற மூன்று விஷயத்தையும் ஒரு முக்கோண கதை போல சரியாக அணுகியிருக்கிறார் டைரக்டர். இதற்கான திரை கதையையும் தெளிவாக தந்திருகிறார். ஆங்காங்கே பயமுறுத்தும் சில விஷயங்கள், மனிதர்கள் என கதை நன்றாக செல்கிறது கதை. கர்நாடக மாநிலத்தின் யட்சகானம் எனும் நாட்டுப்புற ஆடல் வடிவத்தை கதையுடன் இருக்கிறார் டைரக்டர்.

ஒளிப்பதிவு சிறப்பு... 

பொதுவாக ஹாரர் படங்களில் ஒளிப்பதிவில் இருட்டை மட்டும் காட்டி பயமுறுத்துவார்கள். 418 படத்தில் தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவில் பகல் நேர காட்சிகள் கூட நம்மை பயமுறுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதி - சாய் நடித்துள்ள 'பத்தா' விமர்சனம்: பயம் கலந்த சிரிப்பு விருந்து!
418 விமர்சனம்

நடிப்பு சபாஷ்...

குழந்தை இல்லை என்ற ஆற்றாமை அவமானம் இதனால் ஏற்படும் மன உளைச்சல் இவற்றை சரியாக உள்வாங்கி சிறப்பான நடிப்பை தந்துள்ளார் சைத்ரா ஆச்சர். இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். படத்தில் பின் பாதையில் சைத்ரா வந்தாலும் படம் முழுவதும் வியாபித்து நிற்கிறார். சூரியராஜ், சரண் லாக் ராஜு இருவரில் சூரியராஜ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். பயம் கலந்த ஒரு உணர்வை இவர் முகத்தில் காட்டும்போது பார்வையாளர்களான நமக்கே சற்று பயம் வருகிறது. பரபரப்பாக செல்லும் படத்திற்கு சிறிது நகைச்சுவையும் தந்திருக்கிறார் ஸ்ரீ வைஷ்ணவ்.

வெங்கி GG இசையில் இரண்டு தாலாட்டு பாடல்கள் நம்மை நெருடுகின்றன. பின்னணி இசை என்பது ஒரு ஹாரர் படத்திற்கு எப்படி இருக்க வேண்டும் என்று சரியாக உணர்ந்து அளவாக தந்திருக்கிறார் வெங்கி.

418 விமர்சனம்
418 விமர்சனம்

ஜஸ்ட் ஒரே ஒரு குறை..

இந்த படத்திலும் ஒரு குறை உள்ளது அது என்னவென்றால் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் முடிவு நாம் எதிர்பார்த்தது போன்று இருப்பது ஒரு குறை தான் மேலும் முடிவை இன்னும் ஆழமாகவும் சொல்லி இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதி இயக்குநர் கூட்டணியில்... ஹன்சா என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட 4 அதிரடிப் படங்கள்!
418 விமர்சனம்

இறுதியாக..

இந்த 418 இந்த படத்தை நீங்கள் பார்க்கும் போது கண்டிப்பாக ஒரு மாறுபட்ட திரில்லர் அனுபவம், ஹாரர் அனுபவம் சேர்ந்து கிடைக்கும். இந்த படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்கும் பொழுது தான் ஒரு முழுமையான திரை அனுபவத்தை உணர முடியும் இப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு படம் கன்னட தேசத்திலிருந்து வந்துள்ள இந்த 418 படத்தை நாம் பார்த்து மகிழலாம் சிறிது பயப்படவும் செய்யலாம்.

வாசகர்கள் திரையரங்கில் ஒரு புதிய ஹாரர் மற்றும் உளவியல் திரில்லர் அனுபவத்தைப் பெற எந்தெந்த அம்சங்கள் உதவுகின்றன என்பதை முழுமையாக 418 விமர்சனம் மூலம் அறிந்து கொள்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com