ஸ்டார் கிட் பிம்பத்தை உடைத்த ஜேசன் சஞ்சய்: இயக்குநராகும் முதல் பேட்டி!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் நேர்காணலில் பகிர்ந்துள்ள சினிமா கனவுகள்.
ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய்
Updated on

நடிகர் விஜய்யின் மகன் என்ற அடையாளத்தை தாண்டி இயக்குநராக தனது தனிப்பாதையை அமைக்க விரும்பும் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த முதல் விரிவான நேர்காணல் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சினிமா மீதான அவரது பார்வை, இயக்குநராக வேண்டும் என்ற கனவு, குடும்ப பின்னணி குறித்து அவர் பகிர்ந்த கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

திரையுலகில் பிரபல நடிகரின் வாரிசாக அறிமுகம் ஆவது எளிதாக தோன்றினாலும் அந்த அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு பாதையை உருவாக்குவது சவாலானது. அந்த சவாலை ஏற்றுக் கொண்டவர் ஜேசன் சஞ்சய்.

அவர் நடிகராக வருவார் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், அவர் இயக்குநராகப் பயணிக்க விரும்புவதாக தெளிவாக கூறி இருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனது முதல் நேர்காணலில் சினிமாவை ஒரு கலை வடிவமாக நேசிப்பதாகவும், தரமான கதைகளை திரையில் சொல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.

நேர்காணலில் எந்த கேள்விக்கும் அவசரப் படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்த விதம் பலரின் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக குடும்பப் புகழை மட்டுமே நம்பாமல் தனது உழைப்பின் மூலம் முன்னேற வேண்டும் என்ற அவரது அணுகுமுறை இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த நேர்காணலின் காணொளி வேகமாகப் பரவி கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரையுலக ஆர்வலர்களும் அவரது சிந்தனை நம்பிக்கை மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பைப் பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. நல்ல கதைகள் மூலம் மக்களின் மனதில் நீடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவரது கருத்து சினிமாவை அவர் எவ்வளவு ஆழமாக அணுகுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த நேர்காணலில் காணப்பட்ட தன்னம்பிக்கை, எளிமை மற்றும் தெளிவான சிந்தனை காரணமாகவே ரசிகர்கள் அவரை 'ஸ்டார் கிட்' (star kid) என்ற அடையாளத்தைத் தாண்டி எதிர்கால இயக்குநராக பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேர்காணலில் அதிகம் கவனம் பெற்ற அம்சங்களில் ஒன்று தனது குடும்பத்தை பற்றியும், தந்தையைப் பற்றியும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்த கருத்துகள் தான்.

ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய்

தான் சஞ்சய் என்றே அனைவராலும் அழைக்கப்படுவதாக கூறினார். தனது தந்தை தற்போது தமிழகத்தின் முதல்வராக இருப்பதால், தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகப் பெரிய பொறுப்பு இருப்பதை அவர் வெளிப்படையாக குறிப்பிட்டார். பொதுமக்கள் தங்கள் ஒவ்வொரு செயலையும் கவனிப்பார்கள் என்பதால் பேசும் வார்த்தைகளிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் கூடுதல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் பலரின் பாராட்டைப் பெற்றது.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் ரிலீஸாக வேண்டிய அப்பாவின் கடைசி படம், மகனின் முதல் படம்... சுவாரஸ்ய சம்பவம்!
ஜேசன் சஞ்சய்

அதே நேரத்தில் தந்தையின் புகழை மட்டுமே சார்ந்து முன்னேற விரும்பவில்லை என்றும் தனது உழைப்பு , திறமை மற்றும் படைப்புகளின் மூலம் ஒரு இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதே தனது விருப்பம் என்பதை அவர் தெரிவித்தார்.

இந்த முதிர்ச்சியான சிந்தனையும் பொறுப்புணர்வும் இளம் வயதிலேயே அவரிடம் இருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் தான் அவரது முதல் நேர்காணல் வெறும் வைரல் காணொளியாக இல்லாமல் ஒரு புதிய தலைமுறை இயக்குநரின் சிந்தனையை வெளிப்படுத்திய உரையாடலாக பார்க்கப் படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிவாஜியின் நடிப்புப் பசி தீர்த்த 'கௌரவம்': ஒரு திரைக்காவிய அலசல்!
ஜேசன் சஞ்சய்

முதல் நேர்காணல் என்பது ஒரு பிரபலத்தின் அறிமுகம் மட்டுமல்ல. அவரது மனப்பான்மையையும், கனவுகளையும், எதிர் காலப் பயணத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாகும். ஜேசன் சஞ்சய் யின் முதல் நேர்காணல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது சொந்த அடையாளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அவர் தொடங்கியுள்ள இந்தப் பயணம் திரையுலகில் ஒரு புதிய இயக்குநரின் வருகைக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது. அவரது முதல் திரைப்படம் இந்த எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு நிறைவேற்றும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

திரையுலகில் சொந்த அடையாளத்தை உருவாக்கத் துடிக்கும் ஒரு இளம் படைப்பாளியின் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு, உங்களது சொந்தத் துறைசார் சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும் தெளிவான வழிகாட்டுதலையும் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com