துறைமுகத்தில் ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல்: தப்பியது எப்படி? 'Enemy of the Smuggler' விமர்சனம்!

முன்னாள் கஸ்டம்ஸ் அதிகாரி இயக்கியுள்ள 'Enemy of the Smuggler' படத்தின் முழு விமர்சனம்.
Enemy of the Smuggler
Enemy of the Smuggler
Updated on: 
ரேட்டிங்(3 / 5)

T. சமய முரளி இயக்கத்தில் சரண் சக்தி, லால், ராதிகா சரத்குமார், சக்கரவர்த்தி காளி வெங்கட், பாலசரவணன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து வெளிவந்துள்ள படம் Enemy of the smuggler. லால் துபாயிலிருந்தும் சக்கரவர்த்தி சென்னையில் இருந்தும் போதை மருந்து கடத்தலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு துறைமுகம் மூலமாக சரக்குகளை வெளியே கொண்டுவதற்கு பல்வேறு நுட்பங்களை கையாளுகிறார்கள்.

தங்களை எதிர்ப்பவர்களை ஈவு இரக்கமின்றி கொல்கிறார்கள். கஸ்டம்ஸ் துறையுடன் தொடர்பில் உள்ள சரண் சக்தியும், பால சரவணணும் இந்த கடத்தல் வேலைக்கு சிறு சிறு உதவிகள் செய்கிறார்கள். இதற்கிடையில் சக்தி சரணுக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அந்தப் பெண்ணின் அண்ணனாக இருக்கும் காளி வெங்கட்" நீ காதலிக்கும் பையன் அவ்வளவு நல்லவன் கிடையாது" என்கிறார் இருந்தாலும் அண்ணனின் வார்த்தையை மீறி சக்தி சரணை கைப்பிடிக்கிறார் அப்பெண்.

ஒரு நாள் லால் துபாயில் இருந்து அனுப்பும் 2000 கோடி பெருமானம் உள்ள கடத்தல் பொருளை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு வர சக்தி சரணும் பால சரவணணும் முயற்சி செய்கிறார்கள். வெளியே கொண்டு வரப்படும் அந்த கடத்தல் பொருட்களின் ஒரு பகுதி காவல்துறையிடம் பிடிபட்டு விடுகிறது. காவல்துறை சரண் மற்றும் பால சரவணணை தேடுகிறது.

இவர்கள் கிடைக்காததால் இவரது மனைவியையும், அம்மா ராதிகா சரத்குமாரையும் காவல்துறை கைது செய்கிறது. இதற்கிடையில் சக்கரவர்த்தி தன்னுடைய போதை பொருட்களை கடத்தியது சரண் மற்றும் பால சரவணன் தான் என்று எண்ணி இவர்களை கொல்ல முயற்சி செய்கிறார். இந்த இருமுனை மோதலில் இருந்து இருவரும் எப்படி தப்பித்தார்கள்? என்று சொல்கிறது மீதி கதை.

படத்தின் பிளஸ்.. இப்படத்தில் இயக்குனர் சமய முரளி கஸ்டம்ஸ் துறையில் பணியாற்றியவர் என்பதால் ஆங்காங்கே custom துறையில் நடக்கும் சில விஷயங்களை புரிய வைக்க முயற்சி செய்துள்ளார். தனது சொந்த வாழ்க்கையில் இருந்து ஒரு கமர்சியல் கதையை எடுத்து திரைப்படமாக தந்ததற்காக டைரக்டரை பாராட்டலாம். படத்தின் ஹீரோ சரண் சக்தி சிறிது படபடப்புடன் கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து நன்றாக நடித்து இருக்கிறார்.

Enemy of the Smuggler
Enemy of the Smuggler

இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் நன்றாக நடித்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சக்கரவர்த்தி வில்லனாக மிரட்டி இருக்கிறார். ஒரு ஹைடெக் வில்லனாக இருந்து கொண்டு சபாஷ் போட வைக்கிறார். நல்லவரா? கெட்டவரா என்ற கேரக்டரில் வந்து இறுதியில் ஒரு கொடூரமான முகத்தை காட்டுகிறார். பால சரவணன் கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்து உள்ளார். 

இதையும் படியுங்கள்:
எளிய மனிதனின் மானத்திற்கு 'என்ன விலை'? கருணாஸ் - நிமிஷா கூட்டணி எப்படி?
Enemy of the Smuggler

ஸ்ரீ வாட்சனின் படத்தொகுப்பும், சாம் டேனியல் பின்னணி இசையும் படத்தை பரபரப்பாக கொண்டு செல்வதில் சற்று முக்கிய பங்கு வைக்கிறது.

மைனஸ்.. படத்தின் இயக்குனர் இந்த படத்தின் மெயின் கதையான கஸ்டம்ஸ் துறையில் துறையில் ஏற்கனவே பணி செய்து இருப்பதால் இந்த கதையை எடுத்திருக்கிறார். ஒரு துறை சார்ந்த வரை அந்த கதையை எடுக்கும் போது இன்னும் ஆழமாக சிந்தித்து மக்களுக்கு சில விஷயங்களை புரியும்படி சொல்லி இருக்கலாம். படம் பரபரப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கஸ்டம்ஸ் துறையில் இருக்கும் எதார்த்தமான சில விஷயங்களை சொல்லாமல் விட்டு விட்டார்.

இதனால் ஹீரோ எப்படி தப்பிக்கிறார்?அல்லது ஹீரோ செய்யும் சில தவறான விஷயங்கள் சாத்தியமா? இது எல்லாம் நமக்கு முழுமையாக புரியவில்லை. இதையும் புரிய வைத்திருந்தால் இது ஒரு முழுமையான மக்களின் படமாக வந்திருக்கும். படத்தின் பின்னணி இசை பலமாக இருந்த அளவிற்கு பாடல்கள் இல்லை. ஒளிப்பதிவு சில காட்சிகளில் தொடர்பில்லாமல் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
Enemy of the Smuggler

இப்படி ஆங்காங்கே சில குறைகளும், சில லாஜிக் மீறலும் இருக்கின்றன. இருந்தாலும் துறைமுகத்திலிருந்து வெளியே வரும் பொருட்கள் எப்படி கஸ்டம்ஸ் துறையால் கண்காணிக்கப்படுகின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு Enemy of smuggler ஓரளவு உதவலாம். படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கிறது. அதேபோல திரைக்கதையும் ஓரளவு ஆங்கில படத்தை போல இருந்திருந்தால், இப்படத்தை முழுமையாக சிறந்த படம் என்று சொல்லி இருக்கலாம்.

வாசகர்கள் துறைமுகக் கடத்தல்களின் உண்மையான பின்னணி மற்றும் இப்படத்தின் பிளஸ்-மைனஸ் அம்சங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு திரையரங்கு செல்வதற்கான தெளிவைப் பெறுவார்கள்.