

நான் ஈ புகழ் நானி நடித்த நின்னு கோரி (2017) படத்தின் மெகா ஹிட் அறிமுக இயக்குநரான ஷிவா நிர்வாணி அதற்குப்பின் மஜ்லி (2018), டக் ஜெகதீஷ் (2021), குஷி (2023) ஆகிய வெற்றிப்படங்களை இயக்கினார். இவர் பாடல் ஆசிரியரும் கூட. இவரது இயக்கத்தில் மாஸ் மகாராஜா என்று தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் ரவி தேஜா வித்தியாசமான ரோலில் நடித்த ஒரு வித்தியாசமான ஆக்சன் மசாலாப்படம் தான் இது.
நாயகன் ஒரு வாழை விவசாயி. கொஞ்சம் நிலபுலன்கள் இருக்கு. அதில் வாழை பயிரிட்டு வாழ்க்கை வண்டி ஓடுது. மனைவி, மகள் என ஒரு குடும்பம்.
திருமணம் ஆகி பல வருடங்கள் குழந்தை இல்லாததால் சபரிமலை அய்யப்பனை வேண்டி பின் அவன் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறான். மகளுக்கும் அப்பா என்றால் உயிர்.
தன் மகளை மட்டுமல்ல; தன் மகள் வயதை ஒத்த எந்தப்பெண் குழந்தையைக் கண்டாலும் தன் மகளாகவே பாவிப்பவன். பெண் பிள்ளைகளுக்கு யாராவது பிரச்சனை கொடுத்தால் அவ்வளவு தான், நாயகன் அவர்களை அதகளம் செய்து விடுவான்.
நாயகன் சரியான சரக்கு சங்கரலிங்கம். சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் 40 நாட்கள் தவிர்த்து மீதி எல்லா நாட்களும் குடி தான்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஊரில் சில பள்ளி மாணவிகளின் சடலங்கள் அவ்வப்போது தென்படுகின்றன. இது யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது தெரியவில்லை. அது தெரிய வரும்போது நாயகன் என்ன செய்தான் என்பது தான் மீதித்திரைக்கதை.
நாயகனாக மாஸ் மகாராஜா. ரவிதேஜா கிளாஸ் மஜாராஜாவாகக்களம் இறங்கி இருக்கிறார். விஸ்வாசம் அஜித் ரேஞ்சுக்கு அப்பா மகள் செண்ட்டிமெண்ட் சீனில் கண் கலங்க வைக்கிறார்.
நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நான்கே காட்சிகளில் வந்தாலும் நச்.
மகளாக பேபி நட்சத்திரா உருக்கமான நடிப்பு.
லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகா வில்லித்தனமான டீச்சர் ரோலில் நடித்திருக்கிறார். ஒரு டீச்சரை வில்லியாகக் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.
சாய்குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ராஜ்குமார் ஆகியோர் நடிபபும் அருமை.
இசை ஜி. வி பிரகாஷ் குமார். மூன்று ஐயப்பசாமி பாட்டுக்களை ஹிட்டாக்கி இருக்கிறார்.
விஷ்ணுசர்மாவின் ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை.
எடிட்டிங்க் பக்கா. படத்தின் ரன்னிங்க் டைம் 145 நிமிடங்கள்.
சபாஷ் டைரக்டர்..
1. சபரிமலை பக்தர்களுக்கு மிகவும் எமோஷனல் கனெக்ட் தருவது மாதிரி காட்சிகளை வைத்தது அருமை.
2. ஜி வி பிரகாஷின் இசையில் மூன்று ஐயப்ப பக்திப்பாடல்கள் அதகளம். வரும் காலங்களில் ஐயப்ப சீசனில் எங்கெங்கும் ஒலிக்கும் என எதிர்பார்க்கலாம்.
3. ஸ்கூலில் என்ன நடந்தாலும் அப்படியே வந்து அம்மா கிட்டே சொல்லனும் என்று நாயகன் மகளிடம் சொல்வது நல்ல விழிப்புணர்வுக்காட்சி. ஜனநாயகன் படத்தில் குட் டச், பேடு டச் பற்றி ஸ்கூலில் சொல்லித்தர வேண்டும் என விஜய் சொன்னதற்கு இணையான காட்சி.
4. லைவ் லொக்கேஷன்களில் ஷூட்டிங் நடத்தியது, உண்மைக்கு நெருக்கமாக காட்சிகளை அமைத்தது அருமை.
5. நாயகனின் மகளுக்கு உடம்பு சரி இல்லை. ஹார்ன் அடிக்காம போகனும் என நாயகனின் நண்பன் எச்சரித்து ஒவ்வொரு வண்டியாக அனுப்ப ஒரு லாரி டிரைவர் மட்டும் ஹார்ன் அடிப்பேன் என வம்படியாக அடிக்க அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் செம.
6. அப்பா மகள் பாண்டிங்க் அருமை. நிஜமாகவே அப்பா மகள் தானோ என எண்ண வைத்தது இருவருக்குமான பாண்டிங்.
7. பொதுவாக மாமூல் ஆக்சன் மசாலாப்படங்களில் அடுத்தடுத்த காட்சிகளை நாம் கணித்து விடுவோம். ஆனால் ஆச்சரியமூட்டும் விதமாக இதில் கணிக்க முடியாத திருப்பங்கள் இருப்பது ஷாக் சர்ப்பரைஸ்.
8. நாயகி ப்ரியா பவானி சங்கர் ஒரு எமோஷனல் சீனில் அற்புதமான நடிப்பைத்தந்த விதம்.
9. மகளாக வரும் நட்சத்திரா சிறந்த குழந்தை நட்சத்திரமாக விருது வாங்க வாய்ப்பிருக்கிறது.
10. இண்ட்டர்வெல் பிளாக் சீன், க்ளைமாக்ஸ் சீன் இரண்டும் அட்டகாசம்.
11. பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வண்ணம் எமோஷனல் சீன்களை ப்ளேஸ் செய்த விதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ்:
1. நாயகன் படம் முழுக்க பலரை வெட்டி வீசுகிறார். ஆனால் எங்கும் போலீஸ் வரவே இல்லை.
2. படம் முழுவதும் ஒரு டைப்பாகப் பேசும் அஜய் கோஷி க்ளைமாக்சில் எமோஷனலாகப் பேசுவது படு செயற்கை.
4. இடைவேளை முடிந்து படம் போட்டதும் அடுத்தடுத்து இரண்டு சாமி பாட்டு எதுக்கு? கொஞ்சம் கேப் விட்டிருக்கக்கூடாதா?
5. இந்துக்கடவுள்களான ஆஞ்சநேயர், பிள்ளையார், ஐயப்பன் மூவருமே பிரம்மச்சாரிகள். குழந்தை வரம் வேண்டுபவர் அம்மன் சாமிக்குத்தான் வேண்டுவார்கள்.
6. பள்ளிக்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை இன்னமும் கொஞ்சம் நாசூக்காகக்காட்டி இருக்கலாம்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். 16+ வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்காக.
கல்கி கமெண்ட் - ஆக்சன் மசாலாப்பிரியர்கள் மட்டுமில்லாமல், பெண்களையும் கவரும் ஒரு எமோஷனல் டிராமா இது. தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்.