இயக்குனர் கார்த்திக் நரேனின் 'நிறங்கள் மூன்று'!

நிறங்கள் மூன்று
நிறங்கள் மூன்று
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இது ஒரு ஆக்ஷன் ,திரில்லர், சஸ்பென்ஸ் கலந்த திரைப்படம்.

சாக்லேட் பாய் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் என மூன்று கதாநாயகன் இப்படத்தில் நடித்துள்ளனர். அம்மு அபிராமி ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் K.கருணாமூர்த்தி தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வருகிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவை மேற்கொள்ள, எடிட்டிங் மற்றும் டிஐ பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொண்டு வருகிறார்.இந்த திரைப்படம் தமிழில் வெளியாகும்.

இந்த படத்தின் படப்பிடி முடிந்து விட்டது. இந்த படம் இம்மாத கடைசியில் அல்லது 2023 தொடக்கத்தில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இதற்கு முன்பு திரையில் வந்த அதர்வா முரளியின் 'பட்டத்து அரசன்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை எற்படுத்தியது. அதை தொடர்ந்து நிறங்கள் மூன்று திரைப்படம் அதர்வா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com