தனுஷின் ராஞ்சனா படம் ரீரிலீஸ்!

raanjhanaa
Raanjhanaa
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடித்த ராஞ்சனா படம் ரீரிலீஸாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் தனுஷ். பா.பாண்டி படத்தின்மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். முதல் படமே பெரிய ஃபீல் குட் படத்தை கொடுத்தார். இதனால், அடுத்து இயக்கிய ராயன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பைத் தாங்கி நின்றது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. இதனையடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேபோல், தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் வரை கலக்கி வரும் ஒரு கோலிவுட் நடிகர் என்பதையும் நாம் கூறியே ஆக வேண்டும். பாலிவுட்டில் இன்றுவரை பேசப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற படம்தான் ராஞ்சனா. தனுஷ் எத்தனை படங்கள் கோலிவுட்டில் வெற்றி கொடுத்தாலும். பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்த ஒரு படம்தான் ராஞ்சனா.

இப்படம் கடந்த 2013ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் . இவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். அதன் பிறகு தனுஷ் இந்தியில் ஷமிதாப், அட்ராங்கி ரே படங்களில் நடித்தார். தற்போது தேரே இஸ்க் மெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை வாழ்வதற்கே! எப்படி வாழ்வது?
raanjhanaa

இப்படியான நிலையில், ராஞ்சனா படம் வெளியாகி 12 வருடங்கள் ஆன நிலையில், இப்படத்தை ரீரிலீஸ் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதன்படி, வருகிற 28ம் தேதி இப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்:
Spider Conch - வேகமாக அழிந்து கொண்டிருக்கும் சிலந்தி சங்குகள்!
raanjhanaa

சென்ற ஆண்டு வாலி, காதலுக்கு மரியாதை, யாரடி நீ மோஹினி போன்ற பல பழைய படங்கள் ரீரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அதுமட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல வசூலை ஈட்டினார்கள். இப்படி ரீரிலீஸான படங்களிலேயே மிக அதிகமாக வசூல் ஈட்டிய படம் கில்லி. சமீபத்தில் தளபதி, மன்மதன், வல்லவன் ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து சச்சின், ரஜினிமுருகன் ஆகிய படங்கள் ரீரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com