ஹாய் திரைவிமர்சனம்: கவின் - நயன்தாரா ஜோடி கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனதா? படம் எப்படி இருக்கு?

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா - கவின் நடித்த 'ஹாய்' திரைப்படத்தின் முழுமையான விமர்சனம்.
ஹாய் விமர்சனம்
ஹாய் விமர்சனம்
Updated on
ரேட்டிங்(3 / 5)

ஹாய் படம் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்து நயன்தாராவிற்கு கவின் ஜோடியா? இந்த ஜோடி எப்படி இருக்கும் என்ற பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. இப்போது இந்த விமர்சனங்களை தாண்டி நயன்தாராவிற்கு கவின் ஜோடியாக நடித்துள்ள ஹாய் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இப்படத்தை செவின் ஸ்கிரீன் ஸ்டுடியோ, Z ஸ்டுடியோ மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. மயில்சாமி(கவின்) கோயம்புத்தூரில் வாழ்ந்து வரும் ஒரு இளைஞன்.

காதலித்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதியில் இருப்பவர். இவருடைய அப்பாவித்தனமான கேரக்டரை பார்த்து எந்த பெண்ணும் இவரை காதலிக்கவில்லை. இதனால் மனமுடைந்த மயில்சாமி, "நான் சென்னைக்கு சென்று ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தான் வருவேன்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு செல்கிறார். இதே நேரத்தில் பொள்ளாச்சியில் இருக்கும் தேவயானி (நயன்தாரா)தன் குடிகார அப்பாவின் திருமண வற்புறுத்தளில் இருந்து தப்பிக்க சென்னை ஓடி வருகிறார்.

ஓடி வந்த இருவரும் எதிர்பாராத விதமாக சென்னையில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். தேவயானியை பார்த்த மாத்திரத்தில் மயில்சாமிக்கு காதல் வந்து விடுகிறது. ஆனால் தேவயானியின் மனதில் எந்த காதலும் வரவில்லை. மேற்கொண்டு லண்டனுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் தேவயானி. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் இரு வீட்டார் பெற்றோர்களும் இருவரையும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறார்கள். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். இதற்கு 'ஆமாம் சாமி' போடும் விதமாக மயில்சாமி, "நானும்,தேவயானியும் காதலர்கள் நான் செய்த தவறால் தேவயானி இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறார்" என்ற குண்டை தூக்கிப் போடுகிறார்.

ஹாய் விமர்சனம்
ஹாய் விமர்சனம்

இதை உண்மை என்று நம்பும் பெற்றோர்கள் இந்த இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க பொள்ளாச்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். "இன்னும் மூன்று மாதங்களில் இந்த பிரச்சனை சரியாகிவிடும். அதன் பின்பு நீ லண்டனுக்கு செல்லலாம்" என்று தேவயானியிடம் ஆறுதல் சொல்கிறார் மயில்சாமி. உள்ளுக்குள்ளே எப்படியாவது தேவயானி தன்னை காதலித்து விட மாட்டாளா? என்று ஆசையுடன் இருக்கிறார். இறுதியில் என்ன ஆனது? தேவயானி லண்டன் சென்றாரா? அல்லது மயில் மீது காதல் கொண்டாரா? என்று சொல்கிறது மீதி கதை.

நயன்தாரா- கவின்;

நயன்தாராவின் கவினும் ஜோடியா? இது சரியாக இருக்குமா என்று படத்தை பார்க்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் இந்த இருவர்களின் ஜோடி நம்மை அவ்வளவாக இருக்க ஈர்க்கவில்லை. ஆனால் படம் செல்ல செல்ல இருவரின் நடிப்பும், அடுத்தடுத்து வரக்கூடிய காட்சிகளும் நயன்தாரா- கவின் ஜோடியை இயக்குனர் சரியாகத் தேர்ந்தெடுத்து தான் வைத்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

இருவரின் நடிப்பில் முதல் மார்க் வாங்குவது கவின் தான்.ஒரு அம்மா பிள்ளையாக எதுவுமே தெரியாமல் வளரும் ஒரு 30 வயது இளைஞன் வெளி உலகத்திற்கு சென்று சந்திக்கும் பிரச்சினைகளை சரியாக உள்ளுணர்ந்து நடித்துள்ளார். கவின் தனது காதல் ஒவ்வொரு இடத்திலும் ரிஜெக்ட் ஆகும்போது அழுது வெடிக்கும் இடத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

ஹாய் விமர்சனம்
ஹாய் விமர்சனம்

கிளைமாக்ஸ் காட்சியில் இவர் நடிப்பு இன்னும் நன்றாக உள்ளது.  நயன்தாரா கொஞ்சம் ஆர்ப்பாட்டமாகவும், இடைவேளைக்கு பிறகு மிகவும் அமைதியாகவும் நடித்துள்ளார். தனது அம்மாவின் அன்புக்காக ஏங்கும் இடத்தில் நயன்தாராவின் நடிப்பை அதிகம் ரசிக்க முடிகிறது.

