

ஜனநாயகன் படத்தைப்பற்றிக் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் போதிலும், படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. அனிருத்தின் கலக்கலான பிஜி எம் மும் , பாடல்களுக்கான இசையும் செம்ம ஹிட்! குட்டீஸ் முதல் சிக்ஸ்டீஸ் வரை குஷிப்படுத்தும் பாடல்களின் அணிவகுப்பு இதோ .. அடியோவுடன்... படித்து கேட்டு ரசியுங்கள்!
1. தளபதி கச்சேரி
குறிப்பாக தளபதீ கச்சேரி பாட்டில் அனிருத்தின் இசை அதகளம். தியேட்டரில் இந்தப் பாட்டுக்கு ரசிகர்கள் ஆடித்தீர்த்து விட்டார்கள். இந்தப் பாட்டில் விஜயின் டான்ஸ் பிரமாதம், கூடுதல் போனசாக அனிருத்தே திரையில் பாடுவது போல், ஆடுவது போல் காட்சி இருந்ததால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
தளபதீ கச்சேரி பாட்டை இணைந்து பாடியிருப்பவர்கள் அனிருத்தும் ,விஜய்யும், அறிவும். அதாவது இசை அமைப்பாளர், நாயகன், பாடல் ஆசிரியர் மூவரும் இணைந்து பாடிய பாட்டு இப்போது பட்டி தொட்டிகளிலெல்லாம் கலக்கிக்கொண்டு இருக்கிறது.
பாடல் முடிவடையும் தருணத்தில் ஒன் லாஸ்ட். டான்ஸ் என்று அனிருத் கேட்பது போலவும், உடனே விஜய் அதை ஏற்று இதற்கு முன் விஜய் நடித்த மாஸ்டர், லியோ, பீஸ்ட் படஙகளின் ரெப்ரன்ஸ், டான்ஸ் ஸ்டெப்ஸ் மிக்ஸ் செய்து கொண்டாட்டமாக ஆடியது தியேட்டரையே தெறிக்க விட்டது.
'தனக்குன்னு வாழாத, தரத்திலும் தாழாத ஒருத்தனும் வாரானே , திருத்திடப்போறானே' என்ற வரிகள் வரும்போது அரசியலில் அவர் எண்ட் ரி ஆகி செய்யப்போகும் புரட்சிகள் ,சீர் திருத்தங்களை சொல்வது போல் அமைந்து விட்டது.
பாடலின் சரணத்தில் 'தளபதி பிளாஸ்ட் பிளாஸ்ட்' என்ற வரி வரும்போது அரங்கம் அதிர்ந்தது. இதில் இரு வகையான குறியீடுகள். 1 சமீபத்தில் அர்ஜூன் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பிளாஸ்ட் பட ரெப்ரன்ஸ் 2 விஜய் திரையில் வந்தாலே அந்தபடம் பிளாஸ்ட் தான் என்ற மறைமுகக் குறியீடு.
'இது கொண்டாட வேண்டிய நேரம்' என்று விஜய் சொன்னதுமே அது பாடலுக்கான லீடு என்பதை உணர்ந்து ரசிகர்கள் ஆர்ப்பரிக்க அப்போதே பாடல் துவங்குகிறது.
'இவரைப்போல யார் காட்டு?' என்ற வரி வரும்போது அது ரஜினி , அஜித் குமார் இருவருக்கும் விடுக்கப்படும் மறைமுக சவாலாகவே ரசிகர்கள் பார்த்தார்கள்.
'கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு' என்ற வரிகள் வந்த பின் விஜய் காட்டும் டான்ஸ் லாவகம் அசத்தல் ரகம்.
அனிருத்தின் பிஜி எம் பாடலின் இறுதியில் கதகளி ஆடி விட்டது.
2. ஒரு பேரே வரலாறு
இந்தப் பாடலில் விஜய் நடித்த தலைவா டைம் டூ லீடு படத்தின் ஸ்டில்லை உபயோகித்த விதம் சிறப்பு. ஏன் எனில் ரஜினிக்கு எப்படி அண்ணாமலை படம் தான் அரசியல் முன்னெடுப்புக்கான முதல் படமோ, அது போல் விஜய்க்கு தலைவா தான் அரசியல் எண்ட்ரிக்கு ஓப்பனிங்க்.
இந்தப் பாடலில் வரும் தரமானவன், இவனுக்கு இணை யாரு என்ற வரிகள் எல்லாம் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்த இடங்கள்.
அனிருத்தின் பி ஜி எம் முடன் தளபதி என்ற ஹம்மிங்க்... பாட்டை அடுத்த தளத்துக்கு எடுத்து சென்றது.
3. ராவணன் மவண்டா
பாடலின் முதல் வரியிலேயே வில்லத்தமானவன் என்ற அர்த்தத்தில் ஆரம்பித்து, ஹை பிட்ச் குரலில் பாடப்பட்ட பாட்டு இது.
ஒத்தையில் நிக்கற எமண்டா
வா வந்து தொடுடா
அத்தனை பிம்பமும் அவண்டா
உலகாண்டவண்டா
என்ற வரிகள் எல்லாம் கூஸ்பம்ப்பின் உச்சம். அதை உணர்ந்து அனிருத் அதற்கு போட்டிருக்கும் அதிரடி இசை அருமை.
4. த ட்ரூ லீடர்
'ஏய் தளபதி' என்று ஆரம்பிக்கும் பாட்டு, பின் ஆங்கிலத்தில் பாப் சாங் ஆக மாறி தெறிக்க விட்டது. அர்த்தம் புரியுதோ , புரியலையோ கேட்பதற்குக் கொண்டாட்டமான பாட்டு.
5. செல்ல மகளே
இது மெலோடி சாங். வளர்ப்பு மகள் பாசத்தைக் கொண்டு அப்பா பாடுவது போல் அமைந்தது. உள்ளத்தை உருக்கும் சோக மெலோடி பெண்களின் மனதைக்கரைக்கும்.
6. அடியே என் பூந்தேனே
இதுவும் ஒரு மெலோடி சாங்.
7. உறவு (தாயின் மனம்)
அம்மா இறந்தபோது சிதைக்குத் தீ வைத்து மகன் பாடுவது போல் பாட்டு. சோகப்பாட்டு... உருக்கம்.
8. உள்ளே ஒளிச்ச உயிரே
இதுவும் ஒரு மெலோடி சாங் தான்
ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் பாதிக்குப்பாதி மெலோடி சாங் , சோக சாங் வைக்கவும் ஒரு துணிச்சல் வேண்டும். அனிருத்திடம் அது நிறையவே இருக்கிறது.
9. முனி முனிம்மா
விஜய் படம் என்றாலே ஒரு குத்தாட்டப்பாட்டு நிச்சயம் உண்டு. யூத் படத்தில் ஆல்தோட்டபூபதி பாட்டிலிருந்து ரெகுலராக இது நடைமுறையில் உண்டு. துள்ளலான இசையில் இடம் பெற்ற இந்தப்பாட்டு ரசிகர்களை ஆட வைத்தது; ஆட வைக்கும்.