Khalifa: The Ruler திரைவிமர்சனம்: பில்லா ஸ்டைலில் பிலாஸ்டா? பிரித்விராஜின் ஆக்சன் மசாலா படம்!

வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள 'கலிபா' திரைவிமர்சனம் மற்றும் படத்தின் பிளஸ், மைனஸ் அலசல்.
கலிபா
கலிபா
Updated on
ரேட்டிங் (2.5 / 5)

கேரளாவில் முதல் 100 கோடி வசூல் படமாக மோகன்லால் நடிப்பில் உருவான புலிமுருகன்(2016) அமைந்தது. அந்த பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய வைசக்த் அதற்குப்பின் மம்முட்டியை வைத்து மதுரராஜா(2019), டர்போ(2024) ஆகிய சுமார் ரகப்படங்களைக்கொடுத்தார். நைட் டிரைவ்(2022) ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது. மான்ஸ்டர் (2022) கூட ஒரு ஓக்கே ரகப்படம் தான். அவரது லேட்டஸ்ட் படம் தான் இந்த கலிபா த ரூலர் என்ற ஆக்சன் திரில்லர் படம். புஷ்பா த ரூலர் என்ற தெலுங்குப்பட டைட்டில் பாணியில் அமைந்த டைட்டில் இது.

இந்தப்படம். 20/8/2026 முதல் கேரளாவிலும் 21/8 /2026 முதல் தமிழகத்திரையரங்குகளிலும்  ஆங்கில சப் டைட்டிலுடனும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. கலிபா என்ற சொல்லுக்கு வாரிசு, பிரதிநிதி என்று அர்த்தம்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகனின் தாத்தா மிகப்பெரிய தாதா. ஒரு தாதாவே நாயகனுக்கு தாத்தாவா?அடடே! என்பது மாதிரி இருந்தாலும் நாயகனின் அப்பாவுக்கு அந்த தாதா பாதை பிடிக்கவில்லை. வெளிநாட்டில் இருந்து கண்ட்டெய்னரில் வரும் பொருட்களை  துறைமுகத்திலிருந்து சம்பந்தப்பட்ட பார்டிகளுக்கு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார்.

வில்லன்களின் சதியால் நாயகனின் அப்பா ஒரு கடத்தல் கேசில் பிரேம் பண்ணப்படுகிறார். காண்ட்டெய்னரில் வந்த தங்கம் சட்டத்துக்குப்புறம்பாக வந்திருக்கிறது. அது தெரியாமல் போலீஸ் கேசில் மாட்டுகிறார். இப்போது அப்பாவை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதற்காக நாயகன் தன் தாத்தாவின் கடத்தல் தொழிலைக்கையில் எடுக்கிறான். இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக பிரித்விராஜ் சுகுமாறன் கச்சிதமாக நடித்திருக்கிறார். தெலுங்கு மசாலாப்படம் போல் ஆக்சன் சீன்களில் அதகளம் செய்கிறார்.

நாயகனின் அப்பாவாக ரஞ்சி பணிக்கர் நல்ல குணச்சித்திர நடிப்பு. நாயகனின் அம்மாவாக  ஈரமான ரோஜாவே புகழ்  மோகினி நடித்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நல்ல நடிப்பு. நாயகியாக மாளவிகா சர்மா கெஸ்ட் ரோலில் வருகிறார்.

வில்லன்களாக நெய்ல் நிதின் முகேஷ் , ஷம்மி திலகன் இருவரும் மிரட்டி இருக்கிறார்கள். 

சத்ரியன்  படத்தில்  நீ பழைய பன்னீர் செல்வமா வரனும், என்னை எதிர்க்கனும் அப்படினு பஞ்ச் டயலாக் பேசினாரே வில்லன் திலகன்?அவரது மகன் தான் ஷம்மி திலகன்.

சுரேஷ் ஓபராய், இந்திரன்ஸ் இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பு.

கலிபா
கலிபா

கஸ்டம்ஸ் ஆபீசராக அருள் தாஸ், நாயகனின் நண்பனாக சஞ்சு சிவராம் அனைவரும் கச்சிதமான நடிப்பு.

