10 நாட்கள்... ரூ.100 கோடி வசூல்... இளைஞர்கள் கொண்டாடும் ‘டிராகன்’

dragon film
dragon film image credit - @Dir_Ashwath, @MaddySivaprasad
Published on

பிரதீப் ரங்கநாதன்... குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். ஆரம்பத்தில் பல குறும்படங்களைத் தயாரித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரதீப் ரங்கநாதன், 2019-ல் கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, 2022-ல் ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகராக பயணத்தை தொடர்ந்தார்.

‘டிராகன்’ படத்தை பார்த்த ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதன் தோன்றும் காட்சிகளில் தங்களை பார்த்ததாக உணருகின்றனர். அதாவது இந்த திரைப்படம் இன்றைய தலைமுறை இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூட சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ப்ரேமலு நடிகை!
dragon film

மாரிமுத்து இயக்கத்தில் இளம் தலைமுறையினரின் மனதை கொள்ளை கொண்ட பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிராகன்’. ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் மற்றும் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். காதல், கல்லூரி வாழ்க்கை, வேலை, ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், போலி சான்றிதழால் ஏற்படும் பின்விளைவுகளை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

கடந்த 21-ந் தேதி டிராகன் படத்துடன் 10 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. அதில் ‘டிராகன்’ மற்றும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி தினமும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுதான்: மாஸாக வெளியான டைட்டில்!
dragon film

இந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்த படம், கடந்த 10 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ரூ.100 கோடி வசூல் வந்திருப்பதை கொண்டாடும் விதமாக போஸ்டர் வெளியிட்டு உள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக அவரது முதல் படமான கோமாளி படமும் ஹிட், இரண்டாவது படத்தில் தானே இயக்கி நடித்த லவ் டுடே படமும் ஹிட். இப்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள டிராகன் படமும் ஹிட் அடித்துள்ளதால் இவரின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இப்போழுதே அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 3 வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் பிரதீப் ரங்கநாதன் இன்றைக்கு சினிமாவில் சாதிக்க ஆசைப்படுகிற, கனவு காண்கிற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறி உள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: டிராகன் - இளைஞர்களால் இளைஞர்களுக்காக
dragon film

டிராகன் படத்தை அடுத்து வின்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (சுருக்கமாக LIK) படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் டிராகன் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள். இது குறித்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com