

தனுஷை தவிர்க்கும் அனிருத் காரணம் என்னவாக இருக்கும் என்று? தனுஷ் ரசிகர்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் அனிருத் சன் பிக்சர்ஸ் மற்றும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காலநிதி மாறனின் மகளை மணந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவரது மனைவி காவ்யா மாறன் பெரிய பெண் தொழிலதிபர் மட்டுமின்றி , பிரபலமான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளரும் கூட.
இவர்களின் திருமண நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான முறையில் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கிரீஸில் நடைபெற்ற அனிருத்தின் திருமண கொண்டாட்டங்களில் , நடிகர் தனுஷ் இதுவரை கலந்து கொள்ளவில்லை.
தற்போது சென்னையில் நடைபெற உள்ள அனிருத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வாரா? என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாகவும் இருக்கிறது. இதன் பின்னணியில் இசையமைப்பாளர் அனிருத் , தான் இசையமைக்க வந்து 15 வது வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிக்கையில் தனது முதல் இசை வாய்ப்பு கிடைத்து இன்றுடன் 15 வருடம் நிறைவடைந்துள்ளது, என்று ஆரம்பித்துள்ளார். அந்த அறிக்கையில் பொதுவாக பலருக்கும் நன்றி தெரிவித்திருந்த அனிருத், எந்த இடத்திலும் நடிகர் தனுஷின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால், தனுஷின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.
அனிருத்திற்கு முதன் முதலாக இசையமைக்கும் வாய்ப்பினை வழங்கியவர் நடிகர் தனுஷ். தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'மூனு' திரைப்படத்தின் மூலமாக அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தனுஷ் எழுதிய 'ஓய் திஸ் கொலவெறி ' பாடலின் மூலம் அனிருத் தமிழகம் முழுக்க பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து மாரி, வேலை இல்லா பட்டதாரி , தங்க மகன் , திருச்சிற்றம்பலம் உள்பட பல தனுஷ் திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால் ,அனிருத் தனது அறிக்கையில் தனுஷின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். திரைப்படங்களையும் தாண்டி , தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மூலம் , தனுஷும் அனிருத்தும் உறவினர்களாக மாறியிருந்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமீபத்திய பேட்டியில் கூட , "அனிருத்தின் இசை மீதான ஆர்வத்தையும் அவருக்கு உள்ள திறமையையும் முதலில் அறிந்து கொண்டவர் தனுஷ் தான். வெளிநாட்டில் படிக்க திட்டமிடப்பட்டிருந்த அனிருத்திற்கு கீ போர்ட் ஒன்றை வாங்கி கொடுத்து, அவரது ஆர்வத்தை அங்கீகரித்ததோடு அவரது வீட்டிலும் அனிருத் இசையில் பெரிய ஆளாக வருவார், என்று நம்பிக்கை கொடுத்து இசையமைக்க வாய்ப்பு கொடுத்தவர் தனுஷ்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
தனுஷ் - அனிருத் கூட்டணி DNA இன்று ரசிகர்களால் சுருக்கமாக அழைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிரீசில் நடைபெற்று இருந்த அனிருத் திருமணத்திற்கு தனுஷ் வராததற்கு 'ஓம்' படத்தின் பிரமோஷனில் அவர் பிசியாக இருப்பதால் கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைத்திருந்தனர்.
இந்நிலையில் 'வலைப்பேச்சு அந்தணன்' யூ ட்யூப் சேனலில், அனிருத்தின் திருமண வரவேற்பிற்கு தனுஷிற்கு அழைப்பிதழ் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார். இதனால், அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் தனுஷ் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி அதிகாரப்பூர்வமாக யாரும் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.