பாக்கியராஜ் -ராதிகா -சுகாசினி- பிரபு;

மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் நடிப்பு இப்படத்தில் முக்கிய பலம் என்று சொல்லலாம். கவினின் அப்பாவாக கொஞ்சம் அன்பும் இன்னும் சில இடத்தில் கண்டிப்பும் காட்டுமிடத்தில் திரைக்கதை மன்னன் சபாஷ் போட வைக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் ராதிகா அனைத்து காட்சிகளும் அப்பாவியாக நடித்துவிட்டு கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத விதமாக மகனை ஒரு அறை விடுவார் பாருங்கள். நமக்கே பயம் வந்து விடுகிறது.

பிரபு ஒரு குடிகார அப்பாவாக தன்னால் தன் மகளுக்கு எதிர்காலம் பாதிக்கப்படுகிறதே என்று நினைக்கும் இடத்தில் சரியான நடிப்பை தந்துள்ளார். சுகாசினி சில காட்சிகள் வந்தால் கூட மனதில் நிற்கிறார். பெரிய ஆர்ட்டிஸ்ட்கள் பலர் ஒரு படத்தில் இருந்தால் அனைவருக்கும் இணையான முக்கியத்துவம் கொடுக்க இயக்குனர்கள் தவறி விடுவார்கள். ஆனால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கூடிய முன்னணி கலைஞர்கள் அனைவருக்கும் சரியான விதத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தந்திருக்கிறார் டைரக்டர். இந்த விதத்தில் இவரை பாராட்டலாம்.

இதையும் படியுங்கள்:
DC விமர்சனம்: லோகேஷ் கனகராஜ் நடிப்பில் ரத்தம் தெறிக்கும் அதிரடிப் படம்!
ஹாய் விமர்சனம்

ஆடை வடிவமைப்பு

படத்தில் பாராட்ட வேண்டிய முக்கியமான விஷயம் ஆடை வடிவமைப்பாகும். படத்தின் ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீராம் ஒவ்வொரு கேரக்டருக்கும் சரியான ஆடையை தேர்ந்தெடுத்து தந்துள்ளார். குறிப்பாக நயன்தாரா அணியும் அனைத்து ஆடைகளும் காண்பதற்கு அழகாகவும் நயன்தாராவின் கேரக்டரை பிரதிபலிக்கும் விதமாகவும் உள்ளது. இசை ஜென் மார்ட்டின் இசையில் பின்னணி இசை சுமாராகவும், இரண்டு பாடல்கள் நன்றாகவும் உள்ளது.

ஹாய் விமர்சனம்
ஹாய் விமர்சனம்

சில மைனஸ்

படத்தின் மைனஸ் என்பது ஆங்காங்கே வரும் சில லாஜிக் மீறல்கள். ஒரு சில இடங்களில் அடுத்தடுத்து வரும் காட்சிகளை நாம் யூகிக்கும் அளவில் இருப்பது ஒரு மைனஸ் தான்.

இதையும் படியுங்கள்:
போட்டோகிராபர் விமர்சனம்: அஷ்ரப்பின் சர்வைவல் திரில்லர் ஜெயித்ததா?
ஹாய் விமர்சனம்

சரி இந்த படத்தை பார்க்கலாமா? வேண்டாமா?

எந்தவித வன்முறையும் இல்லாமல் ஆபாசமும் இல்லாமல் ஹாய் திரைப்படம் வந்திருப்பதால் குடும்பத்துடன் பாருங்கள் என்று தைரியமாக சொல்லலாம். கவினும் நயன்தாராவும் காதலித்தார்கள் என்று காட்டுவதை விட நயன்தாராவின் காதலுக்காக கவின் காத்திருக்கிறார் என்ற ஒன்லைன் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இதை உணர்ந்து ஹாய் படத்தை தந்துள்ளார் டைரக்டர். குடும்பத்துடன் ரசிக்கும் ஒரு காதல் குடும்ப திரைப்படமாக வந்துள்ளது ஹாய்.

இந்த விரிவான விமர்சனத்தின் மூலம் 'ஹாய்' திரைப்படம் உங்கள் குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு ஏற்ற படமா, மற்றும் கவின்-நயன்தாரா காம்பினேஷன் எந்த அளவுக்கு உங்களை கவரும் என்பதை ஹாய் விமர்சனம் மூலம் உடனடியாக முடிவு செய்ய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com