உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப் பரிசு வழங்கிய இயக்குநர் பி.வாசு!

Director P.Vasu
Director P.Vasu

மிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி அறுபதிற்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் பி. வாசுவின் பிறந்த நாளை முன்னிட்டு, 'சந்திரமுகி 2' படக்குழுவின் சார்பில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது  தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்பை பி. வாசு பரிசளித்தார்.

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில்  ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சந்திரமுகி 2' இப்படம் பி வாசு இயக்கத்தில் வரும் 65 ஆவது படமாகும். கங்கனா ரனாவத்,  வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.  இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

'சந்திரமுகி 2' படத்தின் முன்னோட்டம் வெளியாகி பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே பிறந்த நாளை கொண்டாடும் இயக்குநர் பி. வாசு தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்பை பரிசாக வழங்கியிருப்பது பலரின்  பாராட்டை பெற்று  வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com