

தண்ணீர் மாத்தன் தினங்கள் (2019) என்ற பிரமாதமான பீல் குட் மூவியை தன் முதல் படமாக இயக்கிய இயக்குனர் கிரிஷ் ஏ டி ஒரு வித்தியாசமான இயக்குநர். சாதாரண மனிதர்களின் கதையை ஜனரஞ்சகமாக சொல்வதில் வல்லவர். இவரது இரண்டாவது படமான சூப்பர் சரண்யா(2022) வும் ஹிட் தான் என்றாலும் இவர் தெலுங்குப்பட டைட்டில் மாதிரி வைத்த பிரேமலு(2024) என்ற மலையாளப்படத்தின் மூலம் அதிரி புதிரி வெற்றி பெற்றார்.
கலர் படம் (2021) என்ற குறும்படத்தில் நடித்த க்யூட் Face எக்ஸ்பிரசன்ஸ் க்யூன் மமிதா பைஜூ Rebel (2024) என்ற முதல் தமிழ்ப்படம் டப்பா ஆனாலும் ட்யூட்(2025) மெகா ஹிட்டானது. கர(2026), ஜனநாயகன்(2026) இரண்டும் சுமார் ரகப்படங்கள். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (2026) குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படம்.
சர்வம் மாயா(2025), பேபி கேர்ள் (2026), பிரதிசாயா(2026) என்று தொடர்ந்து 3 ஹிட் படங்கள் தந்திருக்கும் நிவின்பாலி கேரளாவில் ஆர்ப்பாட்டம் இல்லாத, பந்தா செய்யாத நல்ல நடிகர்.
இவர்கள் மூவரும் இணைந்திருக்கும் இந்தப்படம் பகத் பாசிலின் சொந்தப்படம். 21/8 2026 முதல் கேரளாவில் ரிலீஸ் ஆகி ஓணம் வின்னர் ஆகி இருக்கும் இந்தப்படம் முதல் 2 நாட்களில் 16 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. தமிழகத்தில் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகி இருக்கிறது. தமிழ் டப்பிங்க் இல்லை.
சம்மர் இன் பெத்லேகம்(1998)ல் ரிலீஸ் ஆகி மெகா ஹிட்டானது. ஜெயராம், மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்த இந்தப்படம் தான் தமிழில் ஷாம், திரிஷா நடிப்பில் வெளிவந்த லேசா லேசா(2003). 28 வருடங்களுக்குப்பின் மலையாளப்பட டைட்டிலில் பெத்லேகம் மீண்டும் இடம் பெறுகிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி பிளஸ் டூ முடித்த 18 வயதுப்பெண். காலேஜில் சேர வேண்டும். அதற்காக புது இடம் மாறுகிறாள். நாயகிக்கு அம்மா, அப்பா, தம்பி மூவரும் உண்டு. நாயகியின் அப்பா குடிகாரர். வறுமை, பணப்பிரச்சனை காரணமாக குடி இருந்த சொந்த வீட்டை விற்று விட்டு வேறு இடம் மாறி வாடகை வீட்டுக்குக்குடி போக இருக்கிறார்கள்.
நாயகன் 30+ வயதான முதிர் கன்னன். (முதிர் கன்னிக்கு ஆண்பால்)கேட்டரிங்க் தொழில் செய்து வருகிறான். ஊருக்குள் நாயகனுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு.
எர்ணாகுளத்தில் குடி இருக்கும் நாயகனின் வீட்டுக்கு அருகே நாயகி குடிவருகிறாள். நாயகி புதிதாகச்சேர்ந்த காலேஜ் கேண்டீன் இன்சார்ஜ் நாயகன் தான்.
நாயகனுடன் ஆரம்பத்தில் நட்பாகப்பழக ஆரம்பித்த நாயகி நாளடைவில் அவனை விரும்புகிறாள். ஆனால் நாயகனுக்குக்குற்ற உணர்வு இருக்கிறது. நாயகியின் காதலை ஏற்கத்தயக்கம் காட்டுகிறான்.
ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியின் காதலுக்கு ஓக்கே சொல்லி விடுகிறான். ஆனால் அதற்குப்பின் இரு குடும்பங்களும் என்ன நிலை எடுத்தது? இருவருக்குமான வயது வித்தியாசத்தை சமூகம் எப்படிப்பார்த்தது? இவர்கள் இணைந்தார்களா? என்பது மீதித்திரைக்கதை.
நாயகனாக நிவின் பாலிக்கு டெய்லர் மேடு ரோல். சர்வம் மாயாவுக்குப்பின் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் இதில் தான் பிரமாதமாகப் பொருந்தி இருக்கிறது.
நாயகியாக. மமிதா பைஜூ ஸ்டீல் த ஷோ. கலக்கி விட்டார். வயதுக்கு மீறிய மெச்சூரிடியை அவர் வெளிப்படுத்தும் விதம், காதலை சொல்லும் பாங்கு, சோகம் என நவரசங்களையும் காட்டி விட்டார். ஜூனியர் நடிகையர் திலகம் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சங்கீத் பிரதாப், வினய் போர்ட் இருவரின் காமெடி களை கட்டுகிறது. இவர்கள் போக நடிகர், நடிகைகளைப் பாராட்ட ஒரு பட்டாளமே வெய்டிங்க் லிஸ்ட்டில் இருக்கிறது. அனைவர் நடிப்பும், டயலாக் டெலிவரியும் அருமை.
விஷ்ணு விஜயின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.. இல்லே இல்ல,மாந்திரீகம் ஆகிய இரு பாட்டுக்களும் மெலோடி ஹிட். பின்னணி இசையும் அருமை.
