நம்ம 'தல' அஜித், 'படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் டாப் ஹீரோ'! - கொண்டாடும் ரசிகர்கள்!

Ajith kumar
Ajith kumar
Published on

ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்ற அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் எது செய்தாலும் அதை இவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி விடுவார்கள். அப்படி தான் இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் புதிய படமான விடாமுயற்சி கடந்த 6-ம்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாகவும், அஜித் குமாரின் சம்பளம் ரூ.110 முதல் ரூ.120 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
2 ஆண்டுகளுக்கு பிறகு ரீலிஸ் - அஜித்தின் 'விடாமுயற்சி'க்கு பலன் கிடைக்குமா?
Ajith kumar

அஜித்குமார் தான் ஒப்பந்தம் செய்த படங்களில் படப்பிடிப்புகளை எல்லாம் முடித்து விட்டு தற்போது கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட உள்ளதால் அக்டோபர் மாதம் வரை படங்களில் நடக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கரர் பயிற்சிக்கு நடுவே அவர் செய்த ஒரு சம்பவம் இப்போது மக்கள் மத்தியில் அவரின் இமேஜை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே அன்பானவர், மனிதாபிமானம் மிக்கவர் என்று பலராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அஜித்தின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் பெருமையை அளித்துள்ளது.

அதாவது அஜித்குமாரின் வீடியோ ஒன்று வைராலாகி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. அந்த வீடியோவில், கார் பந்தய உடையில் இருக்கும் நடிகர் அஜித் தயக்கமின்றி, கீழே குனிந்து ஒரு இளம் பெண்ணுக்கு ஷூ லேஸ் கட்ட உதவுகிறார். அப்போது அவர் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதும், சிரித்துக்கொண்டே இருப்பதும் வீடியோவில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: விடா முயற்சி - முற்றிலும் திருவினையாக்கவில்லை!
Ajith kumar

தான் டாப் ஹீரோ என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அன்பாக நடந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் 'படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் டாப் ஹீரோ' என்று அவரது ரசிகர்கள் அஜித்தை புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் நடிகர் அஜித்துக்கு தெரியாமல் எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைராலானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கருத்துக்களால் இணையதளத்தை திணறடித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், 'உலக அதிசயங்களில் ஒன்று' என்றும், மற்றொரு பயனர், 'அருமை' என்றும், 'அவர் உண்மையான ஹீரோ, அவரை சுற்றியுள்ள மக்களிடம் மிகவும் அன்புடன் நடந்து கொள்கிறார்' என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் அஜித்குமாருக்கு கார், பைக் ரேஸ் மீது அலாதி பிரியம். பல ஆண்டுகளாக பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தியத்தில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பிடித்து உலக அரங்கில் தன் அணியை மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
வத்திக்குச்சி பத்திக்காதுடா… தியேட்டரில் மீண்டும் வருகிறது… அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்!
Ajith kumar

இதையடுத்து கலையுலகில் அவர் செய்த சாதனைகளை பாராட்டி மத்திய அரசு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. இந்த தருணத்தை தனது மறைந்த தந்தை நேரில் பார்த்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக அஜித் பகிர்ந்து கொண்டார். மேலும் விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com