​மே 1-ல் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்...ஆனால் இது படமல்ல.! அதுக்கும் மேல.!

Ajith kumar racing team
Ajith kumar racing team
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கிறார். இதன் காரணமாக அவருடைய அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற மார்ச் 20 ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 17ஆம் தேதி வரை, அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும் கார் பந்தயங்கள் குறித்த முழு அட்டவணை சமீபத்தில் வெளியானது.

இதன் காரணமாக அடுத்த ஓராண்டு காலம் நடிகர் அஜித் படப்பிடிப்பில் ஈடுபட மாட்டார் என்று தெரிகிறது. ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் நடிகர் அஜித் கலந்து கொள்ள இருப்பதால், புதிய படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அஜித்தின் கார் ரேஸிங் தொடர்பான ஆவணப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது

அஜித் குமாரின் 64 வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கவிருந்த நிலையில், ரேஸிங் பந்தயம் காரணமாக தற்போது வரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்நிலையில் அடுத்த ஓராண்டிற்கு அஜித்குமார் கார் ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தவிருப்பதால், படப்பிடிப்பு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி இந்த வருடம் அஜித்தின் எந்த படமும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கினால், அந்தப் படம் வெளியாக இன்னும் காலதாமதம் ஏற்பட்டு விடும். இதன் காரணமாக அடுத்த இரண்டு வருடங்களுக்கு திரையரங்குகளில் அஜித்தின் எந்தப் புதிய படமும் வெளியாகாது என்ற அதிருப்தியில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இருப்பினும் அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருடைய பிறந்தநாளான மே 1-ம் தேதி அஜித்தின் கார் ரேஸிங் தொடர்பான ஆவணப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அஜித்தின் புதிய படம் வெளியாகவில்லை என்றாலும், கார் ரேஸிங் தொடர்பான அனுபவங்கள் குறித்த டாக்குமென்ட்ரி ஆவணப்படம் வெளியாவது ரசிகர்களுக்கு சற்று மகிழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அஜித் குமாரின் பழைய படங்கள் ரி-ரிலீஸாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
IPL 2026 புது விதிகள்: இனி ஒரு அணி 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்..
Ajith kumar racing team

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும், ஏப்ரல் மாதத்தில் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியானது. இந்நிலையில் அஜித்தின் கார் பந்தயப் பயணத்தைத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்புத் திரைப்படம், அவரது பிறந்தநாளான மே 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்தின் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் இருப்பது உண்மைதான். இருப்பினும் அவரது ரேஸிங் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஆவணப் படங்கள் மூலம் அவர் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி தபால்கள் மின்னல் வேகத்தில்! அஞ்சல் துறையின் புதிய சேவை அறிமுகம்..!!
Ajith kumar racing team

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com