அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸாகவுள்ள நிலையில், தீனா படத்தில் வரும் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலை மீண்டும் அஜித்தின் மற்றொரு படத்தில் வைக்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். வாருங்கள் எந்தப் படம் என்று பார்ப்போம்.
அஜித்தின் விடாமுயற்சி கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் கடந்த மார்ச் மாதம் வெளியானது.
அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டது. மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்தப் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழுத் தெரிவித்தது.
ஆனால், விடாமுயற்சி படமே வரும் 6ம் தேதிதான் ரிலீஸாகவுள்ளது. அப்படியென்றால் குட் பேட் அக்லி எப்போது ரிலீஸாகும் என்பது தெரியவில்லை.
இயக்குனர் ஆதிக் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்குப் பிறகு தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்தநிலையில் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வசூலை ஈட்டியதால், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இந்தப் படத்தில் பஞ்சுமிட்டாய் சேல கட்டி பாடல் பயன்படுத்தப்பட்டது. இதுதான் படத்தின் பெரிய ப்ளஸாக அமைந்தது. தியேட்டரில் இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், படமும் நல்ல வசூலை செய்தது.
இதனால், ஆதிக் மீண்டும் இந்த ட்ரிக்கை கையில் எடுக்கிறார். ஆம்! அதாவது இப்படத்தில் அஜித்தின் தீனா படத்தில் அனைவரையும் ஆட்டம் போட வைத்த வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.
குட் பேட் அக்லி படத்தில் மட்டும் இந்த பாடல் வந்தால், அவ்வளவுதான் அஜித் ரசிகர்கள் இதை தியேட்டரில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் குட் பேட் அக்லி படம் இந்தப் பாடல் மூலமாகவே டபுள் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.