கார்த்தி காட்டுல மழைதான்! 4வது முறையாக மகுடம் சூடிய கார்த்தி!

கார்த்தி காட்டுல மழைதான்! 4வது முறையாக மகுடம் சூடிய கார்த்தி!
Updated on

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், தந்தை, மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான் ‘சர்தார்’. இப்படத்தின் வெற்றியின் மூலம் பி.எஸ். மித்ரன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய இயக்குநராகவும் மாறிவிட்டார்.

ஆக்ஷன் படமாக உருவான இத்திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் பி.எஸ்.மித்ரனின் திரைக்கதை நகர்வு படத்திற்கு பக்கபலமாக இருந்தது. எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்விதம் கார்த்தியின் மிரட்டலும், பின்னணி இசையும் அமைந்தது படத்தை மேலும் மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

சமீபத்தில் இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு சொகுசு கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் 'சர்தார்' திரைப்படம் தற்போது 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.

'தீரன்', 'கடைக்குட்டி சிங்கம்', 'கைதி', 'சுல்தான்', 'பொன்னியின் செல்வன்' என குறுகிய காலகட்டத்தில் அதிகமான வெற்றிப் படங்களை கொடுத்துவரும் கார்த்தியின் திரைப்படங்களில், 'தோழா', 'கைதி', 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, 4வது திரைப்படமாக, 'சர்தார்' திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com