
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியான சில நிமிடங்களில் இந்த பதிவு வந்தது. இவர் சமீபத்தில் தனது செல்ல நாய் சாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில், ஃபர்பால் அவள் மடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். "சாஷா காதலைப் போல் காதல் இல்லை" என்று தலைப்பு எழுதப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த நெட்டிசன்களோ இந்தப் பதிவில் மறைமுகமாக நாக சைதன்யாவை சமந்தா சீண்டியிருக்கிறாரோ என்று கமென்ட் செய்துவருகின்றனர்.
கடந்த வெள்ளியன்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில், "ஆண்டு நிறைவடையும் போது, எங்கள் பயணத்தை வடிவமைத்த ஏற்ற தாழ்வுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறோம். சவால்கள் முதல் வெற்றிகள், வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் தருணங்கள் வரை, நீங்கள் என்னை ஒரு ஒளிரும் நட்சத்திரத்தைப் போல இறுதிவரை செய்திருக்கிறீர்கள்! ஆண்டு நம்மைச் சோதித்தது, ஆனால் அது நமக்கு வலிமை, பின்னடைவு மற்றும் விடாமுயற்சியின் அழகு ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தது." என்று பதிவிட்டுள்ளார்.
நாக சைதன்யாவின் திருமண நாளில், சமந்தா இன்ஸ்டாகிராமில் அமெரிக்க நடிகை வயோலா டேவிஸ் வெளியிட்ட வீடியோவை பகிர்ந்தார். அந்த வீடியோவில் ஒரு சிறுமி தனது எதிரியான சிறுவனும் சண்டை போடும் காட்சியும் இறுதியில் சிறுமி வெற்றி பெற்று சிறுவன் அழுவதுபோன்ற காட்சியும் இடம்பெற்று இருந்தது.
ஒரு பெண்ணைப் போல் சண்டையிடுங்கள் "#FightLikeAGirl"என்ற ஹேஷ்டேக்குடன் இந்த வீடியோவை சமந்தா பகிர்ந்துள்ளார். இது வைரலாகிறது.
சமந்தா பகிர்ந்த வீடியோவை பார்த்த பலரும் முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்தை மறைமுகமாக சமந்தா சாடி உள்ளதாக பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
அதோடு நாக சைதன்யா, சமந்தா திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தையும் சிலர் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் சிலர் வைரத்தை நாக சைதன்யா இழந்து விட்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 2017-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டு 2021-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார்.