

ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகை அல்லது வேறு ஏதாவது கலைஞர்கள் இயக்குனர்கள் பேசுவது பரபரப்பாக பேசப்படும். ஆனால் முதல்முறையாக படத்தின் தயாரிப்பாளர் பேசிய ஒரு விஷயம் ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது. அது என்ன?
ராவணக்கோட்டம், TTT போன்ற படங்களை தயாரித்தவர் கண்ணன் ரவி. தமிழ்நாட்டின் திட்ட குடியை பூர்வீகமாக கொண்ட கண்ணன் ரவி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் முன்னணி தொழில் அதிபராக உள்ளார். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் படம் தயாரிக்க வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது மகன் தீபக் ரவிக்கும், திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தி செந்தாமரைக்கும் மிக ஆடம்பர முறையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இதை பல்வேறு ஊடகங்கள் பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக துரைமுருகன் சார்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் பகுத்தறிவு சிந்தனை கொண்டது. துரைமுருகன் தனது பேத்தியின் திருமணத்தை வேத மந்திரம் கொண்டு வைதீக முறையில் நடத்தியது தவறு என்று ஒரு சாரார் விமர்சனம் விமர்சித்து வருகிறார்கள்.
இது தவிர இந்த திருமணத்தில் பல ஆடம்பரமான விஷயங்கள் பின்பற்றப்பட்டன. இது தவறானது என்று ஒரு சாராரும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கண்ணன் ரவி தயாரிப்பில் பிரபுதேவா, வடிவேலு நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள Bang Bang என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் இசை முன்னோட்ட நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் பத்திரிக்கையாளர் பலர் கண்ணன் ரவியை நோக்கி பல கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக "வைதீக முறைப்படி ஏன் திருமணம் செய்தீர்கள்? பகுத்தறிவு கொள்கையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி உடன் சம்பந்தம் செய்யும்போது இது தேவையா? மேலும் நீங்கள் துரைமுருகனின் பினாமி என்று சொல்கிறார்களே? இப்படி பல அடுக்கடுக்கான கேள்விகள். இந்த கேள்விகளுக்கெல்லாம் கண்ணன் ரவி பொறுமையாகவும் சற்று கோபத்துடனுமே கலந்து பதில் அளித்தார்.
"நான் திட்டக்குடி என்ற சிறு ஊரில் இருந்து துபாய் சென்று கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். ஆடம்பரமாக செலவு செய்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள் எனக்கு இருப்பது ஒரே மகன். இவனுக்கு செய்யாமல் வேறு யாருக்கு நான் செய்யப் போகிறேன். இப்படி நான் செய்வதால் என் ஊருக்கு எதுவும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. இப்போதும் கூட நான் வாழ்ந்த கிராமத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய செய்து கொண்டு வருகிறேன்.
பகுத்தறிவு சிந்தனை கொண்ட ஒரு கட்சியுடன் அல்லது அந்த கட்சி பிரமுகர்களுடன் திருமண உறவு ஏற்படுத்தி விட்டதாலயே என்னுடைய முறைகளை நான் மாற்றிக் கொள்ள முடியாது. திருமணம் என்பது இரு வீட்டார் சேர்ந்து செய்வது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பகுத்தறிவாக இருந்தாலும், என்னுடைய கொள்கை என்பது நான் இந்து மதம் சார்ந்த முறைப்படி திருமணம் செய்ய நான் விரும்பினேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை மேலும் நான் துரைமுருகனின் பினாமி அவர் பணத்தில் செய்கிறேன் என்று பலர் பல்வேறு விதமாக ஊடகங்களில் பேசி வருகிறார்கள். இதை நிரூபித்தால் நான் லட்சக்கணக்கில் அவர்களுக்கு பணம் தருகிறேன்.
பினாமியாக இருந்தால் நான் இவ்வளவு தைரியமாக வந்து ஆடியோ லான்ச் கலந்து கொண்டு பேச முடியுமா? சினிமாவில் நான் முதலீடு செய்வது எல்லாமே என்னுடைய சொந்த பணம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த ஆண்டு என் தயாரிப்பில் வெளிவந்த TTT திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனால் இப்பொழுது வடிவேலு, பிரபுதேவா இணைந்து நடிக்கும் பேங்க் பேங்க் திரைப்படத்தை தயாரிக்க உள்ளேன். சிலர் என்னை அரசியல் கட்சி ஆரம்பிக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. ஆனால் யாராவது அழைத்தால் அரசியல் கருத்தில் சேர்ந்து நான் தேர்தலை எதிர்கொள்வேன் என்றும் சொன்னார்.
பொதுவாக ஊடகங்களில் சினிமாக்காரர்கள் அல்லது பிரபலமான அரசியல்வாதிகளின் திருமணம் அல்லது அவர்கள் செய்யும் மற்ற விஷயங்கள் தான் பரபரப்பாக பேசப்படும். ஆனால் முதல் முறை ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியின் முன்னாள் அமைச்சரின் சம்மந்தி பேசிய விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் திரைப்படத்தில் நடித்தவர்கள் தான் அல்லது திரைப்படத்தில் நடித்தவர்கள் பேசிய பேச்சு தான் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருக்கும். இந்த பேங்க் பேங்க் திரைப்படத்திற்கு ஹீரோ பிரபுதேவாவும் வரவில்லை.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் வரவில்லை. ஆனால் இவர்கள் வந்து பேசி இருந்தால் எவ்வளவு பரபரப்பாக ஊடகங்களில் பேசப்படுமோ அதை விட பல மடங்கு அதிகமாக இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசியது ஊடகப் பேசுபவர்களாக உள்ளது. கடைசியாக கண்ணன் ரவி சொன்ன ஒரு விஷயம் மற்ற அனைத்து விஷயங்களை விட பொது மக்களிடையே முக்கிய பேசுபொருளாக உள்ளது.
அதாவது என்னவென்றால், "பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலர் தங்கள் வீட்டு திருமணத்தில் பெரும்பான்மையாக வைதீக முறைப்படி தான் திருமணம் செய்கிறார்கள். எனவே என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை!" என்றார். இதுதான் பேசியது இடையே ஹைலைட்.
வாசகர்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள மிக முக்கியமான விவாதத்தின் சாரம்சத்தைப் புரிந்து கொள்வார்கள்.