பிரபல சீரியல் நடிகை மகன் இப்போ பிரபல ஹீரோ! யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

brindha doss
brindha doss
Published on

திரைப்படங்களை போலவே சீரியல்களுக்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சிறிய குழந்தைகள் முதல் பெரிய வயது மூதாட்டியர்கள் வரை சீரியல்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட சீரியல் தான் ஆனந்தம். பொதுவாகவே சீரியலில் வில்லி என்றாலே மிரட்டல், உருட்டல் தான். ஆனால் அமைதியாக இருந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் தான் பிருந்தா தாஸ். இவரின் அசத்தலான நடிப்புக்கு பலரும் அடிமை என்றே சொலல்லாம். 'இப்படி கூடவா வில்லி இருப்பார்கள்? அமைதியா இருக்காரே' அது இது என டிவியை பார்க்கும் ரசிகர்களே கூச்சலிட்டதுண்டு. அந்தளவிற்கு நடிப்பில் பட்டைய கிளப்பியிருப்பார். நடிப்பில் இருந்து வெளியே வந்து இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதோடு இல்லாமல், சினிமா தயாரிப்பாளர் பரதநாட்டிய நடன கலைஞர் என பல் திறமை கொண்டவராக விளங்கி வந்தார். பலரது நடிகர்களின் மகன் மகள்கள் தற்போது திரையுலகில் கலக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி தான் இவரின் மகனும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அது யார் என்று தெரிந்தால் நிச்சயம் நீங்க ஷாக் ஆகிடுவீங்க!

brindha doss kishan dos
brindha doss kishan dos

ஆம் அவர் தான் கிஷான் தாஸ். ஆரம்பத்தில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதற்கு பிறகு ஷார்ட் பிலிம், விளம்பரங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான 'முதல் நீ முடிவும் நீ' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான கிஷன் தாஸுக்கு அந்த படம் நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.

அதைத்தொடர்ந்து ஆர் ஜே பாலாஜியோடு சேர்ந்து சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார். அதுபோல பிருந்தா தாஸ் மற்றும் அவருடைய மகன் கிஷன் தாஸ் சேர்ந்து "மீட் அவர் மம்மி" என்று ஷார்ட் பிலிம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்கள். இதனை பார்த்த பலரும் 'இவர் தான் இவரின் மகனா?', என அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இணையத்தில் படு ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தினமும் ரசிகர்களுடன் கனெக்ட்டிலேயே இருப்பார். பாடல் பாடி ரசிகர்களுடன் வைப் செய்வார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com