விமர்சனம்: லீடர் - 'அண்ணாச்சியின் அட்ரா சிட்டி'

Leader Movie
Leader Movie
Published on
ரேட்டிங்(3 / 5)

'லெஜெண்ட்' சரவணா தயாரிப்பில் சரவணா அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள படம் லீடர். இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா, சாம், VTV கணேஷ் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நம்ம ஹீரோ சரவணா தூத்துகுடி பகுதியில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். அதே ஊரில் சால்ட் என்ற பெயரில் 'பாகுபலி' பிரபாகர் துறைமுகம் வழியாக கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸ் அதிகாரிகளாக இருக்கும் ஆண்ட்ரியா மற்றும் ஷாம் திட்டம் தீட்டுகிறார்கள். இந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. சரவணாவின் மகளை வைத்து ஒரு கடத்தல் நாடகம். போட்டு சரவணணை வைத்து பிரபாகர் செய்யும் அனைத்து சட்டதிற்கு புறம்பான விஷயத்தையும், மீடியா முன் அம்பலப்படுத்துகிறார் ஆண்ட்ரியா. இந்த விஷயம் சரவணனுக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான மோதலாக மாறுகிறது. இந்த மோதல் சரவணன் யார்? தூத்துக்குடிக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்? என்ற விஷயங்களை நோக்கி செல்கிறது.

படத்தின் முதல் பாதி சிறு பிசிறு கூட இல்லாமல் மிக வேகமாக நகர்கிறது. வேகமாக நகரும் காட்சிகள், ஆக்ஷன் பிளாக் என படம் பரபரக்கிறது. குழந்தையை தேடி சரவணன் துறைமுகத்திற்குள் செல்லும் காட்சி நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் இருக்கும் வேகமும், பரபரப்பும் இரண்டாம் பாதியில் சற்று குறைவாக உள்ளது. இருந்தாலும் வில்லன் சந்தோஷ் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட்டால் படம் நிமிர்ந்து விடுகிறது. படம் நகரும் விதம், பரபரக்கும் காட்சிகளும் டைரக்டர் ஹரி இயக்கிய படங்களை நினைவு படுத்துகின்றன.

ஜிப்ரானின் இசை, வெங்கடேஷ் ஒளிப்பதிவு, பிரதீப் எடிட்டிங் இந்த மூன்றும் காட்சிகளை ரசிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த மூன்றில் சபாஷ் போட வைப்பது எடிட்டிங் தான். சரவணா முந்தைய படத்தை விட லீடர் படத்தில் நடிப்பில் சற்றுத் தேறி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
'காளிதாஸ் 2' திரைப்பட விமர்சனம்!
Leader Movie

முகத்தை இறுக்கமாக சற்று சோகம் கலந்த நடிப்பை தந்துள்ளார். ரொமான்ஸ் காட்சியில் சற்று ஹோம் ஒர்க் செய்து இருக்கலாம். ஆண்ட்ரியா கம்பீரமும், கனிவும் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்து சபாஷ் சொல்ல வைக்கிறார். இரண்டு வில்லன்களில் சந்தோஷ் மட்டுமே மிரட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் லீடர் அனைவரும் ரசிக்கும் பொழுது போக்கு படமாக வந்துள்ளது.

லீடர் - 'அண்ணாசியின் (சரவணா) அட்ரா சிட்டி'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com