கெஸ்ட் ரோல்களில். மோகன்லால், டோவினோ தாமஸ், சவுபின் சாஹிர் மூவரும் வருகையில் அரங்கம் அதிர்ந்தது.

ஜேக்ஸ் பிஜோயின் இசை ஓக்கே ரகம். பின்னணி இசை  சுமார் ரகம் தான். ஒளிப்பதிவு ஜொமோன் டி ஜான், படம் முழுக்க கோல்டன் கலரில் ஜொலிக்க வைத்திருக்கிறார்.

சமன் சாக்கோவின் எடிட்டிங்கில் படம் 159 நிமிடங்கள் ஓடுகிறது.

சபாஷ் டைரக்டர்

1. ஜெயிலுக்குள் நடக்கும் ஆக்சன் சீக்சன்ஸ் அதகளம். திரையரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது.

2. ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் ஆபீசர்சை ஏமாற்றும் காட்சி கலக்கல் ரகம்.

3. செக்யூரிட்டி ஆபீசர்ஸ்க்கு மாஸ் மொமெண்ட்ஸ் கொடுத்து வைக்கப்பட்ட ஆக்சன் பிளாக் அதகளம். நாயகன் ஊரில் இல்லாதபோது குடும்பத்தாரை தாக்கவரும் வில்லன் கோஷ்டியை நாயகனின் செக்யூரிட்டி ஆபீசர்ஸ் மடக்கும் விதம் செம.

4. ஒவ்வொரு பிரேமிலும் நாயகன்  ஸ்டைலிசாகக்காட்டி இருக்கிறார்கள். பில்லா அஜித் போல கஜினி சூர்யா போல மாஸ் காட்டி இருக்கிறார்.

5. வில்லனின் தம்பியை நாயகன் மடக்கிப்போடுத்தள்ளும் காட்சி அட்டகாசம்.

இதையும் படியுங்கள்:
மோகன்லால் மகள் விஸ்மயா அறிமுகமான 'துடக்கம்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!
கலிபா

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. திரைக்கதை அமைப்பில் மோகன்லால் நடித்த லூசிபர், சூர்யா நடித்த அயன் படங்கள்  நினைவு வருவது பலவீனம்.

2. பல படங்களில் பார்த்த கேங்கஸ்டர் டிராமா டெம்ப்ளேட் காட்சிகள் தான். யூகிக்கக்கூடிய காட்சிகள் போரிங்க்.

3. சமீபத்தில் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆன வெப் சீரிஸ் ஆன  ப்ரீதம் அண்ட் பெட்ரோ வில் ஏடி எம் மிஷினைக் கொள்ளை அடிக்கும் காட்சியைப்பார்த்து பீகாரில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்ததாம். அதே போல் எப்படி எல்லாம் தங்கத்தைக் கடத்தலாம் என 20 ஐடியாக்கள் படத்தில் இருக்கு. தேவை இல்லாதது. சமூக சீரழிவுக்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
ஜோஜூ ஜார்ஜ் - ஷாஜி கைலாஷ் கூட்டணியின் 'வரவு' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!
கலிபா

4. படத்தில் ஸ்லோமோஷன் காட்சிகள் மிக மிக அதிகம். அதை கட் பண்ணி இருந்தால் ஸ்பீடாக கதை பறக்கும்.

5. நாயகிக்கு மூன்று காட்சிகள் மட்டுமே. தேவை இல்லாத ஆணி. நாயகி இல்லாவிட்டாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+

கல்கி கமெண்ட். - ஸ்டைலிஷான ஆக்சன் மசாலாப்படம் பார்க்க விரும்புபவர்கள், தெலுங்கு மசாலா ரசிகர்கள் இந்த மலையாளப்படத்தைப் பார்க்கலாம். இதன் பாகம் 2 விரைவில் வர இருக்கிறது. 

இந்த விரிவான விமர்சனத்தைப் படிப்பதன் மூலம் 'கலிபா' திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்கு முன், படத்தின் கதை அமைப்பு, பிரித்விராஜின் மாஸ் ஆக்சன் காட்சிகள் மற்றும் திரைக்கதையின் தரம் குறித்த தெளிவான முடிவை நீங்கள் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com