சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கிறாரா அதர்வா? எந்தப் படத்தில் தெரியுமா?

Atharva & Sivakarthikeyan
Atharva & Sivakarthikeyan
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

கோலிவுட்டின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை வந்துள்ளதாகவும், அந்தப் படத்தில் இவருக்கு தம்பியாக அதர்வா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.  கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் செய்திருப்பார். அதில் தளபதி விஜய், துப்பாக்கிய புடிங்க சிவா என்று சொல்லி தனது சினிமா பொறுப்பை அவரிடம் கொடுத்ததுபோல் காண்பித்திருப்பார்கள். அதேபோல் சிவாவும் “ நீங்க எதோ முக்கியமான வேலையா போறீங்க… நான் இத பாத்துக்குறேன்.” என்று கூறுவார்.

ஆகையால், ரசிகர்கள் இதன் அர்த்தங்களைப் புரிந்துக்கொண்டு தொடர்ந்து இதற்கு ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 23 படத்தில் சிவா நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அமரன் படமும் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கிறது. அந்தவகையில் இப்போது சிவகார்த்திகேயனுக்கு வந்திருக்கும் கதையும் ஏற்கனவே பலரது எதிர்பார்ப்பை தாங்கி நிற்கும் படத்தின் கதைதான்.

ஆம்! சுதா கொங்கராவுடைய புறநானூறு படம்தான். இப்படத்திற்கு முதலில் சூர்யா, துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோரிடமே பேசப்பட்டு முடிவும் ஆனது. இதற்கான ப்ரோமோ கூட வெளியிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படபிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதனையடுத்து சூர்யாவிற்கு இப்படத்தில் நடிக்க நேரமில்லை என்றும், ஆகையால், படத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியாவும் விலகியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மகாத்மா காந்தி இணையத் தொடருக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
Atharva & Sivakarthikeyan

இப்படியான நிலையில்தான், சுதா கொங்கராவின் கதை சிவகார்த்திகேயனுக்கு சொல்லப்பட்டது. தற்போது அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கவுள்ளதாகவும், அவர் சிவகார்த்திகேயனுக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோல், நஸ்ரியா கதாபாத்திரத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளாராம்.  விரைவில் இப்படம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com