The GOAT பட 3வது சிங்கிள் இன்று மாலை ரிலீஸ்... வைரலாகும் புரோமோ!

The GOAT - Spark
The GOAT - Spark
Published on

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT படத்தின் 3வது சிங்கிள் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், அதன் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது. இந்த படத்தில் லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார்.

GOAT திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் நடிக்க வைத்ததை தொடர்ந்து தற்போது தங்கை பவதாரிணியின் குரலையும் பதிவு செய்து பாடல் வெளியானது. சின்ன சின்ன கண்கள் என்று தொடங்கும் இந்த பாடல் பலரையும் மெய் சிலிர்க்க செய்தது.

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால், விஜய் ரசிகர்கள் GOAT படத்திற்கும், விஜய்யின் கடைசி படத்திற்காகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். முன்னதாக இது டைம் டிராவல் கதை என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2004ல் ரஷ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் விஜய்யின் GOAT பட கதை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 'பேச்சி' படுத்தும் பாடு... சக்கை போடு! (இங்கே திகிலுக்கு பஞ்சமில்லை)
The GOAT - Spark

இந்த படத்தின் 3வது சிங்கிள் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று மாலை வெளியாக உள்ளது. சரியாக 6 மணிக்கு தமிழிலும், 7 மணிக்கு தெலுங்கிலும் இப்பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய் ஆடிப்பாடியுள்ள ரொமான்டிக் பாடலான இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ளார். காதல் ரசம் சொட்ட உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மனதை மயக்கும் மெட்டுடன் இந்த பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com