

ஜனநாயகன் திரைப்படத்துடன் மோத இருந்த சிக்மா திரைப்படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் நடைபெறும் முன்னர் இருந்தே ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு குறித்த ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. சென்சார் போர்டு பிரச்சினைகளின் காரணமாக அந்த திரைப்படம் வெளியாவதில் நீண்ட இழுபறி காணப்பட்டது. அது வெளியாவதற்கு முன்பே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் விஜய் அமர்ந்துவிட்டார்.
அதன் பின்னர் ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஆர்வம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பெரும் எதிர்பார்ப்பு நடிகர் விஜய்யின் மகன் இயக்குவது தான். அதனால்தான் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
விஜய் முதல்வரான பின் , இதற்கு அடுத்து அவரால் திரைப்படங்களில் நடிக்க முடியாது. அவரும் முன்கூட்டியே ஜனநாயகன் திரைப்படம் தான், தனது இறுதி திரைப்படமாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். தற்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பு அவருக்கு இருப்பதால் , அவரது இறுதி திரைப்படத்தின் வெற்றி, மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதனால் அந்த திரைப்படத்தை கொண்டாடி தீர்க்க அவர்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால் , தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் அவரது இறுதி திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படம் விஜயின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானித்ததால் , அதன் மீது சுவாரசியமும் கூடியுள்ளது. அதனால், இந்த திரைப்படத்தின் பிரமாண்டமான வெளியீடு இந்த மாதம் (ஜூலை) 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த நாள் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கும் ஒரு திருவிழா கொண்டாட்டத்தை கொடுக்கும் என்றால் மிகையல்ல.
ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் ஜேசனின் தந்தை விஜயின் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியான ஒரு வாரத்திற்குள் வெளியாக இருந்தது. இதனால் , ஜனநாயகன் திரைப்படத்தின் வெற்றிக்கு எந்த ஒரு சறுக்கலும் வரக்கூடாது ஜேசன் சஞ்சய் நினைப்பதால், சிக்மா திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முதல் படத்திலேயே செல்வாக்கு மிகுந்த தனது தந்தையுடன் அவர் மோத விரும்பவில்லை. பல்வேறு சர்சைக்குரிய விஷயங்களுக்கு மத்தியில் , அவர் எடுத்துள்ள முடிவு அவரது மன முதிர்ச்சியையும் தந்தை மீதான பற்றுதலையும் காட்டுகிறது.இந்த முடிவு அன்பு ரீதியாக பார்த்தாலும் அல்லது வியாபார ரீதியாக பார்த்தாலும் சரியான முடிவு என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சிக்மா திரைப்படம் ஜேசன் சஞ்சய்யின் அறிமுக திரைப்படம் என்பதால் அவர் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதே நேரம் தமிழ் சினிமாவின் வலிமை வாய்ந்த நடிகராக இருக்கும் விஜய்யுடன் மோதும் போது, அது வணிக ரீதியான பாதிப்பினை அவருக்கும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இது போன்ற செயல்களில் அதிகமாக பாதிக்கப்படுவது என்னவோ! பணத்தினை முதலீடு செய்த தயாரிப்பாளர் தான்.
அதனால், தயாரிப்பாளரின் வியாபாரத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிக்மா திரைப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு மாதத்திற்கு அதிகாரப்பூர்வமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.