ரஜினி படத்தை ரீ-மேக் செய்ய ஆசைப்பட்ட தளபதி! எந்தப் படம் தெரியுமா?

Vijay
Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என அழைக்கப்படும் இளைய தளபதி விஜய், தற்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இப்படமே அவரது சினிமா பயணத்தில் கடைசி படமாகவும் இருக்கப் போகிறது. இதற்குப் பின் முழுநேர அரசியல்வாதியாக விஜய் திகழப் போகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தை ரீ-மேக் செய்து நடிக்க மிகவும் ஆசைப்பட்டுள்ளார் விஜய். அரசியல் கட்சியைத் தொடங்கி விட்டதால் இனி இந்த ஆசை நிறைவேறும் வாய்ப்புகள் குறைவு தான். விஜய் ரீ-மேக் செய்ய நினைத்த அந்தப் படம் எது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா! வாங்க தெரிந்து கொள்ளலாம்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நுழையும் போது ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை. இவரது தந்தை இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் என்ற ஒரு அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு சினிமா பயணத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் தோல்விப் படங்களைக் கொடுத்தாலும், செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் மக்களுக்கு பரிட்சையமானார் விஜய். இப்படத்திற்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய விஜய், இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வளர்ந்து நிற்கிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படம், நல்ல வசூலைப் பெற்றுத் தந்தது.

தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் மீது இப்போதிருந்தே எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒரு படத்தை விஜய் ரீ-மேக் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இந்தத் தகவலை காமெடி நடிகர் சதீஷ் பகிர்ந்துள்ளார்.

ஒருமுறை சதீஷ் நடிகர் விஜய்யிடம் “நீங்கள் ரஜினியின் எந்தப் படத்தை ரீ-மேக் செய்ய விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டுள்ளார். அதற்கு உடனே "அண்ணாமலை" எனப் பதிலளித்து இருக்கிறார் விஜய். பாட்ஷா படத்தைத் தான் விஜய் சொல்வார் என எதிர்ப்பார்த்த சதீஷுக்கு, விஜய்யின் பதில் சற்று ஆச்சரியமாகவே இருந்துள்ளது. ஆகையால் அதற்கான காரணத்தையும் கேட்டறிந்துள்ளார். அண்ணாமலை படம் ஒரு தங்கை, அம்மா பாசம் மற்றும் எதிரியாகும் நண்பன் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாதாரண மனிதன் எப்படி வாழ்வில் வெற்றி பெறுகிறான் என்பதைப் பற்றி பேசுகிறது. இந்தப் படம் தான் எனக்கு சரியாக இருக்கும் என விஜய் பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்:
நடிகர் சசிகுமாரின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?
Vijay
Remake Film
Vijay

விஜய் நடிப்பில் ரஜினியின் அண்ணாமலை திரைப்படம் வெளிவருமா என்பது சந்தேகம் தான். ஒருவேளை அரசியலில் இருந்து கொண்டும் விஜய் படங்களில் நடித்தால், எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றிப் படங்கள். இதில் குறிப்பாக அண்ணாமலை படத்தை மட்டும் ரீ-மேக் செய்ய விஜய் ஆசைப்பட்டதில் கூட ஒற்றுமை இருக்கிறது. அதாவது பகவதி படத்தில் சைக்கிள் ஓட்டிய காட்சிகளும், துண்டைப் பயன்படுத்தும் காட்சிகளும் அண்ணாமலைப் படத்தோடு ஒத்துப் போகிறது அல்லவா!

logo
Kalki Online
kalkionline.com