'ஜனநாயகன்' ரீ-மேக் படமா.? இல்லையா.? தெலுங்கு இயக்குநர் சொன்ன முக்கிய தகவல்.!

Jananayagan Movie Update
JananayaganSource: Indiatoday
Published on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போதே, இப்படம் தெலுங்கு படத்தின் ரீ-மேக் தான் என ஒரு வதந்தி பரப்பப்பட்டது.

படத்தின் போஸ்டர்கள் மற்றும் ‘செல்ல மகளே’ பாடல் வெளியான போது, இது தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற திரைப்படத்தின் ரீ-மேக் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியானது என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். ஆனால் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், இது முழுக்க முழுக்க தளபதி திரைப்படம் மட்டுமே என்று ரசிகர்களுக்கு பதிலளித்தார்.

இந்நிலையில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி, ஜனநாயகன் படம் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

2026 பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், திரைக்கு வரவுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இத்திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

படம் குறித்த அப்டேட்டுகள் இணையத்தில் வெளியாகும் போதெல்லாம், இது 2023 ஆம் ஆண்டில் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரீ-மேக் தான் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், இது முழுக்க முழுக்க தளபதி திரைப்படம் என்றே இசை வெளியீட்டு விழாவிலும் படக்குழு தெரிவித்தது.

இணையத்தில் பரவும் வதந்திகளை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல், ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து ரசிக்கும் படியான தளபதி படமாகவே ஜனநாயகன் இருக்கும் என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பகவந்த் கேசரி திரைப்படத்தின் இயக்குநர் அணில் ரவிபுடி ஜனநாயகன்ப படம் குறித்து கூறுகையில், “ஜனநாயகன் இளைய தளபதி விஜய்யின் திரைப்படம். விஜய் சார் உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். எப்போதும் அவர் மிக சாதாரணமாகவே இருப்பார். இதுவரை நான் விஜய் சாரை 2 முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். ஜனநாயகன் திரைப்படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது குறித்த விவரங்கள் படம் வெளியான பிறகே தெரிய வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Jananayagan movie
Jananayagan movie
இதையும் படியுங்கள்:
Sivaji Ganesan Flashback: சிவாஜி கணேசன் தமிழ் சினிமா பயணத்தை தொடங்கியது நடிகராக அல்ல...
Jananayagan Movie Update

தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படத்தின் இயக்குநர் கூறியதைப் பார்க்கும் போது, ஜனநாயகன் திரைப்படம் ரீ-மேக் படமா அல்லது இல்லையா என்பது ஜனவரி 9 ஆம் தேதி அன்று தான் தெரியும் போலிருக்கிறது.

இப்படம் ரீ-மேக் படமாக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இது தளபதி படம் அவ்வளவு தான் என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட உள்ளனர். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் இன்று வெளியாகி உள்ளது. இதன்படி 3 மணி நேரம் 2 நிமிடங்கள் நீளம் கொண்ட ஜனநாயகன் படத்திற்கு, தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்தில் கடைசி 20 நிமிடங்கள், நடிகர் விஜய்க்கு ஃபேர்வெல் வீடியோ இருப்பதால் படத்தின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜனநாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
"விஜய் - அஜித் தான் கடைசி... இனிமேல் இதெல்லாம் கிடையாது!"
Jananayagan Movie Update

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com