அதர்வா நடிப்பில் வெளியாக உள்ள DNA படம்!

Actor Atharvaa DNA movie
Actor Atharvaa DNA movie
Updated on

டிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியான மத்தகம் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் DNA என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேஷன். இந்த ஆண்டு நெல்சன் வெங்கடேஷன் இயக்கிய பார்ஹானா திரைப்படம் பெண்ணிய சிந்தனை கொண்டவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் அதர்வாவை வைத்து DNA என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் போஸ்டர் இப்போது வெளியாகி உள்ளது டாடா படத்தை தயாரித்த அம்பேத்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் பார்க்கும் போது ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் படமாக இருக்கும் போல தெரிகிறது. இது மெடிக்கல் கிரைம் வகையாக இருக்கலாம் என்கிறது சினிமா வட்டாரம்.

ஆக்ஷன் த்ரில்லர் கதையின் நாயகனாக உருவாகிறார் அதர்வா. மாறுபட்ட கதைபடங்களை தயாரிப்பவர் அம்பேத்குமார். வித்தியாச மான படங்களை இயக்குபவர் நெல்சன் வெங்கடேஷன். இந்த மூவர் கூட்டணியில் உருவாகும் DNA அடுத்த  2024  ஆண்டின் மிக முக்கிய படமாக என்ற எதிர் பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் நிமிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com