
இயக்குநர் ஹெச் வினோத் இதுவரை 5 படங்களை இயக்கி இருக்கிறார். அவற்றில் வலிமை (2022) மட்டும் தான் எதிர்பார்த்த வெற்றியை பெறாத படம். மீதி அனைத்தும் வெற்றிப்படங்களே!அவரது படங்களை சுருக்கமாக அலசுவோம்.
அமரர் இயக்குநர் மனோபாலாவின் தயாரிப்பில், நட்டி என்கிற நடராஜ் எதிர்மறை நாயகனாக நடித்த படம் இது. வழக்கமாக ஹீரோ என்றால் மக்களுக்கு நல்லது செய்பவன், எல்லோருக்கும் நல்லவனாக இருப்பான் என்ற டெம்ப்ளேட்டில் இருந்து மாறி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவனாக நாயகனைக் காட்டி இருந்தார் வினோத்.
இதில் நாயகன் செய்யும் எல்லா மோசடிகளும் தியேட்டரில். வரவேற்கப்பட்டன. ஹீரோ பேசும் வசனங்கள் கொண்டாடப்பட்டன. பராசக்தி, பாலைவன ரோஜாக்கள், விதி, அமைதிப்படை ஆகிய படங்களுக்குப் பின் வசனங்களுக்காகவே ரசிகர்கள் ஆர்ப்பரித்த படம் இது தான்.
மனம் கவர்ந்த 'நெகடிவ்' வசனங்கள்:
1. நல்லவனா வாழ்ந்தா செத்த பின் சொர்க்க வாழ்க்கை வாழலாம். கெட்டவனா வாழ்ந்தா வாழும்போதே சொர்க்க வாழ்க்கை # சதுரங்க வேட்டை நெகடிவ் டயலாக்
2. ஒரு பொய் சொன்னா அதுல ஒரு உண்மையும் கலந்திருக்கணும். அப்போ தான் நாம சொன்னது பொய்னு தெரியாது # ( நெகடிவ் டயலாக் )
3. இந்த உலகத்துலயே ரொம்ப ஈசியான வேலை தப்பான வழில பணம் சம்பாதிப்பதுதான் # ( நெகடிவ் டயலாக்)
இந்தப்படம் ஏ, பி, சி என ஆல் செண்ட்டர் ஹிட் அடித்தது. முன்னணி ஹீரோக்கள் இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைப் பார்த்து அதே போல் நெகடிவ் ஷேடு கேரக்டர் வேண்டும் என அடம் பிடித்தார்கள். இது ஒரு ட்ரெண்ட் செட்டர் படம்.
முதல் படம் மெகா ஹிட்டானாலும் தனது அடுத்த படத்துக்கான கதை எழுத 3 வருடங்கள் அவகாசம் எடுத்துக்கொண்டார் இயக்குநர் வினோத். ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் ஒரு கேசுக்காக இவ்வளவு டீட்டெய்லிங் இதுவரை எந்த படத்திலும் சொன்னதில்லை என்று விமர்சகர்கள் கொண்டாடினார்கள். லாஜிக் மிஸ்டேக்சே கண்டு பிடிக்க முடியாத நேர்த்தியான படமாக வெளிவந்து வெற்றி நடை போட்டது.
அஜித் குமாருடன் கை கோர்த்த முதல் படம். அமிதாப் பச்சன் நடித்த பிங்க் ஹிந்திப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்.
ரீமேக்காக இருந்தாலும் அஜித் குமாருக்கான மாஸ் மொமெண்ட்ஸ் சேர்த்ததில் ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றது.
இதில் வரும் 'நோ மீன்ஸ் நோ' என்ற டயலாக் செம ஹிட் ஆனது.
காதலியாக இருந்தாலும் அவளது விருப்பமில்லாமல் தொட்டால் தண்டனை தான் அந்த ஆணுக்கு என்னும் கருத்து தான் படத்தின் ஒன் லைன்.
கோர்ட் ரூம் டிராமாவாக படம் உருவானது. முதல் இரண்டு படங்கள் அளவுக்கு மெகா ஹிட் இல்லை என்றாலும் டீசண்ட் ஆன வெற்றிப்படம் இது.
அஜித்துடன் இணைந்த இரண்டாவது படம். செயின் ஸ்னாட்ச்சிங் திருடர்கள் பற்றிய கதை. ரொம்ப நேச்சுரலாக செயின் பறிப்பு சம்பவங்கள் காடப்பட்டன. இதில் அஜித் ரசிகர்களுக்குப் பிடித்தமான பைக் சேசிங் காட்சிகள் ஹாலிவுட் படத்துக்கு இணையாகப்பேசப்பட்டது.
மெட்ரோ என்ற தமிழ்ப்படத்தின் பாதிப்பு வலிமை படத்தின் திரைக்கதையில் இருந்ததாக மெட்ரோ படக்குழு ஹெச் வினோத் மீது கோர்ட்டில் கேஸ் போட்டது. கோர்ட்டுக்கு வெளியே சமாதானம் ஆனார்கள்.
150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம், 234 கோடி ரூபாய் வசூலித்திருந்தாலும் முதல் இரண்டு படங்கள் அளவு மீடியாக்களின் பாராட்டுக் கிடைக்கவில்லை
அஜித் குமாருடன் இணைந்த மூன்றாவது படம் இது. வங்கிக் கொள்ளை பற்றிய ஹெய்ஸ்ட் திரில்லர் என்று அறிவிக்கப்பட்டாலும், வங்கியில் நடக்கும் மோசடிகளை விலா வாரியாக சொன்ன படம் இது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 250 கோடி ரூபாய் வசூலித்த படம். இந்தப்படத்துடன் விஜய் நடித்த வாரிசு படம் மோதியது. வலிமை வாரிசை முந்தி விட்டாலும் பெரிய வெற்றி இல்லை.
பொதுவாக இயக்குநர் ஹெச் வினோத் ஒரு படத்துக்கான கதை விவாதம், மேக்கிங் இவற்றுக்கு 2 வருடங்கள் முதல் 3 வருடங்கள் வரை எடுத்துக்கொள்கிறார். பகவான் கேசரி தெலுங்குப்படத்தின் ரீ மேக் என்ற கருத்து இருந்தாலும், ஜனநாயகன் விஜயின் கடைசிப்படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
சதுரங்க வேட்டைக்குப்பின் ஹெச் வினோத்தின் எந்தப் படமும் வசனங்களுக்காக கை தட்டல் வாங்கியதில்லை. ஜனநாயகன் அதை முறியடிக்கும் என்கிறார்கள்.
பஞ்ச் டயலாக்கும் , அப்போதைய ஆளும் கட்சி திமுகவைத் தாக்கியும் வசனங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இன்னும் 24 மணி நேரம் கூட இல்லை...