எதிர்பார்ப்பை எகிற வைத்த முதல்வர் விஜய்! 'ஜனநாயகன்' பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை உடைக்குமா?

சர்வதேச அளவில் 3000 திரைகளில் வெளியாகும் முதல்வர் விஜய்யின் கடைசி அரசியல் அதிரடித் திரைப்படம்!
ஜனநாயகன் படம்
ஜனநாயகன் படம்AI image
Updated on

திரையில் முதல்முறையாக முதல்வர் விஜய்: ஜனநாயகன் படம் உருவாக்கும் சரித்திரம்

மிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பற்றித் தான் ஊரெல்லாம் பேச்சு. 23/7/2026 வியாழன் அன்று படம் தமிழகம் முழுக்க 800 திரையரங்குகளில், உலகம் முழுக்க 3000 திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

ஹாலிவுட் படமான ஒடிசி போனவாரம் 17000 திரை அரங்குகளில் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அடுத்த வாரம் ஸ்பைடர் மேன் படம் ரிலீஸ் ஆவதால் இந்த முதல் வாரத்தில் ஜனநாயகன் வசூலை அள்ள வேண்டியது முக்கியம்.

முதலில் உலகம் முழுக்க 5000 திரை அரங்குகள் வெளியீடு என்று சொல்லப்பட்டது. ஏன் குறைந்தது? சென்சார் சர்ட்டிபிகேட் தான் காரணம். இதுவரை முதல்வர் விஜய் நடித்த எந்தப் படமும் சர்ட்டிபிகேட் பெற்றது கிடையாது. லியோ கூட யு ஏ சான்றிதழ் தான். அதாவது பெற்றோர் துணையுடன் குழந்தைகள் பார்க்கலாம். ஆனால் ஜனநாயகன் சான்றிதழ் பெற்றதால் குழந்தைகள், 17 வயது வரையிலானவர்கள், அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது வசூல் சாதனைக்குப் பின்னடைவாக அமையுமோ? என்ற சந்தேகம் இருக்கிறது.

முதல்வர் விஜய் ரசிகர்கள் ஒரு கோடி பேர் என்று வைத்துக் கொண்டாலும், முதல்வர் விஜய்க்கு வாக்களித்தவர்கள் ஒன்றரைக்கோடி பேர் என்றாலும், சராசரியாக ஒன்றே கால் கோடி பேர் நிச்சயம் திரையரங்கில் பார்ப்பார்கள்.

நெட்டில் ஏற்கனவே லீக் ஆனதால் வசூல் பாதிப்பு இருக்கும் என்று சிலர் சொன்னாலும் பலரும் அதை மறுக்கிறார்கள். தியேட்டரில் பார்க்கவே அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள் என்கிறார்கள்.

ஜனநாயகன் படம்
ஜனநாயகன் படம்

தெலுங்கில் ரிலீஸ் ஆன பகவான் கேசரி ரீ மேக் தான் என்பதால் ஜனநாயகன் படத்துக்கு ஓப்பனிங்க் குறையுமா?

என்ற ஒரு கேள்வி இருக்கிறது. ஆல்ரெடி அமிதாப் பச்சன் நடித்த பிங்க் ஹிந்திப்படத்தை ரீமேக் செய்யும்போது அஜித் குமாருக்கான ஹீரோ பில்டப், கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் சேர்த்துத்தான் ஹெச் வினோத் எடுத்திருந்தார். பிங்க் படத்தில் இடம் பெறாத ஒரு ஆக்சன் சீக்வன்ஸ் அதகளமாக அமைந்து இருந்தது. அதனால் பகவான் கேசரியின் ஜெராக்ஸ் காபி ஆக ஜனநாயகன் இருக்காது என்றே பலரும் நம்புகிறார்கள்.

ஏ சர்ட்டிபிகேட் கொடுத்ததற்கான காரணம் அதீத சண்டைக் காட்சிகள் மற்றும் வன்முறைதான். அதனால் ஆக்சன் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

அதுவுமில்லாமல் திரையில் டைட்டிலில் தமிழக முதல்வர் விஜய் நடிக்கும் என்று வரும்போது தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது.

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்குக்கூட இப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததில்லை. இந்திய அளவில் ஒரு முதல்வரின் பெயர் முதல்வர் என்றே குறிப்பிட்டு வெளியாகும் முதல் படம் இது தான். அதனால் தியேட்டரில் கொண்டாடத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள்.

இதையும் படியுங்கள்:
அதிரடி ரிலீஸுக்கு தயார்: தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ தணிக்கை சிக்கல் முடிவுக்கு வந்தது!
ஜனநாயகன் படம்

இதை அடுத்து ரஜினியின் ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆவதால் அந்தப்படத்தின் வசூலுக்கு இப்போதே ஜனநாயகன் டார்கெட் பிக்ஸ் செய்யும் என்கிறார்கள்.

தவெக வின் பிரச்சார காட்சி பூடகமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கதைப்படி நாயகனின் பெயர் தளபதி வெற்றி கொண்டான். அதை சுருக்கி TVK என்று நாயகன் பச்சை குத்தி இருக்கிறாராம். அவர் அந்த டாட்டுவைத் திரையில் காட்டும்போது ரசிகர்கள் ஆர்ப்பரித்து மகிழ்வார்கள் என்று சென்சார் குழு தரப்பில் கூறுகிறார்கள்.

தேர்தலுக்கு முன்பே அதாவது ஜனவரி 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்ததால் இயக்குநர் ஹெச் வினோத் + முதல்வர் விஜய் இருவரும் திட்டமிட்டு திமுக வுக்கு எதிரான பஞ்ச் டயலாக்ஸ் சேர்த்திருக்கிறார்களாம். அதனால் முதல்வர் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்ஸ்க்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்குமோ அதை விட பல மடங்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜூலை 31ல் நடக்கப்போகும் கோலிவுட் மோதல்… டிசி Vs சிக்மா.. ஜெயிக்கப் போவது யாரு?
ஜனநாயகன் படம்

இக்கட்டுரையின் மூலம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் கலந்த திரைப்படங்களின் வணிகப் போக்கு மற்றும் ரசிகர்களின் மனநிலையைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com