என் 1.5 வருஷ உழைப்பு போச்சு..! நான் நடிச்ச காட்சி நீக்கம் - கண்கலங்கிய ‘ஜனநாயகன்’ நடிகை!

ஜனநாயகன் படத்தில் என் உழைப்பு வீணாகிவிட்டது என்று கூறி நடிகை ஆனந்தி வெளியிட்டுள்ள வைரல் வீடியோ.
Anandhi disappointed
Anandhi crying AajTak
Updated on

சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆனந்தி. சமீபகாலமாக இவர் நடித்துள்ள திரைப்படங்களில் , இவர் நடித்துள்ள காட்சிகள் திரைக்கு வரும் போது நீக்கப்படுவது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வழக்கமாக இது போன்ற சூழல்கள் ஏதேனும் ஒரு முறை தான் வரும். ஆனால் , ஆனந்திக்கு இந்த பிரச்சனை ஒவ்வொரு திரைப்படத்திலும் வருகிறது என்பது தான் சோகம். ஜனநாயகன் வெளியீட்டில் தன்னுடைய காட்சிகள் இடம்பெறும் என்று , திரையில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து தான் நடித்த காட்சிகளைக் கண்டு மகிழலாம், என்றும் ஆவலோடு சென்ற ஆனந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

​ஆனந்திக்கு இது முதல்முறையாக நடக்கவில்லை. ​சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை 29 திரைப்படம் பெற்றது. ரத்னகுமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஆனந்தி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் , படம் வெளியிடப்பட்ட போது , அவர் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தது. இது போலவே சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகிய கருப்பு திரைப்படத்தில் கூட, ஆனந்தி ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

கருப்பு திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானாலும் , அதில் ஆனந்தி நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஆனந்தி நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு இருந்தாலும் , அவர் அதற்கு பெரிதாக வருத்தப்பட வில்லை. அதில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தினை தாங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

தற்போது முதல்வர் விஜய்யின் இறுதித் திரைப்படமாக 'ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு கொண்டாட்டம் ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் போது, ஆனந்தி மட்டும் தான் நடித்துள்ள காட்சிகள் அந்த திரைப்படத்தில் இல்லாததால் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஆனந்தி நடித்துள்ள காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது , அவருக்கு பெரிய வேதனையை தந்துள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்தி மிகுந்த ஆவலோடு காத்திருந்தார். ஆனால் , தான் நடித்த காட்சிகள் திரையில் இல்லாததைக் கண்டு வேதனையடைந்த அவர் , இது குறித்து வீடியோ வெளியிட்டு தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Anandhi in Jananayagan
Anandhi Vijay

அந்த வீடியோவில் "நான் பல படங்களில் நடித்திருந்தாலும், பல திரைப்படங்களில் நான் நடித்துள்ள காட்சிகள் நீக்கப்பட்டதை கண்டு பெரிய அளவில் வருந்தியதில்லை. ஆனால், என் கனவுத் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தில் என்னுடைய உழைப்பும் எதிர்பார்ப்பும் இப்படி வீணானபோது, என்னை நினைத்து நானே மிகவும் அதிர்ஷ்டமில்லாதவளாக உணர்கிறேன்" என்று ஆனந்தி கண்கலங்கி கூறியுள்ளார்.

மேலும் அவர் , "நான் திரைப்படங்களுக்கு நடிக்க வந்ததே தளபதி விஜய்யுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தினால் தான் " என்று கூறியிருந்தார். ​'ஜனநாயகன்' திரைப்பபடத்தில் பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளார். ஜனநாயகன் மிகப்பெரிய வெற்றி பெற்றதில் , தனக்கு மகிழ்ச்சி தான் என்றும் கூறியுள்ளார்.

இனி விஜய் சார் நடிக்கவிருக்கும் படங்களில் எப்படியாவது நடித்துவிடலாம் என்று கூட நினைக்க முடியாது. ஏனெனில், இதுதான் அவருடைய கடைசித் திரைப்படம்! ​"நான் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவளாக உணர்கிறேன்"என்று அவர் கண்ணீருடன் உருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ள வரிகள் காண்பவரை கலங்க வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மிஷ்கினுக்கு முத்தம் கொடுத்த மக்கள் செல்வன்... மேடையிலேயே வெளிப்பட்ட அந்த மிகப்பெரிய ரகசியம்!
Anandhi disappointed
இதையும் படியுங்கள்:
'ஜன நாயகன்' விமர்சனம்: தளபதியின் கடைசிப் படம் உண்மையிலேயே வென்றதா? முழு அலசல்!
Anandhi disappointed
logo
Kalki Online
kalkionline.com