இந்தி ரீமேக்கில் லவ் டுடே!

பாலிவுட் பூமராங்
இந்தி ரீமேக்கில் லவ் டுடே!
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

மிழில் வெற்றிபெற்ற படமான லவ் டுடே இந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. கதையைக் கேட்டதும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகன் ஜீனைத்தும், நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் ஒகே சொல்லிவிட்டனர். அந்த அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் – இவானா கதாபாத்திரங்கள் பிடித்துப்போயுள்ளன.

லவ் டுடே படத்தில், காதலர்கள் தங்கள் செல்போனை ஒரு நாள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகும் அவர்கள் காதல் நிலைத்திருந்தால் திருமணம் என இவானாவின் தந்தையாக நடித்த சத்யராஜ் கூறுவார். இப்படம் பார்த்த பலர் வீடுகளில் ரகளையோ ரகளை. இப்போது இந்தி ரீமேக் செய்து வட இந்தியாவிலும் ஒரு ரவுண்டு ரகளை செய்யப்போகிறார்கள்.

அமீர்கான் மகன் மகன் ஜீனைத் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூருக்கும் இது இரண்டாவது படமாகும்.

ஜோயா அக்தரின் ’ஆர்ச்சிஸ்' படம் மூலம் குஷி கபூர் மட்டுமல்ல, ஷாருக்கானின் மகள் சுஹானா, அமிதாபச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோரும் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 (சினிமா தலைமுறை வளரட்டும்)

logo
Kalki Online
kalkionline.com