ஆகாஷ் ஜோசப் வர்கீசின் எடிட்டிங்க் அட்டகாசம். க்ளைமாக்சில் நாயகியின் மாண்ட்டேஜ் ஷாட்களை மட்டும் தொகுப்பாகக் காட்டுவது. அருமை.படத்தின் ரன்னிங்க் டைம் 155 நிமிடங்கள்.
அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு பிரமாதம். நாயகியின் முக பாவனைகளை க்ளோசப்பில் அழகாகக்காட்டுவது,75% சீன்களில் ஒப்பனை இல்லாத தேவதையாய் நாயகி மிளிர்வது இவரது கைங்கர்யத்தில் தான்.
கிரண் ஜோசேவுடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் கிரிஷ் ஏ டி.
சபாஷ் டைரக்டர்
1. சாதாரண ஒன் லைன் கதையில் காமெடியான ரகளையான சம்பவங்கள் சேர்த்து கமர்ஷியலாகக்கதை சொன்ன விதம். பாசிட்டிவ் வைப்ரேஷன் படம் முழுக்க இருக்கிறது. இயக்குநர் விக்ரமன் படம் பார்ப்பது போல் வில்லன் இல்லாத கதை.
2. நாயகனின் தம்பி எடுக்கும் குறும்பட ஷூட்டிங் கலாட்டாக்கள் காமெடி பட்டாசு. டைமிங்க் சென்சுடன் எழுதப்பட்ட வசனங்கள் பிரமாதம்.
3. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் வருவது போலவே இதிலும் ஏஜ் கேப் லவ் ஸ்டோரி. அதில் 41 நாயகன் வயசு. நாயகி வயசு 20. 21 வருடங்கள் வயது வித்தியாசம். இதில் 12 வருடங்கள் வயது வித்தியாசம். ஆனாலும் இதில் ரசிக்கும்படியான காட்சிகள் அதிகம்.
4. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் வருவது போலவே இதிலும் காருக்குள் நாயகன், நாயகி பயணிக்கும் காட்சியில் காதலை வெளிப்படுத்தும் சீன் உண்டு. கவிதையான காட்சி. காரை விட்டு இறங்கியதும் அவர் காட்டும் துள்ளல் நடை செம.
5. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நாயகி கிளாமரன உடையில் வலம் வருவாள். இதில் ஆடை வடிவமைப்பில் அவ்வளவு கண்ணியம், நாகரீகம். ஒப்பனை மிகக்குறைவு.
6. நாயகி நாயகனை ஒரு காட்சியில் கையில் கிள்ளிவிட அப்போது நாயகனின் ரீயாக்சன், சக நண்பர்கள் ரீயாக்சன் செம.
7. நாயகியை ஒருதலையாய் காதலிக்கும் தறுதலையாய் வரும் ஒரு கேரக்டரின் காமெடி அலப்பறைகள் அருமை.
8. நாயகன், நாயகி இருவருக்கும் பிடித்த பொதுவான அம்சமான இசை ,அதை வைத்து வரும் மியூசிக்கல் சீக்வன்ஸ்,அந்தக்கால ஆடியோ கேசட்டை வைத்து வரும் காட்சிகள் ரசிக்க வைத்தது.
9. நாயகனுக்கும், அவனது தம்பிக்குமான பாண்டிங், நாயகி நாயகன் மேல் வைக்கும் அன்பு சொல்லப்பட்ட விதம் இரண்டும் ஆடியன்சுக்கு நல்ல எமோஷனல் கனெக்ட்டைக் கொடுத்தது.
10. க்ளைமாக்சில் நாயகன் காரில் வரும்போது ஒரு பிளாஷ் வரும். நல்ல ஐடியா அது. இயக்குநரின் தாட் பிராசஸ் வியக்க வைத்தது.
11. ஏர்போர்ட்டில் நாயகனின் அத்தை கன்னியாஸ்திரி நாயகனிடம் ஒரு விஷயம் சொல்லும்போது நாயகனின் முக பாவனை பிரமாதம்.
12. கோவாவில் நடக்கும் சீக்வன்ஸ் அருமை. டைனிங்க் டேபிள் சீக்வன்சும் ரசிக்க வைத்தது.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. மெயின் கதையை விட்டு விட்டு அப்பப்போ கிளைக்கதையில் திரைக்கதை பயணிப்பது ஏனோ?
2. திரைக்கதையில் எந்தவிதமான திருப்பமோ, எதிர்பார்க்காத காட்சிகளோ இல்லை. யூகிக்கக்கூடிய காட்சிகள் தான்.
3. சீரியசாக ஒரு எமோஷனல் சீன் வரும்போது அதில் ஒரு காமெடி கவுண்ட்டவுன் கொடுத்து மடை மாற்றி விடுவதால் திசை மாறிப்போகிறது.
4. முதல் பாதி அளவுக்குப்பின் பாதி எங்கேஜிங்காக இல்லை.
5. படத்துக்குத்தேவையே இல்லாத ஒரு சண்டைக்காட்சி சலிப்படைய வைக்கிறது.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 13+ க்ளீன் யூ
கல்கி கமெண்ட் - Feel குட் ரொமாண்டிக் காமெடி டிராமா பார்க்க விரும்புபவர்கள் அவசியம் குடும்பத்துடன் காண வேண்டிய நல்ல படம். பிரமாதமான முதல் பாதி, ஓக்கேவான பின் பாதி.
திரைப்பட விமர்சனம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி மற்றும் குடும்பத்துடன் பார்க்கும் தகுதி ஆகியவற்றை அறிவதன் மூலம், எந்தவித ஏமாற்றமும் இன்றி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.